கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முற்றுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முற்றுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

CEO who spoke out of bounds - Teachers on Siege struggle

வரம்பு மீறி பேசிய CEO - முற்றுகைப் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள்


CEO who spoke out of bounds - Teachers on Siege struggle


ஈரோட்டில் நேற்று முன்தினம் வணிகவியல் முதுகலை ஆசிரியர் மீளாய்வு கூட்டம் நடந்தது.


இதில், 'ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் நாட்களுக்கு சம்பளம் வாங்குகிறீர்கள். இதற்கு சனிக்கிழமைகளில் ஈடு செய்கிறீர்களா? தேர்வில் 90க்கு 35 மதிப்பெண் மாணவன் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருத முடியும்.  அக மதிப்பீட்டு மதிப்பெண்ணுடன் 35 எடுத்தால் தேர்ச்சியாக கருத முடியாது. 


சராசரி மதிப்பெண், 50க்கும் குறைவாக எடுத்தால் ஆசிரியர்கள் வேலை செய்யவில்லை என கருதுவேன். சராசரி மதிப்பெண், 45க்கு குறைவாக வழங்கிய ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும். விளக்கம் சரியில்லை எனில் 17-பி சார்ஜ் வழங்கப்படும்.


பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி, சராசரி மதிப்பெண், 50க்கு குறைவாக வழங்கும் ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருந்து, 100 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுவர். மெல்ல கற்கும் மாணவர்கள் என யாரும் இல்லை. ஆசிரியர்கள் தான் அவ்வாறு மாணவர்களை உருவாக்குகின்றனர். இதற்கு ஆசிரியர்களே பொறுப்பு" என்று, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் பேசியுள்ளார்.


அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்


இதை கண்டித்து ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை (சி.இ.ஓ.,), 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று மாலை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் அனைத்து ஆசிரியர் கூட்ட மைப்பினர் இதில் பங்கேற்றனர். ஆசிரியர் கழக பிரதிநிதிகள், சி.இ.ஓ.,வுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.


'மனம் புண்படும்படி பேசியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். வரும் நாட்களில் இதுபோன்று நடக்காது" என சி.இ.ஓ.. கூறியதாக அவரின் நேர்முக உதவியாளர் தெரிவிக்கவே, ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) குறித்த DEE Proceedings

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Proceedings of the Dir...