இடுகைகள்

மைக்ரேன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

🍁🍁🍁 மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியைக் கட்டுப்படுத்த சில டிப்ஸ்...Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியானது வெடீர் வெடீர் என்று சுத்தியலைக்கொண்டு தலையில் அடித்தாற் போன்ற வலியை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுவதைக் கேட்கும் போது உண்மையில் அது எத்தனை பிணி தரும் அனுபவமாக இருக்கும் என்பதை யூகிக்க முடியும். ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  குடும்பத்தில் தாய் அவரது மகள்கள் முதல் பேத்திகள் வரை அனைவருக்கும் மைக்ரேன் இருக்கும் குடும்பங்களை பார்த்து வருகிறோம். வாழ்க்கைத்தரத்தை வெகுவாக பாதிக்கும் இந்த தலைவலியானது. பாதிப்புக்குள்ளாகும் நபரின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. நன்றாக படிக்கும் ஒரு மாணவிக்கு அவர் பரீட்சை எழுதும் நாட்களுக்கு முன்பு மைக்ரேன் வந்தால் அத்தோடு படிப்பின் மீது கவனம் குவிக்க இயலாமல் முழு மூச்சுடன் படிக்க இயலாது. மதிப்பெண்ணும் சரியும்.   இல்லற வாழ்வில் உள்ள பெண்களுக்கு இந்த தலைவலி வரும் போது குடும்ப உறுப்பினர்கள் மீது சினத்தை கக்கும் போது தேவையற்ற பல மனக்கசப்புகளும் சண்டை சச்சரவுகளும் நேருகின்றன. அலுவலகங்களில் மைக்ரேன் வலி ஏற்பட்டால் அன்றைய நாள் அத்தோடு முடிந்தது என்ற நிலை தான். எந்த செயலிலும் முழுமையாக ஈடுபாடு இ

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...