கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எவரெஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எவரெஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீட்டர் - நேபாளம், சீனா கூட்டாக அறிவிப்பு...

 


நேபாளம் – சீனா எல்லையில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. இதன் புதிய உயரம் தொடர்பான அறிவிப்பை காத்மாண்டுவில் இருந்து நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலியும் பெய்ஜிங் நகரில் இருந்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யும் நேற்று ஒரே நேரத்தில் வெளியிட்டனர்.

பிரதீப் குமார் கியாவாலி கூறும்போது, “எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர்கள் ஆகும். இது முந்தைய கணக்கீட்டை விட 86 செ.மீ. (கிட்டத்தட்ட 3 அடி) அதிகம்’’ என்றார்.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கணக்கிடும் பணியில், நேபாளம் கடந்த 2011 முதல் ஈடுபட்டு வருகிறது. 1954-ல் சர்வே ஆப் இந்தியா கணக்கிட்ட 8,848 மீட்டர்கள் (29,028 அடி) உயரமே இதுவரை அதிகாரப்பூர்வ உயரமாக இருந்தது. கடந்த 1847-ல் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,778 மீட்டர்கள் என்று இந்தியாவின் பிரிட்டிஷ் சர்வேயர்கள் அறிவித்தனர்.



கடந்த 1849 மற்றும் 1855-க்குஇடையிலான காலத்தில் டேராடூனில் இருந்து நேபாளத்தில் உள்ள இமயமலைச் சிகரங்களை சர்வே ஆப் இந்தியா உற்று நோக்கியது. அப்போது 15வது சிகரத்தின் உயரம் 8,839.80 மீட்டர்கள் என கணக்கிடப்பட்டது. பிறகு இந்த சிகரம், இந்தியாவின் முன்னாள் சர்வேயர் ஜெனரல் சர் ஜார்ஜ் எவரெஸ்ட் பெயரில் அழைக்கப்பட்டது.

கடந்த 1954-ல் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர்கள் என சர்வே ஆப் இந்தியாவால் பிஹாரில் இருந்து முக்கோணவியல் முறைப்படி தீர்மானிக்கப்பட்டது. இது பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

  தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது ஒன்றிய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI The Union Government...