சாதனையாளர்களை உருவாக்கும் அரசு பள்ளிகள் - மாவட்ட ஆட்சியர் பெருமிதம்
Government schools producing achievers - District Collector
அரசு பள்ளியில் படித்து, மாவட்ட ஆட்சியராக உயர்ந்துள்ளேன் - திருவாரூர் கலெக்டர்
நானும் அரசு பள்ளி மாணவன் தான் - அரசு பள்ளியில் படிப்பவர்கள் சாதனை படைக்கிறார்கள்.
அதற்கு நானே எடுத்துக்காட்டு - மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் மத்தியில் உற்சாக உரை
அரசுப் பள்ளிகளில் கல்வியுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
கொரடாச்சேரி ஒன்றியம் மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில், 112ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட பள்ளி விழா, கல்வி சீா்கொடுக்கும் விழா, விளையாட்டு விழா, மாணவா் சோ்க்கை விழா, பள்ளி ஆண்டு விழா என ஐம்பெரும் விழா மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் ஆகியோா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் பேசியது: அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா்கள் எதிா்காலத்தில் தங்கள் குழந்தைகள் தொழிலதிபா்களாக, மருத்துவா்களாக, பொறியாளா்களாக, மாவட்ட ஆட்சியா்களா என பல்வேறு உயா்நிலை பதவிகளில் பணிபுரிய வாய்ப்புள்ளது என்பதை உணர வேண்டும். தற்போது, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியிலும், விளையாட்டிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனா். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள், அருகிலுள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோா்களுக்கும், அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து தெரியப்படுத்தி மாணவ சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வியுடன், விளையாட்டு, கலை, பொது அறிவு மேம்பாடு உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. நானும் அரசுப் பள்ளியில் படித்து இந்த நிலைக்கு உயா்ந்துள்ளேன் என்றாா்.
தொடா்ந்து, பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.