பணி நிறைவு பெற்ற அனைவருக்கும் உரிய செய்தி
பணி நிறைவுக்கு பின்னர் பெறும் பணபயன்களில் UEL PA (அரை சம்பளவிடுப்பு) மேற்கண்ட லீவை 6 மாதங்கள் எடுத்து கொள்ள இயலும்!! எடுக்காமல் இருப்பின் 3 மாதங்களுக்கு உரிய பணப்பயன் பெற்று கொள்ள இயலும்! 3 மாதங்களுக்கு பணபயன் பெறும் போது 10% IT மற்றும் Cess பிடித்தம் செய்திடுவார்கள்!! இந்த ஆண்டு வருமானவரியில் மாற்றம் செய்து இருப்பதால் மொத்த வருமானம் 12,75,000/- முடிய வரி செலுத்த வேண்டியது இல்லை!! Un Earned Leave on Personal Affairs பில் தயார் செய்வதற்கு முன்னர் 2025-2026 ஆம் ஆண்டுக்கு உரிய வருமானவரியை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தாங்கள் மார்ச் 2025 க்கு பின் பெற்ற ஊதியம் மற்றும் பிற படிகள், ஓய்வூதியம் பிற படிகள் & UEL PA பெறும் தொகை ஆகியவற்றைபிப்ரவரி 2026 முடிய கணக்கிட்டு அதற்கு வரி வரவில்லை எனில் IT & Cess பிடித்தம் செய்திட வேண்டியது இல்லை!! பில்லுடன் வருமானவரி படிவம் இணைத்து கொடுக்க வேண்டும்!! வரி வந்தால் அவசியம் IT &Cess பிடித்தம் செய்திட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.