பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்தில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவது அல்லது 1 லிட்டர் போடுவது எதில் அதிக மைலேஜ் கிடைக்கும் ?
பெட்ரோல் பங்கில் ₹500, ₹1000 என பட்டன்கள் இருக்கும்.
இதனால் நமக்கு இங்கு ஏதோ கோல்மால் செய்வார்கள் என நினைத்து, ₹95, 135 ,340 க்கு போடு எனக் கேட்பது புத்திசாலித்தனம் என நினைப்போம்.
சரியா ? தவறா ?
எல்லாமே ஒன்றுதான். பெட்ரோல் பம்ப் தருவது flow in litres, குறிப்பிட்ட அளவு லிட்டர் , இதை flow meter என ஒரு கருவி அளக்கிறது. நீங்கள் ₹100 அல்லது 1லிட்டர் எனக் கேட்டால் கூட உங்களுக்குக் கிடைக்கப் போவது அன்றைய விலை நிலவரத்தைப் பொறுத்தது. சாப்ட்வேர் கணக்குப் பார்த்து நீங்கள் கேட்டதை மாற்றிக் கொள்ளும். எல்லாமே ஒன்றுதான்.
சில பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் ?
பெட்ரோல் போடும் முன்பு மீட்டரை 0000 ரீசெட் செய்வதை உறுதிப்படுத்துங்கள்.
பெட்ரோல் பங்கில் ₹100, ₹500, ₹1000 என பட்டன்கள் இருக்கும். இந்த அளவுகளில் கோல்மால் செய்யமுடியும். அதனால் இந்த அளவுகளை தவிர்ப்பது நல்லது. ₹ 90, 110, 250 என போடுங்கள்.
ஸ்பீட் பெட்ரோல், உயர்ந்த ஆக்டேன் விலை உயர்ந்த பெட்ரோலை தவிருங்கள். தேவையில்லை.
கிராமங்களில் , தரமில்லாத இடங்களில் பெட்ரோல் போடாதீர்கள்.
சந்தேகம் இருந்தால் பங்கில் 1லி பெட்ரோலை தனியாக அளந்து காண்பிக்க கேளுங்கள்.
(வாட்ஸ் அப் பகிர்வு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.