கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பி.எஸ்.ஜி. மாணவர் இல்லம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பி.எஸ்.ஜி. மாணவர் இல்லம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தாய், தந்தையரை இழந்த மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் இலவச கல்வி கற்பதற்கு கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள்: 31-05-2022 (Students who have lost their parents can apply at Coimbatore Peelamedu PSG Charitable Home to free education upto College - Last Date: 31-05-2022)...

 தாய், தந்தையரை இழந்த மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் இலவச கல்வி கற்பதற்கு கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள்: 31-05-2022 (Students who have lost their parents can apply at Coimbatore Peelamedu PSG Charitable Home to free education upto College - Last Date: 31-05-2022)...



🍁🍁🍁 ஆதரவற்ற மாணவர்கள் தங்கி பயில உதவும் பி.எஸ்.ஜி மாணவர் இல்லம் நேர்முகத் தேர்வு அக்டோபர் 21அன்று நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-10-2020...


உலகெங்கும் குழந்தைகளின் கல்வி பெற்றோரின் ஆதரவைச் சார்ந்தே இருக்கிறது. பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமே இறந்து போக நேர்ந்தால் அவர்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் கல்வியைத் தொடர இயலாத குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகி அல்லற்பட நேர்கிறது. இப்படிப்பட்ட திக்கற்ற குழந்தைகளுக்கு கல்வியூட்டி, தொழிற்பயிற்சி அளித்து, அவர்களது எதிர்காலத்தை வளமாக்க உதவுவதற்காக தமிழகத்தில் சில நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளை நடத்தும் மாணவர் இல்லம்.

இது ஜூன் – 1995-ல் பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலரான ஜி.ஆர். கார்த்திகேயன் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த இல்லத்தின் நோக்கம் ஒரு பெற்றோரையோ அல்லது இருவரையுமே இழந்த, தமிழ் வழிக்கல்வியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் படிக்க விரும்பும் வசதியற்ற மாணவர்களுக்கு உறைவிடமளித்து கல்வியளிப்பதுவே ஆகும்.

விண்ணப்பத்திலடங்கிய விவரம், உரிய ஆவணங்கள், நுழைவுத்தேர்வு, நேர்காணல் ஆகியற்றின் அடிப்படையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு மாணவர் இல்லத்தில் உறைவிடம் அளித்து, கல்வி கற்க சர்வஜன மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு சேர்க்கைக்காக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கான நேர்முகத் தேர்வு அக்டோபர் 21 புதன் கிழமையன்று நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பித்தவர் தவறாமல் கலந்து கொள்ளவும் என நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிக மாணவர்கள் தங்கும் வகையில் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பி.எஸ்.ஜி நிறுவனங்களின் தற்போதைய நிர்வாக அறங்காவலரான  எல்.கோபாலகிருஷ்ணன் மாணவர் இல்லத்தின் வளர்ச்சியில் மிக்க ஆர்வம் கொண்டுள்ளார். மேலும் பலருக்கு இடமளிக்க தற்போதுள்ள கட்டிடத்தில் இன்னுமொரு அடுக்கு கட்டப்பட்டுள்ளது என்பதே இந்த அறக்கட்டளையின் அர்ப்பணிப்புக்குச் சான்றாகும்.

தரமான கல்வியும், தரமான உணவும், வீடு போன்ற சூழலையும் தருவதோடு மாணவர் இல்லவாசிகளுக்கு இலவச மருத்துவ வசதி, பயிற்சியாளர் உதவியுடன் பல்வேறு உள்ளரங்க, வெளி விளையாட்டு வசதிகள் ஆகியனவும் செய்து தரப்பட்டுள்ளன.

நன்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு அறக்கட்டளையின் நிறுவனங்களின் மூலமாக சிறப்பான உதவிகளும் அளிக்கப்படுகின்றன.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...