பட்ஜெட் 2025-2026 தொகுப்பு - தமிழில் - நிதி அமைச்சகம் வெளியீடு
Budget 2025-2026 Compendium - In Tamil - Released by Ministry of Finance
Posted On: 01 FEB 2025 1:31PM by PIB Chennai
>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
சராசரி மாத வருவாய் ரூ.1 லட்சம் வரை வருமான வரி இல்லை; இதனால் நடுத்தர வகுப்பினரின் வீட்டு சேமிப்பு மற்றும் நுகர்வை அதிகரிக்கும்
புதிய வரித் தொகுப்பில் மாத ஊதியம் பெறும் பிரிவினர் ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
வளர்ச்சியின் 4 எஞ்சின்களை மத்திய பட்ஜெட் அங்கீகரிக்கிறது-வேளாண்மை, எம்எஸ்எம்இ, முதலீடு, ஏற்றுமதி.
குறைந்த அளவு வேளாண் உற்பத்தித் திறன் உள்ள 100 மாவட்டங்களை உள்ளடக்கிய ‘பிரதமரின் தன்-தானிய வேளாண் திட்டத்தில்’ 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மைசூர் பருப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும் “பருப்பு வகைகளில் தற்சார்புக்கான இயக்கம்” தொடங்கப்படும்.
திருத்தியமைக்கப்பட்ட வட்டி மானிய திட்டத்தின்கீழ் கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
நிதிப் பற்றாக்குறையை 4.8 சதவீதம் என்பதுடன் நிறைவு செய்ய நிதியாண்டு 2025 மதிப்பிட்டுள்ளது, நிதியாண்டு 2026-ல் இதனை 4.4 சதவீதத்திற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்எஸ்எம்இ-களுக்கு உத்தரவாதத்துடனான கடன் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவில் தயாரியுங்கள் (மேக் இன் இந்தியா”) திட்டத்தை மேலும் விரிவாக்க சிறு, நடுத்தர, பெருந்தொழில்களையும் உள்ளடக்கிய தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 50,000 அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.
மொத்தம் ரூ.500 கோடி முதலீட்டுடன் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்.
வங்கிகள் மூலம் பிரதமரின் ஸ்வநிதி விரிவாக்கம், ரூ.30,000 வரம்புடன் யுபிஐ-யுடன் இணைக்கப்பட்ட கடன் அட்டைகள்.
செயலி (கிக்) பணியாளர்கள் அடையாள அட்டை பெறுவார்கள், இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்து கொள்ளலாம். பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறலாம்.
வளர்ச்சி மையங்களாக நகரங்கள் என்ற திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடியில் நகர்ப்புற சவால் நிதியம்.
ரூ.20,000 கோடி முதலீட்டுடன் சிறிய வகை ஈனுலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அணுசக்தி இயக்கம்.
120 புதிய இடங்களுக்கான இணைப்பை விரிவுப்படுத்த திருத்தியமைக்கப்பட்ட உடான் திட்டம்.
மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுமானத்தை வேகப்படுத்த ரூ.15,000 கோடியில் ஸ்வாமிக் (குறைந்த செலவில் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதிக்கு சிறப்பு சாளரம்) நிதியம் அமைக்கப்படவுள்ளது.
தனியார் துறை மூலமான ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
1 கோடிக்கும் அதிகமான மூலப்பிரதிகளை(கையெழுத்துப்பிரதிகள்) உள்ளடக்கி மூலப்பிரதிகளை கணக்கிடவும், பாதுகாக்கவும் ஞான பாரத இயக்கம்.
காப்பீட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பு.
பல்வேறு சட்டங்களில் உள்ள 100-க்கும் அதிகமான பிரிவுகளை குற்றமற்றதாக மாற்றுவதற்கு மக்கள் விஸ்வாச மசோதா 2.0 அறிமுகம் செய்யப்படும்.
புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான காலவரம்பு 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக அதிகரிப்பு.
வருவாயில் வரி பிடித்தம் செய்து செலுத்துவதில் கால தாமதம் குற்றமற்றதாக மாற்றப்பட்டுள்ளது.
வாடகை வருவாயில் வரிப்பிடித்தம் ரூ.2.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக அதிகரிப்பு.
புற்றுநோய், அரிய மற்றும் நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான 36 உயிர்காக்கும் மருந்துகள், மருந்துப் பொருட்களுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஐஎஃப்பிடி-க்கான(தட்டையான காட்சித் திரை) அடிப்படை சுங்கத் தீர்வை 20 சதவீதமாக அதிகரிப்பு, ஓபன் செல்களுக்கான(டிவியின் உட்கூறு) அடிப்படை சுங்கத்தீர்வை 5 சதவீதமாக குறைப்பு.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ஓபன் செல் பகுதிகள் மீதான அடிப்படை சுங்கத்தீர்வை விலக்கு.
மின்கல உற்பத்தி, மின்சார வாகனங்களுக்கு கூடுதலான மூலதனப் பொருட்கள், செல்பேசிகளுக்கான பேட்டரி தயாரிப்பு ஆகியவற்றை அதிகரிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டுமானத்திற்கான கச்சாப்பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு.
குளிர்ப்பதனம் செய்யப்பட்ட மீன்பசை மீதான அடிப்படை சுங்கத்தீர்வை 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், பதப்படுத்தப்பட்ட மீன் மீதான அடிப்படை சுங்கத் தீர்வை 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2025-26-ஐ இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையின் தொகுப்பு வருமாறு:
பகுதி ஏ
‘ஒருநாடு என்பது வெறுமனே அதன் நிலம் அல்ல; ஒரு நாடு என்பது அதன் மக்கள்’ என்ற தெலுங்கு கவிஞரும் நாடகவியலாளருமான திரு குரஜாட அப்பாராவின் புகழ்பெற்ற மேற்கோளுடன் நிதியமைச்சர் மத்திய பட்ஜெட் 2025-26-ஐ தாக்கல் செய்தார். அனைத்து பிராந்தியங்களின் சமச்சீரான வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் “அனைவரும் உயர்வோம்” என்பது அதன் மையப்பொருளாகும்.
இந்த மையப்பொருள் அடிப்படையில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் பரந்த கோட்பாடுகளை கீழ்காணும் அம்சங்களை உள்ளடக்கி நிதியமைச்சர் உரையில் எடுத்துரைத்தார்.
வறுமை ஒழிப்பு;
100 சதவீத நல்ல தரமான பள்ளிக் கல்வி;
உயர்தர, குறைந்த செலவிலான, விரிவான சுகாதார கவனிப்பு பெறுதல்;
பொருத்தமான வேலைவாய்ப்புடன் 100 சதவீத திறன் பெற்ற தொழிலாளர்கள்;
பொருளாதார செயல்பாடுகளில் 70 சதவீத பெண்கள்;
உலகின் உணவுக்கூடமாக நமது நாட்டை உருவாக்கும் விவசாயிகள்;
வளர்ச்சியை அதிகரித்தல், அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டை உறுதி செய்தல், தனியார் துறை முதலீட்டை ஊக்கப்படுத்துதல், வீட்டு உபயோக உணர்வுகளை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரின் செலவிடும் சக்தியை அதிகரித்தல் என்பதற்கான அரசின் முயற்சிகள் தொடரும் என்பதை மத்திய பட்ஜெட் 2025-26 உறுதி செய்துள்ளது. ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.
வரி விதிப்பு, மின்சாரத் துறை, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித்துறை, இந்தியாவின் வளர்ச்சித் திறனையும், உலகளாவிய போட்டித்தன்மையையும் உள்ளடக்க ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் ஆகிய மாற்றத்திற்கான முன்முயற்சிகளை இந்த பட்ஜெட் நோக்கமாக கொண்டுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய உணர்வின் வழிகாட்டுதலுடன் சீர்திருத்தங்களை அதன் எரிசக்தியாக பயன்படுத்தி வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பயணத்திற்கு வேளாண்மை, எம்எஸ்எம்இ, முதலீடு, ஏற்றுமதி ஆகியவற்றை இயந்திரங்களாக மத்திய பட்ஜெட் எடுத்துரைக்கிறது.
முதலாவது என்ஜின்: வேளாண்மை
பல வகையான பயிர்கள் சாகுபடி, அறுவடைக்குப் பிந்தைய இருப்பை அதிகரித்தல், பாசன வசதிகளை மேம்படுத்துதல், நீண்டகால மற்றும் குறுகிய கால கடன் வசதி ஆகியவற்றின் மூலம் 100 மாவட்டங்களில் உற்பத்தித் திறனை அதிகரிக்க மாநிலங்களுடனான கூட்டாண்மையில் பிரதமரின் தன்-தானிய வேளாண் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திறன் வழங்குதல், முதலீடு, தொழில்நுட்பம், ஊரகப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் வேளாண் துறையில் குறைந்து வரும் வேலைவாய்ப்பை சரி செய்ய மாநிலங்களுடன் இணைந்து ஊரக வளம் மற்றும் உறுதிமிக்க விரிவான பல்துறைத் திட்டம் தொடங்கப்படும். கிராமப்புற பெண்கள், இளம் விவசாயிகள், ஊரக இளைஞர்கள், விளிம்பு நிலை மற்றும் சிறு விவசாயிகள், நிலமற்ற குடும்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி ஊரகப் பகுதிகளில் வாய்ப்புகளை உருவாக்குவது இதன் இலக்காகும்.
துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, மைசூர் பருப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி ஆறாண்டுகாலத்திற்கு பருப்பு வகைகளில் தற்சார்பு இந்தியா இயக்கத்தை அரசு தொடங்கும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். அடுத்த நான்காண்டுகளுக்கு தேவைப்படும் அளவுக்கு இந்த 3 பருப்பு வகைகளையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய மத்திய முகமைகள் (நேஃபெட், என்சிசிஎஃப்) தயாராக இருக்கும்.
வேளாண்மை மற்றும் அதுசார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விரிவான திட்டம், உயர் விளைச்சல் தரும் விதைகளுக்கான தேசிய இயக்கம், பருத்தி உற்பத்தித்திறனுக்கான ஐந்தாண்டுகால இயக்கம் போன்றவற்றுக்கான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
திருத்தியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் கிசான் கடன் அட்டை மூலம் பெறப்படும் கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று திருமதி சீதாராமன் அறிவித்தார்.
இரண்டாவது என்ஜின்: எம்எஸ்எம்இகள்
நமது ஏற்றுமதியில் 45 சதவீதத்தை உள்ளடக்கி இருக்கும் எம்எஸ்எம்இ-களை வளர்ச்சியின் இரண்டாவது ஆற்றல்மிக்க என்ஜின் என்று நிதியமைச்சர் வர்ணித்தார். எம்எஸ்எம்இ-கள் உயர்திறன்களை அடைவதற்கு உதவி செய்யும் வகையில், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சிறந்த மூலதன அணுகல் ஆகியவை 2.5 மடங்கும், எம்எஸ்எம்இ-களின் வகைப்படுத்தலுக்கான முதலீடு மற்றும் வருடாந்திர வருவாய் வரம்பு ஆகியவை 2 மடங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரவாதத்துடன் கடன் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
5 லட்சம் பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினரில் முதன்முறை தொழில் முனைவோருக்கும் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். இதற்கு அடுத்த ஐந்தாண்டு காலத்தில் ரூ.2 கோடி வரை காலமுறைக் கடன் வழங்கப்படும்.
மேட் இன் இந்தியா என்ற முத்திரையை பொறித்துள்ள விளையாட்டு பொம்மைகளின் உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்கும் திட்டம் ஒன்றை அரசு அமல்படுத்தும் என்றும் திருமதி சீதாராமன் அறிவித்தார். மேக் இன் இந்தியா திட்டத்தை விரிவுப்படுத்த சிறு, நடுத்தர, பெருந்தொழில்களை உள்ளடக்கிய தேசிய உற்பத்தி இயக்கத்தை அரசு தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
மூன்றாவது என்ஜின்: முதலீடு
வளர்ச்சியின் மூன்றாவது என்ஜினாக முதலீட்டை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் மக்கள், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பில் முதலீட்டிற்கு முன்னுரிமை அளித்தார்.
மக்களுக்கான முதலீடு திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 50,000 அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
பாரத் நெட் திட்டத்தின்கீழ், ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்கப்படும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பள்ளி மற்றும் உயர்கல்விக்கான டிஜிட்டல் வடிவ இந்திய மொழி நூல்கள் கிடைக்கச் செய்வதற்கான பாரதிய மொழி நூல் திட்டம் அமலாக்கப்படும் என்று அவர் கூறினார்.
“இந்தியாவுக்காக உற்பத்தி, உலகுக்கான உற்பத்தி” என்பதற்கு தேவைப்படும் திறன்களுடன் நமது இளைஞர்களை தயார்படுத்துவதற்கு உலகளாவிய நிபுணத்துவம் மற்றும் கூட்டாண்மையுடன் திறன் வளர்ப்புக்கான 5 தேசிய மேன்மை மையங்கள் அமைக்கப்படும்.
மொத்தம் ரூ.500 கோடி ஒதுக்கீட்டுடன் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மேன்மை மையம் அமைக்கப்படும்.
செயலி (கிக்) பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள், இ-ஷ்ரம் போர்ட்டலில் அவர்களின் பதிவு, பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்கீழ் சிகிச்சை ஆகியவற்றுக்கு அரசு ஏற்பாடு செய்யும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் முதலீடு என்ற திட்டத்தின்கீழ், அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான அமைச்சகங்கள், அரசு, தனியார் கூட்டாண்மையில் 3 ஆண்டுகால திட்டங்களை செயல்படுத்தும் என்று திருமதி சீதாராமன் கூறியுள்ளார்.
மூலதன செலவு மற்றும் சீர்திருத்தங்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டத்திற்கு மாநிலங்களுக்கு 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் முன்மொழிவுக்கு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
புதிய திட்டங்களில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு லாபத்தை முதலீடாக்க சொத்தினை பணமாக்கும் இரண்டாவது திட்டம் 2025-30-யும் அவர் அறிவித்தார்.
“மக்கள் பங்கேற்பு” மூலம் கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் தரமான கட்டமைப்பில் கவனம் செலுத்த ஜல் ஜீவன் இயக்கம் 2028 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
‘வளர்ச்சி மையங்களாக நகரங்கள்’, ‘நகரங்களின் மறுமேம்பாடு’, ‘தண்ணீர் மற்றும் துப்புரவு’ ஆகிய முன்மொழிவுகளை அமலாக்க ரூ.1 லட்சம் கோடியில் நகர்ப்புற சவால் நிதியத்தை அரசு அமைக்கவுள்ளது.
புதிய கண்டுபிடிப்பில் முதலீடு என்பதன் கீழ், தனியார் துறையால் இயக்கப்படும் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு முன்முயற்சியை செயல்படுத்த ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற திட்டமிடலுக்கு பயனளிக்கும் வகையில் அடிப்படை புவிபரப்பு கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தரவுக்காக தேசிய புவிபரப்பு இயக்கத்தை நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், தனியார் சேகரிப்பாளர்கள் ஆகியோரிடம் உள்ள 1 கோடிக்கும் அதிகமான மூலப்பிரதிகள் கணக்கெடுப்பு, ஆவணப்படுத்துதல், பாதுகாப்புக்காக ஞான பாரத இயக்கத்தை பட்ஜெட் முன்வைத்துள்ளது. அறிவுப் பகிர்வுக்கான இந்திய அறிவு முறையின் தேசிய டிஜிட்டல் களஞ்சியமும் முன்மொழியப்பட்டுள்ளது.
நான்காவது என்ஜின்: ஏற்றுமதி
வளர்ச்சியின் நான்காவது என்ஜினாக ஏற்றுமதியை குறிப்பிட்ட திருமதி சீதாராமன், இது வர்த்தகம், எம்எஸ்எம்இ, நிதி ஆகிய அமைச்சகங்களால் கூட்டாக இயக்கப்படுகிறது. ஏற்றுமதி சந்தையை கண்டறிய எம்எஸ்எம்இ-களுக்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கம் உதவும். வர்த்தக ஆவணப்படுத்துதல் மற்றும் நிதித் தீர்வுகளுக்கு ஒருங்கிணைந்த தளமாக டிஜிட்டல் பொது கட்டமைப்பான பாரத்ட்ரேட்நெட் (BTN) என்ற சர்வதேச வர்த்தக கட்டமைப்பு பற்றியும் அவர் அறிவிப்பு செய்தார்.
உலகளாவிய வழங்கல் தொடருடன் நமது பொருளாதாரத்தை ஒருங்கிணைக்க உள்நாட்டு உற்பத்தித் திறன்கள் மேம்பாட்டிற்கு உதவி செய்யப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார். தொழில்துறை 4.0 தொடர்பான வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக உள்நாட்டு மின்னணு சாதன தொழில்துறைக்கு அரசு உதவும் என்றும் அவர் அறிவித்தார். உருவாகி வரும் இரண்டாம் நிலை நகரங்களில் உலகளாவிய திறன் மையங்களை ஊக்குவிப்பதற்கான தேசிய கட்டமைப்பும் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதிக மதிப்புள்ள அழுகும் தோட்டக்கலை பொருட்கள் உள்ளிட்ட விமான சரக்குகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் கிடங்கு வசதியை மேம்படுத்த அரசு உதவி செய்யும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜினுக்கு எரிசக்தியாக சீர்திருத்தங்களை முன்வைத்த திருமதி சீதாராமன், கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. முகம் தெரியாத மதிப்பீடு, வரி செலுத்துவோர் சாசனம், விரைவான கணக்கு தாக்கல் போன்ற வரி செலுத்துவோருக்கான வசதிகள், குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுத்தல் ஆகியவை சீர்திருத்தங்களில் அடங்கும். சுமார் 99 சதவீத வருமான வரிக் கணக்கு தாக்கல்கள் சுயமதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளைத் தொடர்ந்து, “நம்பிக்கை முதலில், ஆய்வு பின்னர்” என்பதில் வரித்துறையின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
நிதித்துறை சீர்திருத்தங்களும் - வளர்ச்சியும்
வணிகம் செய்வதை எளிதாக்குவதை நோக்கி அரசின் வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய மத்திய நிதியமைச்சர், இணக்கத்தை எளிதாக்கவும், சேவைகளை விரிவாக்கவும், வலுவான முறைப்படுத்தல் சூழலை கட்டமைக்கவும், சர்வதேச உள்நாட்டு முதலீட்டை ஊக்கப்படுத்தவும், மிகப்பழமையான சட்ட அம்சங்களின் குற்றச் செயல்களை நீக்கவும், இந்திய பொருளாதார பரப்பில் பல்வேறு விரிவான மாற்றங்களை முன்மொழிந்துள்ளார்.
இந்தியாவில் ஒட்டுமொத்த பிரிமியத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு காப்பீட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.
உற்பத்தித் திறனையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்க கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஒழுங்குமுறை கட்டமைப்பை திருமதி சீதாராமன் முன்மொழிந்துள்ளார். 21 ஆம் நூற்றாண்டுக்கான நவீன, நெகிழ்வான, மக்களுக்கு ஏற்புடைய, நம்பிக்கை அடிப்படையிலான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கு நான்கு முக்கிய நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார்.
ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான உயர்நிலைக் குழு
அனைத்து நிதி சாரா துறையின் முறைப்படுத்தல்கள், சான்றளித்தல், உரிமங்கள், அனுமதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கு
வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு, குறிப்பாக ஆய்வு செய்தல் மற்றும் இணக்க விஷயங்களில் மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான பொருளாதார நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு
ஓராண்டுக்குள் பரிந்துரைகளை அளிப்பதற்கு
இதில் இணைவதற்கு மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்
Ii. மாநிலங்களின் முதலீட்டு நட்புக்குறியீடு
போட்டித் தன்மையுள்ள ஒத்துழைப்பு கூட்டமைப்பு உணர்வை அதிகரிக்க மாநிலங்களின் முதலீட்டு நட்புக்குறியீடு 2025-ல் தொடங்கப்படும்
Iii. நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் கவுன்சிலின் கீழான நடைமுறை
நடைமுறையில் உள்ள நிதி முறைப்படுத்தல்கள் மற்றும் துணை அறிவுறுத்தல்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான நடைமுறை
இவற்றின் பொறுப்புத்தன்மை மற்றும் நிதித்துறையின் மேம்பாட்டை விரிவாக்குவதற்கு கட்டமைப்பை உருவாக்குதல்
iv. மக்கள் விஸ்வாச மசோதா 2.0
பல்வேறு சட்டங்களில் உள்ள நூற்றுக்கும் அதிகமான பிரிவுகளை குற்ற நடவடிக்கைகளில் இருந்து நீக்குதல்
நிதி நிலைத்தன்மை
நிதி நிலைத்தன்மை குறித்த உறுதிப்பாட்டை வலியுறுத்திய மத்திய நிதியமைச்சர், உள்நாட்டு மொத்த உற்பத்தி சதவீதம் மற்றும் அடுத்த ஆறாண்டுகளுக்கான விரிவான திட்டங்களை நிதி பொறுப்புத்தன்மை மற்றும் பட்ஜெட் நிர்வாக அறிக்கை முன்வைத்துள்ள நிலையில் மத்திய அரசின் கடன் பொறுப்பு குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க அரசு முயற்சி செய்து வருகிறது என்று அவர் கூறினார். 2025-26 பட்ஜெட் மதிப்பீடுகளில் நிதிப்பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் 2024-25 திருத்திய மதிப்பீட்டில் நிதிப்பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.8 சதவீதமாக இருந்தது என்று திருமதி சீதாராமன் தெரிவித்தார்.
திருத்திய மதிப்பீடுகள் 2024-25
கடன்கள் தவிர மொத்த வருவாயின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.31.47 லட்சம் கோடி என்றும், இதில் மொத்த வரி வருவாய் ரூ.25.57 லட்சம் கோடி என்றும் அமைச்சர் தெரிவித்தார். திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மொத்த செலவு ரூ.47.16 லட்சம் கோடி என்றும், இதில் மூலதன செலவு, ரூ.10.18 லட்சம் கோடி என்றும் அவர் கூறினார்.
பட்ஜெட் மதிப்பீடுகள் 2025-26
நிதியாண்டு 2025-26 -க்கு கடன்கள் தவிர்த்த மொத்த வருவாய் ரூ.34.96 லட்சம் கோடி என்றும், மொத்த செலவு ரூ.50.65 லட்சம் கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார். மொத்த வரி வருவாய் ரூ.28.37 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தேச நிர்மாணத்தில் நடுத்தர வர்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு புதிய வருமான வரி படி நிலைகள் மத்திய பட்ஜெட் 2025-26-ல் முன்மொழியப்பட்டுள்ளன. இதன்படி, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு அதாவது சராசரி மாதம் ரூ. 1 லட்சம் வரையிலான வருவாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. நிரந்தர பிடித்தம் ரூ.75,000 என்பதால் மாத வருவாய் ஈட்டுவோர் ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. புதிய வரி விதிப்பு கட்டமைப்பு மற்றும் இதர நேர் முகவரி ஆலோசனை காரணமாக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
பிரதமர் திரு நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி, மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் தனிநபர் வருமான வரி சீர்திருத்தம், டிடிஎஸ்/டிசிஎஸ் சீர்திருத்தம், இணக்கச் சுமையை குறைக்கும் வகையில், தன்னார்வ இணக்கங்களுக்கு ஊக்கம், வணிகத்தை எளிதாக்குதல், வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டிற்கு ஊக்கமளித்தல் உள்ளிட்ட நேர்முக வரி ஆலோசனைகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
ஆண்டுக்கு மொத்த வருவாய்
வரி விகிதம்
ரூ.0-4 லட்சம்
வரி இல்லை
ரூ.4-8 லட்சம்
5%
ரூ.8-12 லட்சம்
10%
ரூ.12-16 லட்சம்
15%
ரூ.16-20 லட்சம்
20%
ரூ.20-24 லட்சம்
25%
ரூ.24 லட்சத்திற்கு மேல்
30%
டிடிஎஸ்/டிசிஎஸ் சீர்திருத்தத்திற்கு, மூத்த குடிமக்கள் வட்டி மூலம் பெறும் வருவாய்க்கான வரி குறைப்பு வரம்பு தற்போதுள்ள ரூ.50,000 என்பதிலிருந்து ரூ. 1,00,000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கான டிடிஎஸ் ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் என்பதிலிருந்து ரூ.6 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் வசூலுக்கான வருவாய் வரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ், டிசிஎஸ் பிடித்தத்தை தாமதமாக செலுத்துவது தற்போது குற்றச்செயல்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிப்பதற்காக எந்த மதிப்பீட்டு ஆண்டாக இருப்பினும் புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான கால வரம்பு தற்போதுள்ள இரண்டாண்டுகளில் இருந்து நான்காண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்களின் வருவாயை புதுப்பிப்பதற்கு 90 லட்சத்திற்கும் அதிகமான வருமான வரி செலுத்துவோர் கூடுதல் வரியை செலுத்தியுள்ளனர். இணக்க சுமையை குறைப்பதற்காக சிறிய அறக்கட்டளைகள் / நிறுவனங்கள் பயனடையும் வகையில் பதிவுக்கான கால வரம்பு ஐந்தாண்டிலிருந்து 10 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 33,000 வரி செலுத்துவோர் இந்த திட்டத்தின் மூலம் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். மூத்த மற்றும் மிகவும் மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில், 2024 ஆகஸ்ட் 29 அன்று அல்லது அதற்குப்பின் தேசிய சேமிப்புத் திட்டக் கணக்குகளில் இருந்து திரும்பப்பெறும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. என்பிஎஸ் வத்சல்யா கணக்குகளும் இதேபோன்ற பயன்களை பெறுகின்றன.
புத்தொழில் சூழலை ஊக்கப்படுத்த ஒருங்கிணைப்புக்கான கால வரம்பு ஐந்தாண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்புத் துறையில் முதலீட்டை ஊக்குவிக்க தங்க சொத்து நிதியம் மற்றும் ஓய்வூதிய நிதியங்களில் முதலீடு செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு அதாவது 2030 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்கள் இறக்குமதிக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புற்றுநோய், அரிய வகை நோய்கள், நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் 36 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து முழுமையாக விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயாளி உதவி திட்டங்களின் கீழ் நோயாளிகளுக்கு விலையின்றி வழங்கப்படுமானால், 13 புதிய மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் 37 மருந்துகளுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோபால்ட் தூள் மற்றும் கழிவு, லித்தியம் பேட்டரி கழிவு, ஈயம், துத்தநாகம் மற்றும் 12 முக்கிய தாதுப் பொருட்களுக்கு 2025-26 பட்ஜெட்டில் அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. உள்நாட்டு ஜவுளி உற்பத்தியை ஊக்கப்படுத்த குறுக்காக ஓடும் நாடா இல்லாத தறிவகைகளில் மேலும் இரண்டுக்கு முழு விலக்கு அளிக்கப்படுகிறது. ஓபன் செல்களுக்கான (டிவியின் உட்கூறு) அடிப்படை சுங்கத்தீர்வை 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ஓபன் செல் பகுதிகள் மீதான அடிப்படை சுங்கத்தீர்வை விலக்கு அளிக்கப்படுகிறது.
மின்கல உற்பத்தி, மின்சார வாகனங்களுக்கு கூடுதலான மூலதனப் பொருட்கள், செல்பேசிகளுக்கான பேட்டரி தயாரிப்பு ஆகியவற்றை அதிகரிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டுமானத்திற்கான கச்சாப்பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குளிர்ப்பதனம் செய்யப்பட்ட மீன்பசை மீதான அடிப்படை சுங்கத்தீர்வை 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், பதப்படுத்தப்பட்ட மீன் மீதான அடிப்படை சுங்கத் தீர்வை 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம், மக்கள் தொகை மற்றும் மக்களின் தேவை ஆகியவை வளர்ச்சியடைந்த இந்தியா பயணத்தின் முக்கிய தூண்களாகும் என்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு நடுத்தர வர்க்கத்தினர் வலுவூட்டுவதாக கூறிய அவர், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வரியில்லா வருவாய் அளவை அரசு அவ்வப்போது அதிகரித்து வருகிறது என்றார். தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய வரி கட்டமைப்பு நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் கூடுதல் பணத்தை தருவதால், நுகர்வு, சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை அதிகப்படுத்தும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
>>> முழுமையான பட்ஜெட் உரை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
(Google Translate மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. உறுதியான தகவல்களுக்கு ஆங்கிலப் பதிப்பு பார்க்கவும் )