கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்வி உரிமை மறுக்கப்படும் தளிர்கள்: இன்று உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்-

சக குழந்தைகள், புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் தான் குழந்தை தொழிலாளர்கள். உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் 21 கோடி பேர், குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 11 கோடி பேர் பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. 2016ம் ஆண்டுக்குள் இதை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யார் குழந்தை தொழிலாளர்:உலகில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாக உள்ளது. சில குழந்தைகள், பள்ளி முடித்தவுடனும் சிலர் பகுதி நேரமாகவும் வேலைக்குச் செல்கின்றனர். சிலர் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கின்றனர். இவர்கள் குழந்தை தொழிலாளர்களாக கருதப்பட மாட்டர். ஆனால் கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமை, உடல், மனம், சமூகம் ஆகியவை பாதிக்கும் வகையில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது குற்றம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது. இந்திய அரசும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது குற்றம் என தெரிவிக்கிறது.

இந்தியாவில் அதிகம்:உலக குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையில் 12 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர் . இது இந்தியாவில் இப்பிரச்னை, எந்தளவு மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது. விவசாயம், தீப்பெட்டி. செங்கல் சூளை, டெக்ஸ்டைல் உள்ளிட்ட தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள், குறைந்த ஊதியத்தில், விடுமுறை இன்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை பார்க்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், சிலர் வற்புறுத்தல் காரணமாகவும் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கல்வி அவசியம் :அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெறுவதை ஒவ்வொரு அரசும் உறுதி செய்ய வேண்டும். சில குழந்தைகள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்கின்றனர். முதலில் இக்குழந்தைகளின் பெற்றோர்களின் வருமானத்துக்கு அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும். வறுமை ஒழிந்து, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வசதி கிடைத்தால் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து விடலாம். 
நன்றி-தினமலர்

>>>ஜூன் 12 [June 12]....

  • சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
  • பிலிப்பைன்ஸ் விடுதலை தினம்
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பிறந்த தினம்(1924)
  • கூகுள் எர்த் மற்றும் லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது(2006)

>>>தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் தேர்வுநிலை/சிறப்புநிலை ஊதியக்கட்டு மற்றும் தர ஊதிய நிர்ணயம் செயல்முறைகள் [Elementary Headmaster's Selection Grade/Special Grade Pay Band+Grade Pay Fixation & Proceedings]


>>>தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் தேர்வுநிலை/சிறப்புநிலை ஊதியக்கட்டு மற்றும் தர ஊதிய நிர்ணயம் தொடர்பான செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் [Click here to Download Elementary Headmaster's Selection Grade/Special Grade Pay Band+Grade Pay Fixation & Proceedings]

நன்றி : திரு.ஆ.பாடலீஸ்வரன் அவர்கள்,
               மாவட்டச் செயலாளர்,
               தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
               கரூர் மாவட்டம்.

>>>பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு தத்கால் திட்டத்தின் கீழ், இன்று (11ம் தேதி) முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவ, மாணவியர், உடனடித் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காமல் இருந்தால், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
முதன்மை கல்வி அலுவலகங்கள், தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 13ம் தேதி மாலை 5:45 மணிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், மதிப்பெண் சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். தபால் மற்றும் கூரியரில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தில் ஒட்டப்படும் மாணவரின் புகைப்படத்தில், ஏற்கனவே பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். 'தத்கால்' திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.
நன்றி-தினமலர்

>>>தமிழ்த்தாய் வாழ்த்து [Tamilthaai Vaazhththu]

>>>தேசிய கீதம் [National Anthem]

>>>ஜூன் 11 [June 11]....

  • நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது(1901)
  • இந்திய அரசியல் தலைவர் லாலு பிரசாத் பிறந்த தினம்(1947)
  • ஆன்டானியோ மெயூச்சி, தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப்பட்டது(2002)
  • தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இறந்த தினம்(1995)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...