கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>DME:Special Category Provisional Eligible List for MBBS / BDS Course 2012-13

>>>அரசிதழ் எண்:25, நாள்:27-06-2012

>>>இரட்டைப்பட்டம்(Double Degree) கல்வித்தகுதிக்கு நாளைய (28.06.2012) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை - அதனைச் செயல்படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

>>>இரட்டைப்பட்டம்(Double Degree) கல்வித்தகுதிக்கு நாளைய (28.06.2012) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை - அதனைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ள தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நன்றி :திரு.ஆ.பாடலீஸ்வரன் அவர்கள்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
கரூர் மாவட்டம்.

>>> தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 3ஆண்டு பட்டப்படிப்பு படித்த பின்பு +2 முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நகல்

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006

..எண்: 9502/டி1/2012,  நாள்: 26.06.2012

பொருள்
:
தொடக்கக் கல்வி - 2012-2013 ஆம் ஆண்டு   - ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - சில நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து.



பார்வை
:
1. அரசாணை (1டி) எண் 158 , பள்ளிக்கல்வித் (1) துறை, நாள் 18.05.2012
2.தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ..எண் 12118/டி1/2011, நாள்:     .12.2011
... ... ...

 பார்வை 1ல் காணும் அரசாணையின்படி நடைபெறவுள்ள ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் கீழ்காணும் கூடுதல் நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்குமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1.       அரசாணை (நிலை) எண் 107 , பள்ளிக்கல்வித்துறை, நாள் 18.08.2009ன் படி 10+2+3 என்ற முறையில் பட்டம் பெற்றவர்களுக்கும் மற்றும்  11+1+3 என்ற முறையில் பட்டம் பெற்றவர்களுக்கும் மட்டும் உரிய பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியலில்சேர்த்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்த பின்பு +2          முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கக்கூடாது.

2.       2012-2013 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகளாகத்தரம் உயர்த்தப்பட்ட 710 நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து பணிநிரவல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்கள், நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பொதுமாறுதலில் முன்னுரிமை கோரினால் வழங்கப்பட வேண்டும்.

  (ஒப்பம்) 
தொடக்கக் கல்வி இயக்குநர்

பெறுநர்
அனைத்துமாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள்

>>>பள்ளி சான்றிதழில் பிறந்த தேதி குளறுபடிகளை, தலைமை ஆசிரியர்கள் சரி செய்யலாம்

பள்ளி சான்றிதழில் பிறந்த தேதி குளறுபடிகளை, தலைமை ஆசிரியர்கள் சரி செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமங்களில் 5 வயதுக்கு முன்பே குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, பிறந்த தேதியை மாற்றிப் பதிவு செய்கின்றனர். இதனால் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பள்ளி சான்றுகளில் வேறுபாடு ஏற்படுகிறது. இக்குளறுபடிகளால் மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதும்போது சிக்கல் ஏற்படுகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன்படி நடவடிக்கை எடுத்துள்ள கல்வித்துறை, உள்ளாட்சிகளில் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்படி, பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் செய்யலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
நன்றி-தினமலர்

>>>ஜூன் 27 [June 27]....

  • உலகின் முதலாவது ஏ.டி.எம்., லண்டனில் அமைக்கப்பட்டது(1967)
  • உலகின் முதல் அணுகரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1954)
  • கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)
  • சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Grama Sabha Meeting to be held on 23-11-2024 - Meeting Agenda - Rural Development and Panchayat Director's letter, Dated : 07-11-2024

 கிராம சபைக் கூட்டம் 23-11-2024 அன்று நடைபெறுதல் - கூட்டப்பொருள்கள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கடிதம், நாள் : 07-11-2024 Gra...