கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETOJAC சார்பில் August 22ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்

 


டிட்டோஜாக் சார்பில் ஆகஸ்ட் 22ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்


இன்று நடைபெற்ற  கூட்டத்தில், நடைபெற்ற முடிந்த மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் வலுவான  போராட்டத்தை நடத்தும் வகையில், அதற்கான கால அவகாசத்தை அதிகரித்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி (22.08.25) சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வட்டார அளவிலான, மாவட்ட அளவிலான ஆயத்தக் கூட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹🌹ஊடகச்செய்தி

**********************

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி


ஆகஸ்டு 22ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம்


டிட்டோஜாக் மாநிலப்பொதுக்குழு முடிவு!

**********************

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (23.07.2025) காலை சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளருமான ச.மயில் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் சார்பில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களான ரெ.ஈவேரா, கே.பி.ரக்ஷித், அ.வின்சென்ட் பால்ராஜ், இரா.தாஸ், சி.சேகர், இல.தியோடர் ராபின்சன், நா.சண்முகநாதன், சு.குணசேகரன், கோ.காமராஜ், சி.ஜெகநாதன், டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர்.


பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 17.07.2025 மற்றும் 18.07.2025 ஆகிய தேதிகளில் பேரெழுச்சியுடன் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற தொடர் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு டிட்டோஜாக் மாநில அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்றுதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பைப் பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்தல், தமிழ்நாடு முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு முரணாக விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைத் தடைகளை நீக்குதல், மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்புதல், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு  தொடர்பான வழக்கை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து காலியாக உள்ள 6000க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவி உயர்வுப் பணியிடங்களை நிரப்புதல், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் கடந்த ஜூலை 17, 18 தேதிகளில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்று தமிழ்நாடு அரசுக்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆனாலும், தமிழ்நாடு அரசு டிட்டோஜாக் பேரமைப்பின் போராட்டங்களையும், கோரிக்கைகளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

எனவே, டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் அடுத்த கட்டப் போராட்ட நடவடிக்கையாக பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 22.08.2025 அன்று சென்னையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அணிதிரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. 

**********************

இப்படிக்கு

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (25.07.2025) நடைபெற உள்ள SMC கூட்டத்திற்கான கூடுதல் கூட்டப்பொருள் - SPD Proceedings

இன்று (25.07.2025) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கான கூடுதல் கூட்டப்பொருள் - மாநிலத் திட்ட இயக்குநரின் SPD செயல்முறைகள் >...