கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?




தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..?


Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?


மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.


தஞ்சாவூர்,

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையைக்கு கத்தி குத்து.


தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். அதே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் மதன்குமார் (30). இவர் ரமணியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மதன்குமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.


மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி (வயது 26) பள்ளி வகுப்பறையில் காலையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் குத்தியவனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  இரத்த வெளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த  ஆசிரியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலே ஆசிரியை ரமணி மரணம் அடைந்தார். 


கத்தியால் குத்தியவனை கைது செய்து சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியை ரமணியை குத்திக் கொன்றதாக சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஆசிரியை ரமணியை ஒருதலையாக காதலித்து வந்த மதன்குமார், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ஆசிரியையின் கழுத்து மற்றும் இடுப்பில் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


மேலும் ரமணியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் மதன் குமார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 




இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆசிரியை ரமணியை கொலை செய்த மதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதனிடையே அமைச்சர் அன்பில் மகேஸ், ``தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என பதிவிட்டுள்ளார்.













இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...