கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி : வனத்துறை சிறப்பு ஏற்பாடு

 பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி : வனத்துறை சிறப்பு ஏற்பாடு



கேரள வனத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பள்ளி வளாகங்களில் பாம்புகளை கண்டால், ஆசிரியர்களே உடனடியாகப் பிடித்துவிட முடியும். பாலக்காடு மாவட்டத்தில் இந்த திட்டம் வெற்றியடைந்தால், பிற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும். 

கேரள வனத்துறை, பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்ததன் காரணம், பள்ளி வளாகங்களிலோ அல்லது வகுப்பறைகளிலோ பாம்புகள் தென்பட்டால், சர்ப்பா டீம் வரும்வரை காத்திருக்காமல், ஆசிரியர்களே உடனடியாக அவற்றைப் பிடிக்க முடியும். இதனால், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கலாம். இந்த பயிற்சி பாலக்காடு மாவட்டத்தில் முதலில் தொடங்கப்படும். அங்கு வெற்றி பெற்றால், பிற மாவட்டங்களிலும் இந்த பயிற்சி விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கேரள மாநிலத்தில் மலைகள் ஆறுகள் வனப்பகுதி ஆகியவைகளை இயற்கையாகவே பராமரிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது அரசு. மக்களும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதுகக்கும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். அதேசமயம் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதால் பிரச்னைகள் வருகிறது. அதுமட்டுமல்லாது பாம்புகளும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகளில் செல்வது என அவ்வப்போது வன உயிரினங்களால் தொல்லைகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. பாம்பு பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் சர்ப்பா என்ற பயிற்சி பெற்ற டீம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களிலோ, வகுப்பறைகளிலோ பாம்பு புகுந்தால் சர்ப்பா டீமை சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் வரும் வரை ஆசிரியர்களும், மாணவர்களும் பீதியுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி காத்திருக்கும் சமயத்தில் பாம்புகள் கல்லிடுக்குகளிலோ, வேறு இடங்களிலோ புகுந்து மறைந்துவிடும் நிலை உள்ளது. இதை அடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி அளிக்க கேரள மாநில வனத்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக பாலக்காடு மாவட்டத்தில் பாம்பு பிடிக்கும் பயிற்சியை தொடங்க உள்ளது வனத்துறை.


ஆண்டு இறுதித்தேர்வுக்குப்பின் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பள்ளி வளாகங்களிலும், வகுப்பறைகளிலும் பாம்புகளின் தொல்லைகள் அதிகமாக இருப்பதாகவும், பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பதற்கு பயிற்சி வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக வகுப்பறைகளிலும் பள்ளி வளாகங்களிலும் பாம்புகள் தென்படுவதை தொடர்ந்து ஆசிரியர்கள் பாம்புபிடிக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.


இதைத்தொடர்ந்தே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வனத்துறை தயாரானது. விஞ்ஞான ரீதியாகவும் ஆபத்துக்கள் ஏற்படாத வண்ணமும் பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்தும் பயிற்சி ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ஒரு நாள் பயிற்சி முகாம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட உள்ளதாகவும். இந்த முகாம் நடதுவதற்காக பாலக்காடு சோசியல் பாரஸ்ட் அலுவலகத்திலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளி வளாகங்களிலோ, வகுப்பறைகளிலோ பாம்புகளை கண்டால் சர்ப்பா டீம் வரும்வரை காத்திருக்காமல் ஆசிரியர்களே உடனடியாக பிடிக்க முடியும். பாலக்காடு மாவட்டத்தில் இந்த திட்டம் வெற்றியடைந்தால் பிற மாவட்டங்களிலும் பயிற்சி விரிவுபடுத்தப்படும் என சர்ப்பா மிஷன் நோடல் ஆப்பீசர் முஹம்மது அன்வர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி : வனத்துறை சிறப்பு ஏற்பாடு

 பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி : வனத்துறை சிறப்பு ஏற்பாடு கேரள வனத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி அளிக்...