கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜூன் 25 [June 25]....

  • வின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)
  • குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)
  • உலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது(1967)
  • பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)

>>>01.01.2012 நிலவரப்படி 2012-13ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான திருத்திய முன்னுரிமைப் பட்டியல்.

தமி
ழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,சென்னை-6
ந.க.எண்.111300/சி1/இ1/2011 நாள்.22.06.2012.
01.01.2012 நிலவரப்படி 2012-13ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான திருத்திய முன்னுரிமைப் பட்டியல்.
முன்னுரிமை சார்ந்து பெறப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இத்திருத்திய பட்டியல் வெளியிடப்படுகிறது. (25-04-2012ல் வெளியிடப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியல் இரத்து செய்யப்படுகிறது.)
>>>01.01.2012 நிலவரப்படி 2012-13ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான திருத்திய முன்னுரிமைப் பட்டியல்.- தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்SET EXAM
>>>01.01.2012 நிலவரப்படி 2012-13ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்- தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்SET EXAM

>>>தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:42212/பிடி1/2012, நாள்:21-06-2012ன் படி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளை அனைத்துப்பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்திட கோருதல்

>>>பி.எப்., கணக்கு விவரம் தெரியவில்லை : ஆசிரியர்கள் மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ்

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருங்கால வைப்புநிதி (பி.எப்.,) கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 
ஆசிரியர் தாஸ், தாக்கல் செய்த மனு: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 1981ம் ஆண்டு, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதில் பணியாற்றிய ஆசிரியர்களும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். தொடக்கக் கல்விக்கென தனி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வந்தாலும், அவர்களின் பி.எப்., கணக்கை, உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், நிர்வகித்து வந்தனர். பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம், தணிக்கை செய்வதில்லை. இதனால், தங்களின் பி.எப்., கணக்கில் எவ்வளவு பணம் செலுத்தப்படுகிறது என்கிற தெளிவான விவரங்கள், ஆசிரியர்களிடம் இல்லை. இந்தக் கணக்கை, அவர்களால் சரிபார்க்க முடியவில்லை. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை கண்காணிக்க, முறையான நிர்வாக நடைமுறை இல்லை. இந்தக் குழப்பங்களால், பி.எப்., நிதியில் சிலர் முறைகேடு செய்கின்றனர். தற்போது, பி.எப்., கணக்கை அரசு தகவல் தொகுப்பு விவர மையம் நிர்வகிக்கிறது. இங்கு பணியாற்றும் சிலர், தற்காலிக ஊழியர்களாக உள்ளனர். பி.எப்., நிதி, தணிக்கைக்கு உட்பட்டது. 85 ஆயிரம் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கில் வரும் பணத்தை நிர்வகிக்க, தணிக்கை செய்ய, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம் போல், எந்த தனிப்பட்ட அலுவலகமும் இல்லை. இதனால், சில நகரங்களில் பி.எப்., நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 210 கோடி ரூபாய், பி.எப்., மூலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவை பரிசீலிக்குமாறு, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்.
 நன்றி-தினமலர்

>>>செல்லிடப்பேசி(MOBILE) - பாதுகாப்பான பயன்பாட்டுக்கு வழிமுறைகள்

அன்றாட வாழ்வில் மொபைல் போன் பயன்பாடு இன்றியமையாததாக மாறிவிட்டது. மொபைல் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கக் கூட யாரும் தயாராக இல்லை. அதன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் தேவை. இல்லையென்றால் பல வித பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளையும் காண்போம்.

கண்களை காத்துக் கொள்ளுங்கள்:* மொபைல் போன் திரை, கண்களை பாதிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (சி.வி.எஸ்.,) எனும் நோய் தாக்குகிறது.
* அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் மொபைல் திரையை பார்க்கிறார்.

சி.வி.எஸ்.,சின் அறிகுறிகள்:கண்கள் வறண்டு போதல்: சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 16-20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் மொபைல் போன்களை பார்க்கும் போது 6-8 முறைதான் சிமிட்டுகிறோம்.

தலைவலி: கழுத்தை சாய்த்து வைத்துக் கொண்டு, கண்களை வருத்தி மொபைல் திரைகளை பார்ப்பதால் தலைவலி ஏற்படும்.
பார்வை மங்குதல்: தொடர்ந்து திரைகளை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பார்வை மங்கலாகும். பின் அதுவே நிரந்தரமாகும்.

கிட்டப் பார்வை: மொபைல் போன் திரையினால், கிட்டப் பார்வை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* குறைபாடை சரி செய்ய கண்ணாடி அணிதல், கான்டாக்ட் லென்ஸ் பொருத்துதல், லேசர் அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
* 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர்.
* ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் அமெரிக்கர்கள், லேசர் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

கண்களை காக்க...:* அடிக்கடி கண் சிமிட்டுங்கள்
* பாதுகாப்புக்காக சன் கிளாஸ் அணியுங்கள்
* விழிகளை சுத்தம் செய்யும் மருந்துகளை பயன்படுத்துங்கள்

காதுகளுக்கு ஏற்படும் பாதிப்பு:தொடர்ந்து மொபைலில் பேசும் 37 சதவீதம் பேருக்கு காதிரைச்சல் நோய் ஏற்படுகிறது. மொபைலில் பேசாத நேரங்களிலும் காதில் முணுமுணப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
* மொபைலில் பத்து நிமிடத்திற்கு மேலாக தொடர்ந்து பேசுவோருக்கு காதிரைச்சல் ஏற்பட 71 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.
* காதிரைச்சல் நோயை சரி செய்யவது கடினம்.

காதிரைச்சலை தவிர்க்க...:* அதிகப்படியான ஒலியைக் கேட்கக் கூடாது. உப்பு, காபியின் அளவை குறைக்க வேண்டும். புகைக்கக் கூடாது. வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வை தவிர்க்க வேண்டும்.
* எளிய உடற்பயிற்சி செய்யவும். ரத்த அழுத்தத்தை சீராகவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும்.

கவனமாக இருங்கள்:* 40, 50 வயதில் வரும் பிரச்னைகள், தற்போது 15 வயதிலே ஏற்படுகிறது. இதற்கு கம்யூட்டர், மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதும் முக்கிய காரணம்.
* மொபைலில் "டைப்' செய்யும் போது 91 சதவீதம் பேர் அளவுக்கு அதிகமாக கழுத்தை சாய்க்கின்றனர். இதனால் கழுத்துவலி ஏற்படுகிறது.
* 10-20 சதவீதம் பேர், மொபைல், கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
* இடைவெளி எடுங்கள்
* "வார்ம் அப்' செய்யவும்
* தினமும் உடற்பயிற்சி செய்யவும்
* அதிகம் நீர் அருந்தவும்

தூக்கத்தை கெடுக்கும் மொபைல்:* மொபைல் போனை உபயோகிப்போருக்கு தூக்கம் வர 6 நிமிடம் தாமதமாகிறது. ஆழ்ந்த தூக்கத்தையும் பல நிமிடங்கள் மொபைல் போன் தடுக்கிறது.
* பத்து ஆண்டுகளுக்கும் மேல் மொபைல் உபயோகிப்போருக்கு, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளைக் கட்டிகள் ஏற்பட 50 சதவீத வாய்ப்பு உண்டு.
* ஒரு வகை நரம்பு புற்றுநோய், மூளைப்புற்று நோய் ஆகியவை மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் என கண்டறிப்பட்டுள்ளது.
* அதிகப்படியான வேலைப்பளுவை குறைக்கவும்.
* படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* முடிந்தவரை "ஹெட் போனை' பயன்படுத்தவும்.
* தூங்கும் போது மொபைலை தலை யிலிருந்து குறைந்தது 98 இன்ச் தள்ளி வைக்கவும்.
கவனத்தை சிதற வைக்கும் மொபைல்
* போதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் பாதிப்பை விட, மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டும் போது, நான்கு மடங்கு அதிகமாக விபத்து ஏற்படும்.
* மொபைலில் "டைப்' செய்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு 23 மடங்குக்கும் அதிகமாக விபத்து ஏற்படும்.

விபத்தை தவிர்க்க...:* வாகனத்தை ஓட்டும் போது அவசியமாக பேசியாக வேண்டிய கட்டாயத்தில் "ஹேண்ட்ஸ் பிரீயை' பயன்படுத்தலாம்.
* டிரைவிங்கின் போது மொபைலை "வைப்ரேஷனில்' வைக்கவும்.
மொபைல் போன் தகவல் தொடர்பை எளிதாக மாற்றியுள்ளது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால், இழப்புகளை தவிர்த்து பயன் பெறலாம்.
நன்றி-தினமலர்

>>>ஜூன் 24 [June 24]....

  • மணிலா நகரம் அமைக்கப்பட்டது(1571)
  • நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது(1664)
  • தமிழறிஞர் கா.அப்பாத்துரை பிறந்த தினம்(1907)
  • கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்(1921)
  • மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் இறந்த தினம்(2006)

>>>கேள்வி குறியாகும் சமச்சீர் கல்வி நோக்கம் !

சமச்சீர் கல்வி திட்டத்தில் புத்தகங்கள் குறைக்கப்பட்டாலும் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத் திட்டத்தில் மறைமுகமாக 20 புத்தகங்கள் வரை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், புத்தக சுமையை குறைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வியின் நோக்கம் கேள்வி குறியாகியுள்ளது.
மாணவர்களின் உடல் மற்றும் மன அழுத்தம் குறையவும், தேர்வு பயத்திலிருந்து விடுபடவும், அவர்கள் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்ந்து முழுமையான ஆளுமை வளர்ச்சி பெறவும் இத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களின் எடையில் புத்தக சுமை என்பது 10 முதல் 15 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, பள்ளி நாட்களை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை முதல் பருவமாகவும், செப்., முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவமாகவும், ஜனவரி முதல் மார்ச் வரை மூன்றாம் பருவமாகவும் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பருவத்துக்கு உரிய பாடப் புத்தகங்களை மாணவர் படித்தாலே போதும். ஒரு பருவத்துக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே புத்தகமாகவும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஒரு புத்தகமாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஒரு புத்தகமாகவும், மொத்தம் 2 புத்தகங்கள் என சுருக்கப்பட்டன.

அரசு பள்ளிகளில் இது நடை முறைப்படுத்தப்பட்டாலும் தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இம்முறை பெயரளவுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டு வருகிறது.

குறைத்தும் குறையாத சுமைகள்: மதுரையில் உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 4ம் வகுப்பில் முதல் பருவத்துக்கான புத்தகம் தவிர மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ள புத்தகங்களின் பெயர் விபரம்:

இங்கிலீஸ் கிராமர் அன்ட் காம்போஷிசன், கர்சிவ் ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஸ், டிக்ஸ்டினரி அன்ட் அட்லஸ், தி கோல், தமிழ் எழுத்து பற்றிய நூல், பைந்தமிழ் பயிற்சி நூல், ஃபன் மென்டல் மேத்தமெட்டிக்ஸ், அபாகஸ் டேபில் புக்ஸ், மேப் டிராயிங், டெல் மி மோர், சிக்ஷா சுரபி, இந்தி ரைட்டிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், டிராயிங் புக்ஸ், இதிகாசங்கள் என... 20 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒருசில தனியார் பள்ளிகளின் இந்த தன்னிச்சை முடிவால் "சுமைதாங்கி' மாணவர்கள் இந்தாண்டும் வழங்கம் போல் "புத்தக மூட்டைகளை' சுமக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர் செந்தூரன் கூறியதாவது:

அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி என்ற நோக்கத்தில் தான் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், சில பள்ளிகளில் கூடுதலாக கற்றுத்தருகிறேன் என்று பெற்றோர்களை ஏமாற்றும் விதமாக இதுபோன்ற ஏராளமான புத்தகங்கள் வாங்க சொல்கின்றனர். இது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும். சமச்சீர் கல்வி முறை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுகிறதா என்பது குறித்து ஓய்வு பெற்ற கல்வியாளர் குழு அமைத்து கண்காணிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.
-தினமலர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shield Ceremony for 114 Best Schools - DEE Proceedings, Dated : 08-11-2024

   மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...