கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சான்றுகளை வெளிப்படுத்தும் கரிவலம்வந்தநல்லூர்

 


Karivalamvandanallur reveals historical evidence dating back 2,500 years.


2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சான்றுகளை வெளிப்படுத்தும் கரிவலம்வந்தநல்லூர் 


தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் நடைபெற்ற அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககாலம் செங்கற்களால் கட்டப்பட்ட படிக்கட்டு கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, கீழடிக்கு அடுத்த முக்கிய சங்ககால நகரமாக தென்காசியும் இருக்கலாம் என்ற கருத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் முன்வைக்கச் செய்துள்ளது.



கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கிணறு 4 மீட்டர் × 4 மீட்டர் அளவுடைய சதுர வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் உள்ளே இறங்குவதற்கு கற்களால் செய்யப்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. இதன் சுவர்கள் அனைத்தும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளதுடன், அந்தச் செங்கற்கள் ஒன்றோடொன்று பொருந்தும் வகையில் இன்டர்லாக்கிங் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளில் ஏற்பட்டுள்ள தேய்மானம் இந்தக் கிணறு நீண்டகாலம் பயன்படுத்தப்பட்டதைக் காட்டுகிறது. மேலும் சுவர்களில் இருந்த நீர்க்கறைகள், அப்போது நீர்மட்டம் உயரமாக இருந்ததற்கான சான்றாக உள்ளன. இது பழங்கால நீர் மேலாண்மை முறையின் சிறந்த எடுத்துக்காட்டு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



இந்த இடம், மதுரையிலிருந்து செங்கோட்டை கணவாய் வழியாக மேற்கு கடற்கரைக்குச் செல்லும் பழமையான வணிகப்பாதையில் இருந்துள்ளது. 1930-களிலேயே இப்பகுதியில் ரோமன் தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதனால் வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.


அகழாய்வில் சிவப்பு நிற பூச்சு பூசப்பட்ட மட்பாண்டம், மயில் ஓவியம் வரையப்பட்ட பானை, மூடியுடன் கூடிய புதைகுழி இருக்கக்கூடிய பானை மற்றும் மனிதர்களின் மோலார் மற்றும் முன்பற்கள் ஆகியவை கிடைத்துள்ளன. இவற்றுடன் கருப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள், கீறல் குறியீடுகள் கொண்ட பானைகள், கண்ணாடி மணிகள், டெர்ரகோட்டா பொம்மைகள், விளையாட்டில் பயன்படுத்திய கற்கள், மைக்ரோலித்திக் கற்கருவிகள், இரும்புப் பொருட்கள், இரும்பு உருக்கின் கழிவுகள் மற்றும் ஹீமடைட் இரும்புத் தாது ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



இந்த அகழாய்வில் உயர்தர தகர வெண்கலம் துண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பு ஆதிச்சநல்லூர், சிவகலை, சாஸ்தாபுரம், திருமலாபுரம், சூலபுரம் ஆகிய இடங்களில் மட்டுமே இது கிடைத்திருந்தது. தற்போது தென்காசி ஆறாவது இடமாக இதில் இணைந்துள்ளது.


தொல்லியல் நிபுணர்களின் கருத்துப்படி, இந்த இடம் இரும்புக்காலத்திலிருந்து சங்ககால நகரமாக வளர்ந்திருக்கலாம். கீழடி, அழகன்குளம், பூம்புகார் போன்ற சங்ககால மையங்களுடன் ஒத்த செங்கற்கள் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால், தென்காசியும் பெரிய சங்ககால குடியிருப்பு அல்லது நகரமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.


மொத்தத்தில், இந்த அகழாய்வு தென்காசியின் வரலாற்றை 2,500 ஆண்டுகளுக்கு முன் சங்ககாலம் வரை எடுத்துச் செல்கிறது. இது தொடர்ந்து நடைபெறும் அகழாய்வுகளில் இன்னும் பெரிய வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கக்கூடிய மிக முக்கியமான தளமாக உருவெடுத்து வருகிறது.


1988ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை...

1988...ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை...


1988..ல்...  

அரசு ஊழியர் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டீ  (Confederation ) பேரமைப்பு சார்பாக


22-06-1988 முதல் 23-07-1988 வரை


31 நாட்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது.


40 ஆயிரம் பெண் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


மாநில அளவிலான தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


வேலை நிறுத்தத்தின் உச்சகட்டமாக சென்னை முற்றுகை அறிவிக்கப்பட்டது.


வேன் மற்றும் பேருந்தில் வந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்திலேயே கைது செய்யப்பட்டு மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டனர்.


காவல்துறையின் தடையை மீறி சென்னை எழும்பூர் சென்டரல், பாரிமுனைக்கு அரசு ஊழியர்  ஆசிரியர்கள் வந்தனர்.


வேஷ்டி உடுத்தியவர்கள் ஆசிரியர்கள் பேன்ட் சட்டை போட்டவர்கள் அரசு ஊழியர்கள் என சந்தேகப்பட்டவர்களை எல்லாம் காவல்துறை கைது செய்தது.


ரயில் நிலையத்திலும், பேருந்து நிலையத்திலும்


காவல்துறை கைது செய்கிறது...


எனவே, கூட்டமாக செல்லாதீர்கள் ...


பேனர் பிடிக்காதீர்கள்.,


கொடி பிடிக்காதீர்கள்..,


கோசம் போடாதீர்கள்


என தோழமைச் சங்க தலைவர்கள் ரகசியமாக தகவல்களை பகிர்ந்து சென்றனர்.


காவல் துறையின் அனைத்து தடைகளையும் மீறி சென்னை அண்ணா சாலையில் 22 -7 - 1988 அன்று 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


தலைவர் யார் ? தொண்டர் யார்? என்று யாருக்கும் தெரியாது.


போராட்ட கோசங்கள் மட்டுமே அனைவரையும் இணைத்தது.


யாரும் கலைந்து செல்லவில்லை.


கைது செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.


போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முடியாததால் லத்தி சார்ஜ் செய்யப்பட்டது.


ஆசிரியர் சங்க தலைவர் வீரையன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டதால்


மண்டை உடைந்து ரத்தம் ஆறாக ஓடியது.


போராட்ட வீரர்களை கலைக்க  காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசியது.


கண்ணீர் புகை குண்டு


ஈரத் துண்டால் பிடிக்கப்பட்டு காவல்துறை மீது திருப்பி வீசப்பட்டது.


குதிரைப் படை வீரர்கள் மூலம் போராட்டக்காரர்களை கலைக்க  முயற்சி செய்தனர்.


குதிரைப் படை தாக்குதலை எதிர்கொண்டு குதிரைப் படை திருப்பி குதிரை லாயத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டது.


கூட்டத்தை கலைக்க முடியாமல் தோல்வி கண்ட அன்றைய ஆளுநர் அரசு சென்னை சிறையில் இருந்து மாநிலத் தலைவர்களை கோட்டைக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமரச தீர்வை உருவாக்கியது.


பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டதால்...


முற்றுகையை கைவிட்டு கலைந்து நேரு ஸ்டேடியம் செல்லுமாறு காவல்துறை முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் அறிவித்தது.


காவல்துறை கூறுவதை ஏற்க முடியாது..,


எங்கள் சங்க தலைவர்கள் நேரில் வந்து சொன்னால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அறிவித்தனர்.


வேறு வழியில்லாமல் காவல்துறையினர் தோழர். M.R.அப்பன் அவர்களை காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்தனர்.


காவல்துறை வாகனத்தின் மேலே ஏறி நின்று காவல்துறை ஒலிபெருக்கியில் M.R. அப்பன் அவர்கள் முற்றுகையில்  ஈடுபட்டபவர்களிடம் பேசினார்.


பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது...,


அனைவரும் நேரு ஸ்டேடியம் வாருங்கள் பேசுவோம் என்று அறிவித்தார்.


M.R. அப்பன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முற்றுகையை கைவிட்டு நடை பயணமாக நேரு ஸ்டேடியம் சென்றனர்.


அரசு செலவில் நேரு ஸ்டேடியத்தில் பேச்சுவார்த்தை ஒப்பந்த விளக்க கூட்டம் நடைபெற்றது.


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கொள்கை அளவில் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது...


அதனால் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்கிறோம் என்று மாநிலத் தலைமை அறிவித்தது.


வேலைநிறுத்தத்தின் விளைவாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றோம்.


அனுபவமே நல்ல ஆசான்





01.01.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி சமூக அறிவியல் (வரலாறு மற்றும் புவியியல்) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் பெயர்ப்பட்டியல் வெளியீடு...

 


01.01.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி சமூக அறிவியல் (வரலாறு மற்றும் புவியியல்) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட  இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள்  பெயர்ப்பட்டியல் வெளியீடு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 9364/ சி2/ இ2/ 2020, நாள்: -02-2021...

>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 9364/ சி2/ இ2/ 2020, நாள்: -02-2021...

>>> HISTORY PANEL...

>>> GEOGRAPHY PANEL...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்