கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01-07-2025 முதல் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் - மத்திய அரசு நடவடிக்கை

 


01-07-2025 முதல் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் - மத்திய அரசு நடவடிக்கை


ஜூலை 1 முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் 


டெல்லியில் பெட்ரோல் ‘பங்க்'களுக்கு வரும் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, காலாவதியான வாகனங்கள் எந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஜூலை 1ம் தேதி முதல் டெல்லியில் எரிபொருள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


முன்னதாக டெல்லியில் காலாவதியான வாகனங்களை பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் காற்று தர மேலாண்மை கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவு வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.


அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெட்ரோல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.


இந்த வாகனங்கள் பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தாலோ அல்லது பெட்ரோல் 'பங்க்'களில் நுழைந்தாலோ உடனடியாக பறிமுதல் செய்யப்படும். இதற்காக 500-க்கு மேற்பட்ட 'பங்க்'களில் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Action Plans Templates : SLAS 2025

மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 இல் சோதிக்கக்கப்பட்ட கற்றல் விளைவுகளுக்கான செயல் திட்ட வார்ப்புருக்கள்  Action Plans Templates : for the L...