கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்தியர்களுக்கு மென்பொறியாளர்களுக்கு பேரிடி : H1B விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி ட்ரம்ப் அதிரடி



இந்தியர்களுக்கு மென்பொறியாளர்களுக்கு பேரிடி : எச்1பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.88 லட்சமாக உயர்த்தி ட்ரம்ப் அதிரடி


வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ) உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இது தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் உத்தரவாக அமைந்துள்ளது.



இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப், “எச்-1பி விசா திட்டம் தற்போது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசாக்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்காக மட்டுமே இந்த விசா பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.


அமெரிக்கா வழங்கும் எச்1பி விசாக்களில் 5ல் ஒரு பங்கை இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன. முன்னதாக எச்1பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில், அது இப்போது பன்மடங்கு ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பணிக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட எச்1பி விசாக்களில் 71 சதவீதம் அளவுக்கு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 



வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது, அமெரிக்காவுக்கு பணிக்கு வரும் வெளிநாட்டினர் மிகவும் திறமையானவர்கள் என்பதையும், அமெரிக்க தொழிலாளர்களை மாற்றக்கூடாது என்பதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்று ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.


H1B விசாவை சார்ந்திருக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...