கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 3ஆண்டு பட்டப்படிப்பு படித்த பின்பு +2 முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நகல்

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006

..எண்: 9502/டி1/2012,  நாள்: 26.06.2012

பொருள்
:
தொடக்கக் கல்வி - 2012-2013 ஆம் ஆண்டு   - ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - சில நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து.



பார்வை
:
1. அரசாணை (1டி) எண் 158 , பள்ளிக்கல்வித் (1) துறை, நாள் 18.05.2012
2.தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ..எண் 12118/டி1/2011, நாள்:     .12.2011
... ... ...

 பார்வை 1ல் காணும் அரசாணையின்படி நடைபெறவுள்ள ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் கீழ்காணும் கூடுதல் நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்குமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1.       அரசாணை (நிலை) எண் 107 , பள்ளிக்கல்வித்துறை, நாள் 18.08.2009ன் படி 10+2+3 என்ற முறையில் பட்டம் பெற்றவர்களுக்கும் மற்றும்  11+1+3 என்ற முறையில் பட்டம் பெற்றவர்களுக்கும் மட்டும் உரிய பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியலில்சேர்த்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்த பின்பு +2          முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கக்கூடாது.

2.       2012-2013 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகளாகத்தரம் உயர்த்தப்பட்ட 710 நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து பணிநிரவல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்கள், நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பொதுமாறுதலில் முன்னுரிமை கோரினால் வழங்கப்பட வேண்டும்.

  (ஒப்பம்) 
தொடக்கக் கல்வி இயக்குநர்

பெறுநர்
அனைத்துமாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...