கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கீதாஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீதாஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

'டைம்' இதழ் கௌரவித்த 15 வயது சிறுமி கீதாஞ்சலி... சாதித்தது என்ன..?

15 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாஞ்சலி ராவுக்கு “Kid of the year’ என்ற பட்டத்தைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது டைம் இதழ். 

உலகப்புகழ் பெற்ற டைம் இதழ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பித்து வருகிறது. அந்தவகையில் 2020 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் குறித்த விவரங்களை டைம் வெளியிட்டு வருகிறது. இதில் அமெரிக்காவின் இளம் விஞ்ஞானியாக அறியப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயதான கீதாஞ்சலி ராவுக்கு “Kid of the year’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளதோடு, அட்டைப்படத்திலும் அவரை இடம்பெறச் செய்து கௌரவித்துள்ளது. “Kid of the year’' பட்டத்தை முதன்முறையாக டைம் இதழ் இந்த ஆண்டு அறிமுகப்படுத்திய சூழலில், இதனைக் கீதாஞ்சலி ராவ் வென்றுள்ளார். 

இணையத்தில் பயனர்களுக்கு எதிராக வரும் அச்சுறுத்தல்களை (cyber bullying) கண்டறியும் செயலி, தண்ணீரின் சுத்தத்தை அறிந்து கொள்ளும் வகையிலான செயலி ஆகியவற்றைக் கண்டறிந்த கீதாஞ்சலி, உலகெங்கிலும் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இளம் கண்டுபிடிப்பாளர்களை ஒருங்கிணைத்து டிஜிட்டல் சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டைம் இதழின் இந்த இடத்துக்காக சுமார் 5,000 பேர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இந்த பட்டத்தை கீதாஞ்சலி வென்றுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு Internet Service Charges for Schools - Releasing ...