கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்ப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல் விற்பனை தொடக்கம் - விலைப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது...

 தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.



இதுகுறித்து பல்கலைகழக துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் தெரிவித்தது:


கடந்த செப்டம்பர் மாதத்தில் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் தமிழ் பல்கலைக்கழக நிறுவன நாளையொட்டி நடைபெற்ற சிறப்புக் கழிவு விலையில் நூல்கள் விற்பனையில் ரூ.19.20 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்கப்பட்டன. தமிழக அரசின் ரூ. 2 கோடி நிதி உதவியில் மறு அச்சுத் திட்டத்தின் கீழ் 20 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் 20 நூல்கள் மறு அச்சு செய்யும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.



தமிழ்ப் பல்கலைக்கழக நூல்களை இணைய வழியில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.


தற்போது தொடங்கப்பட்டுள்ள சிறப்புத் தள்ளுபடி நூல்கள் விற்பனை மே மாதம் 14-ஆம் தேதி வரை தொடரும் என்றார் துணைவேந்தர்.


இவ்விழாவில் பதிப்புத் துறை முன்னாள் இயக்குநர் ஆறு. இராமநாதன், பதிவாளர் (பொறுப்பு) கு. சின்னப்பன், பதிப்புத் துறை இயக்குனர் (பொறுப்பு) தியாகராஜன், விற்பனையாளர் மு. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


>>> புத்தக விலைப் பட்டியல் - இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...