கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Zero Academic Year லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Zero Academic Year லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பூஜ்யம் கல்வியாண்டு என்றால் என்ன...?

 


கொரோனா சூழலால் தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. உருமாற்றம் அடைந்த வீரியமிக்க கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருவதால் இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படுமா என்னும் ஐயம் உள்ளது. பள்ளிகள் திறக்காத நிலையில், அந்தந்த வகுப்புகளுக்கான கற்றல் அடைவுகளை அடையாமல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றினால் கல்வித் தரம் பாதிக்கப்படும் எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

அதன்படி இந்தக் கல்வியாண்டை முற்றிலும் கைவிடுவதே பூஜ்யம் கல்வியாண்டு (Zero Academic Year) எனப்படுகிறது. அவ்வாறு பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிக்கப்பட்டால் கடந்த 2019 - 2020 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் படித்த மாணவர்கள், இந்த ஆண்டில் எந்த வகுப்பும் படித்ததாகக் கருதப்படாது. அவர்கள் அடுத்த 2021 - 2022 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்புக்குத் தான் செல்வார்கள்.

அதேபோல் இந்தக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள், அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள் என ஒன்றாம் வகுப்பில் மட்டும் வழக்கத்தை விட இருமடங்கு மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும் சூழல் உருவாகும். ஆனால் பூஜ்யம் கல்வி ஆண்டு தொடர்பாக எந்த முடிவையும் தமிழக அரசு தற்போது வரை முடிவெடுக்கவில்லை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Unit 5 - February 3rd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Std

  4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - அலகு5 – பிப்ரவரி 4வது வாரம் (Term 3 - Unit 5 - February 3rd Week - Les...