ஆடைகள் வாங்கும் பொழுது GST குறைக்க, தொகையை பிரித்து Bill போட சொல்லி பகிரப்படும் தகவலின் உண்மைத் தன்மை
தீபாவளிக்கு ஆடைகள் வாங்கும் போது பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை!
“தற்போது புதிய ஆடைகள் வாங்கும்போது பில் கட்டணம் ₹2,500 வரை இருந்தால், 5% GST கட்டணம் செலுத்தவேண்டும். பில் கட்டணம் ₹2,500-ஐ விட அதிகமாக இருந்தால் 18% GST கட்டணம் செலுத்தவேண்டும். ஆகவே 5000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கினால் பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கவும்” என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.
GST ஒவ்வொரு துணிக்கும் தனித்தனியாக (per-piece basis) விதிக்கப்படும், மொத்த பில் (bill) அடிப்படையில் அல்ல. அதன்படி சமீபத்திய GST வரி குறைப்பு எதிரொலியாக, ₹2,500 வரை விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 5% GSTம், ₹2,500-ஐ விட அதிக விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 18% GSTம் விதிக்கப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் ₹2,000 மதிப்புள்ள ஒரு சட்டை வாங்கினால் அது 5% GSTக்கு உட்படும். அதே நேரத்தில், ₹3,000 மதிப்புள்ள ஒரு புடவையும் அதனுடன் சேர்த்து வாங்கினால், புடவைக்கு 18% GST விதிக்கப்படும். எனவே ஒரே பில்லில், இரண்டு பொருட்களுக்கும் தனித்தனியாகவே GST கணக்கிடப்படும். எனவே பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.