கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

GST குறைப்பால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன?



GST குறைப்பால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன?


ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் விலை குறையும் பொருட்கள் விபரம்:


ரெடிமேட் பரோட்டா மற்றும் சப்பாத்திக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் விலை குறையும்.


சாக்லேட்டுகள், ரெடிமேட் பாஸ்தா, நுாடுல்ஸ் ஆகியவை 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால், அவற்றின் விலையும் குறையும்.


நெய், வெண்ணெய் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விலையும் குறையும். உதாரணத்துக்கு, 1 கிலோ நெய் 40 - 50 ரூபாய் வரை குறையும்.


உலர் பழங்கள், நொறுக்குத்தீனி மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் விலை குறையும். மற்றும் 'ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின்' மற்றும் 32 அங்குலத்துக்கு மேல் உள்ள 'டிவி'க்கள், பாத்திரம் கழுவும் இயந்திரம் ஆகியவை மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைந்துள்ளது.


ஆடம்பர கார்களை தவிர, 1,200 ‘சிசி’க்கும் குறைவாக உள்ள கார்கள் மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால், விலை குறையும்.


350 உட்பட்ட 'சிசி'க்கு இருசக்கர வாகனம் மீதான வரி, 28ல் இருந்து 18 ஆக குறைந்து விட்டது. அதனால், அதன் விலை 10,000 ரூபாய் 30,000 வரை குறையும்.


மருத்துவ உபகரணங்கள், தெர்மா மீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், ரத்த சர்க்கரை ஆகியவற்றின் கண்டறியும் கருவிகள், சில மருந்துகள், மாத்திரைகள் ஆகியவற்றின் விலை குறையும்.


மூக்கு கண்ணாடி, லென்சுகள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைந்துள்ளது.


பென்சில், ரப்பர், 'மேப்' மீதான வரி முற்றிலும் நீக்கப் பட்டுள்ளது.


சோப்பு, டூத் பேஸ்ட், ஷாம்பு போன்ற பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால் விலை குறையும்.


பானை, குக்கர், தட்டு, கரண்டி, அடுப்பு, கண்ணாடி, கத்தி, மேசை கரண்டி விலை குறையும்.


சைக்கிள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால், சராசரியாக 1,000 - 3,500 ரூபாய் வரை விலை குறையும்.


சிமென்ட் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால், மூட்டைக்கு 40 ரூபாய் வரை குறையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியில் நீடிக்க மற்றும் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் - மாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஊடகப் பேட்டி

  ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யபட்டது குறித்து மாண்புமிகு அமை...