கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Samuel Part லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Samuel Part லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

`பள்ளி மாணவி சொன்ன பொய்... வெட்டப்பட்ட ஆசிரியர் தலை!'- உலகையே அதிரவைக்கும் பிரான்ஸ் அரசியல்...


நன்றி : விகடன்...

ஒரு பள்ளி மாணவி தன் தந்தையிடம் சொன்ன விஷயங்களில் இருந்து உருவான தொடர் நிகழ்வுகள் இவையெல்லாம். இந்நிலையில் பிரான்ஸ் நீதிமன்றத்தில் அதிர்ச்சியளிக்கும் ஓர் உண்மையை சொல்லியிருக்கிறார் அந்த மாணவி.


பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் அருகில் ஒரு நடுநிலை பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றியவர் சாமுவேல் பேடி(Samuel Paty). வயது 47. 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளியில் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார். 


கருத்து சுதந்திரம் பற்றிய அந்த வகுப்பில் அதற்கு எடுத்துக்காட்டாக பிரான்ஸ் நாட்டில் மிகவும் சர்ச்சைக்கு உள்ளான ஒரு புகைப்படத்தை வகுப்பில் காட்டினார் எனவும், இஸ்லாம் மதத்தினர் இறைத்தூதராக மதிக்கும் முகமது நபிகளை பற்றிய கேலி சித்திரம் அது எனவும்,


அதை வகுப்பில் காட்டுவதற்கு முன் இஸ்லாம் மத மாணவர்களை அவர் வகுப்பை விட்டு வெளியேற சொல்லியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன்னை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்ததாகவும் தன் தந்தையிடம் முறையிடுகிறார் ஒரு 13 வயது மாணவி. 


கோபம் கொண்ட அந்த மாணவியின் தந்தை ஆசிரியர் சாமுவேல் பேடி மீது வழக்கு தொடர்கிறார். அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஒரு பிரசாரத்தை முன்னெடுக்கிறார். பலர் ஆசிரியர் முன்வைத்த கருத்து சுதந்திரத்தை ஆதரித்து குரல் கொடுக்கிறார்கள். மறுபுறம் ஆசிரியருக்கு எதிரான எதிர்ப்பலையும் வேகமெடுக்கிறது.


இந்தச் செய்தியை இணையம் மூலம் அறிந்துக் கொண்ட அப்துல்லாஹ் அன்சோரவ் எனும் 18 வயது இளைஞன் கொதித்தெழுகிறான். தன் மதத்தை அவமதித்தார் என்ற கோபத்தில் ஆசிரியர் சாமுவேல் பேடி மீது கோபம் கொள்கிறான். ஆசிரியரை அடையாளம் காட்ட அந்தப் பள்ளி மாணவர்கள் இருவரை உடன் அழைத்து சென்றவன், ஆசிரியரைக் கண்டதும் அவன் கொண்டு சென்ற நீண்ட கத்தியால் சாமுவேல் பேடியின் தலையை வெட்டி கொலை செய்கிறான். இதனை தொடர்ந்து அப்துல்லாஹ் அன்சோரவ்-ஐ சுட்டு கொல்கிறது பிரான்ஸ் போலீஸ் படை. அடையாளம் காட்ட சென்ற இரு மாணவர்களின் மீதும் வழக்கு பாய்கிறது. இது இஸ்லாமிய தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி என விசாரணையை தொடங்குகிறது போலீஸ். நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றன. இறந்த ஆசிரியருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதைக் கொடுத்து கௌரவிக்கிறது அந்நாட்டு அரசு.


பிரான்ஸ் அரசு, இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இஸ்லாமிய பிரிவினைவாத தீவிரவாதிகளின் சதி என்ற நிலைப்பாட்டை எடுக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை இறுக்குகிறது. இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதி ஒன்று ஆறு மாதங்கள் மூடப்பட்டது. மத தீவிரவாதத்திற்கு எதிரான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.



இஸ்லாம் மதத்தைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுகிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள் அவரது கருத்துக்கு எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றன. பிரெஞ்சு பொருட்களை வாங்குவதில்லை, பயன்படுத்துவதில்லை என பல நாடுகள் அறிவிக்கின்றன. துருக்கியிலிருந்து கடும் எதிர்ப்பு எழவே, அந்நாட்டிலிருக்கும் பிரான்ஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்படுகிறார். தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என விளக்கமளிக்கிறார் பிரான்ஸ் நாட்டு அதிபர். ஆனால், இஸ்லாமியர்களை, அவர்களின் மத உணர்வுகளை புறக்கணிப்பதாக அந்நாட்டிற்கு நெருக்கடிகள் வலுக்கின்றன.


ஒரு பள்ளி மாணவி தன் தந்தையிடம் சொன்ன விஷயங்களில் இருந்து உருவான தொடர் நிகழ்வுகள் இவையெல்லாம். இந்நிலையில் பிரான்ஸ் நீதிமன்றத்தில் அதிர்ச்சியளிக்கும் ஓர் உண்மையை சொல்லியிருக்கிறார் அந்த மாணவி. தான் சொன்னதெல்லாம் பொய் எனவும், குறிப்பிட்ட தினத்தன்று தான் வகுப்பறையிலேயே இல்லை எனவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். பள்ளிக்குச் சரியாக வராததால் அதற்கு முந்தைய தினமே பள்ளியிலிருந்து தான் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், அதை தன் தந்தையிடம் சொல்ல பயந்து, வேறு கதை சொல்லி சமாளித்ததாகவும் கூறியிருக்கிறார்.


தற்போது பள்ளி மாணவி மீது அவதூறு வழக்கு பதியப்பட்டிருக்கிறது. மாணவியின் தந்தை தீவிரவாத செயலுக்கு துணை போனதாகச் சந்தேகித்து அவரை கைது செய்திருக்கிறது பிரான்ஸ் அரசு.


அந்தப் பெண் சொன்னது பொய்யாகவே இருந்தாலும், அதை தொடர்ந்த இணையவாசிகளின், அந்தப் பெண்ணின் தந்தையின், அரசின், கொலை செய்த சிறுவனின் இன்னும் பலரின் எதிர்வினைகள் எல்லாம் பேசப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள். அவை ஒரு தனி மனிதன், ஒரு வீடு, ஒரு பள்ளி, ஒரு நாடு, ஒரு சமூகம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கான பாடங்கள்!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...