கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பயிற்சி மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயிற்சி மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் ( உயர் & மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களைத் தவிர) 18.06.2022 அன்று CRC பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் - தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (All teachers from 1st to 12th Standard (Excluding High & Higher Secondary School Headmasters and Post Graduate Teachers) are required to attend CRC training on 18.06.2022 - Thanjavur Chief Educational Officer Proceedings)...



>>> 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் ( உயர் & மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களைத் தவிர) 18.06.2022 அன்று CRC பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் - தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (All teachers from 1st to 12th Standard (Excluding High & Higher Secondary School Headmasters and Post Graduate Teachers) are required to attend CRC training on 18.06.2022 - Thanjavur Chief Educational Officer Proceedings)...




மருத்துவம், பொறியியல் தவிர்த்து பிற உயர் படிப்புகளுக்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும் - அரசியல் கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்...

 


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ்  இம்மானுவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழகத்தில் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கு ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. ஆனால் மருத்துவம் மற்றும் பொறியியலைத் தவிர்த்து பிற உயர்படிப்புகளைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு அதுதொடர்பான வழிகாட்டல்களை வழங்க போதுமான வாய்ப்புகள் இல்லை. மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர்த்து,  மேலாண்மை, சட்டம் என பல்வேறு துறைகள் உள்ளன. ஆகவே தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிறதுறை உயர்கல்வி தொடர்பான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்தும் அதற்கான பயிற்சி அளிப்பதற்கும் பயிற்சி மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு, “தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பல துறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசின் வேலைவாய்ப்புகளுக்கே, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது இல்லை. தமிழகத்தில் பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவிற்கும் மதுவிற்கும் அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது” என வேதனை தெரிவித்தனர்.

மேலும், ஒருகாலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இருந்த நிலையில், தற்போது பெரும்பாலானோர் விண்ணப்பிப்பது கூட இல்லை. அரசு மட்டுமல்ல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தலாம். வருங்கால தலைமுறையினர், வாய்ப்புகளை பயன்படுத்த அவர்களை உருவாக்கும் பணியிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும் என கருத்து தெரிவித்து இதுதொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...