கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>School Education - BT Assistant Panel (2012)

>>>School Education - PG Assistant Panel (2012)

>>>Group-I(Main Written Exam) Hall ticket (Date of Exam:28&29.07.2012)

>>>10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் (அனைவருக்கும் கட்டாய இடைநிலை கல்வி) மூலம், படிப்பில் பிந்தங்கிய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற காரணங்களால் கிராம, நகர் புறங்களில் இடைநிலை கல்வியை கடக்க முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை அதிகரித்துள்ளது. இதை தடுத்து, அனைவரும் கட்டாயம் 10ம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்.எம்.எஸ்.ஏ.,திட்டம் கொண்டு வரப்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அரசு பள்ளிகளில் 9, 10 வகுப்பு மாணவர்களின் படிப்பு நிலவரத்தை மூன்று நிலைகளில் (நன்கு, ஓரளவு, கடைசி நிலை) ஆய்வு செய்து, மூன்றாவது நிலை மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, அவர்களை 10ம் வகுப்பில் அவசியம் தேர்ச்சி பெற செய்ய வேண்டும்.
இப்பணிகள் சரவர நடக்காததால், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவதாக கல்வித் துறையினர் கருத்து தெரிவித்தனர். கடந்த ஆண்டுகளை விட, வரும் ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, 9,10 ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் படிப்பு நிலவரங்களை ஆய்வு செய்யும் திட்டத்தை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஆர்.எம்.எஸ்.ஏ. திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவி ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் ஆய்வு பணியை துவங்கியுள்ளனர். ஆய்வின் போது, சரியாக எழுத, படிக்க தெரியாத பள்ளிகள் கணக்கிடப்பட்டு, அப்பள்ளிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கிராம பள்ளிகளில் 9,10ம் வகுப்புகளில் சில மாணவர்கள் எழுத, படிக்க தெரியாமல் வந்தோம்,சென்றோம் என்ற நிலையை கடை பிடிப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றார்.

>>>குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் - 1 முக்கியத் தேர்வு எழுதுபவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 10 மையங்களில் குரூப் 1 பணிக்கான முக்கியத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட, குரூப் -1 நிலையிலான பணிகளில், 131 காலிப் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூன் 5ம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவில், 2,795 பேர், முக்கியத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, முக்கியத் தேர்வு, 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. சென்னையில் மட்டும், 10 மையங்களில், இந்தத் தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு பணியிடத்திற்கான தேர்வும், இரு தாள்களாக நடக்கிறது.
பொது அறிவுத் தாள்களாக, தலா 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. 2,795 பேருக்கும், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.tn.gov.in) நேற்று, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டன. இவற்றை இணையதளம் மூலமாகவே, தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

>>>மருத்துவ காப்பீடு "பிரீமியம்' தொகை அதிகரிப்பு: அரசு ஊழியர்கள் அதிருப்தி

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியத் தொகை, திடீரென ஆறு மடங்கு அதிகரிக்கப் பட்டு உள்ளது. இது, அரசு ஊழியர்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும், மருத்துவ காப்பீட்டுக்காக, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப் படுகிறது. கடந்த முறை, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம் மூலம், காப்பீடு செய்யப் பட்டு இருந்தது.காப்பீட்டு தொகைஇதற்காக, மாதம்தோறும், சம்பளத்தில் 25 ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டது. இதன்மூலம், இரண்டு லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. தற்போது, அரசு ஊழியர்களுக்கான மருத்துவ இன்சூரன்ஸ் செய்ய, பல்வேறு நிறுவனங்களில் மாநில அரசு டெண்டர் கோரியது.அதன் அடிப்படையில், "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்துக்கு, அனுமதி வழங்கப் பட்டு உள்ளது. காப்பீட்டுத் தொகை, இரண்டு முதல், நான்கு லட்சம் ரூபாய் என, உயர்த்தப் பட்டு உள் ளது.

கூடுதல் சிகிச்சை:முந்தைய காப்பீட்டு நடைமுறைகளிலிருந்து, கூடுதலாக சிகிச்சை மற்றும் கூடுதலாக புதிய மருத்துவமனைகள், இந்தத் திட்டத்தில் சேர்க்கப் பட்டு உள்ளன. அந்த வகையில், 54 வகையான நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சையும்; ஏழு வகையான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள் ளலாம். இதற்கான மாத பிரீமியம், 150 ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது.ஜூலை 2012 முதல், ஜூன் 2016ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு, பாலிசி அமலில் இருக்கும். இதற்காக, இந்த மாதம் முதல், அரசு ஊழியர் சம்பளத்தில், 150 ரூபாய் கட்டாயம் பிடித்தம் செய்யவும், அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதுகுறித்த சுற்றறிக்கை, அனைத்து துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப் பட்டு உள்ளது. அரசின் இந்த உத்தரவு, அரசு ஊழியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆறு மடங்கு:அரசு ஊழியர் சங்கத்தினர் கூறியதாவது: காப்பீட்டுத் தொகை, இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கேற்ப பிரீமியத் தொகை, 25ல் இருந்து, 50 அல்லது 75 ரூபாயாக உயர்த்தி இருக்கலாம். ஆனால், அதை ஆறு மடங்கு உயர் த்தி உள்ளனர்.தற்போது பிடித்தம் செய்யும் 150 ரூபாயிலும், குறிப்பிட்ட தொகையை அரசு பிடித்தம் செய்து கொண்டு தான், காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்த உள்ளது. புதிய மருத்துவமனை, கூடுதல் சிகிச்சை என்றெல்லாம் காரணம் தெரிவித்தாலும், அதிகபட்சமாக, 50 சதவீதம் பேர் கூட, பயன் பெறுவதில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

>>>டி.இ.டி. தேர்வில் கூடுதல் மார்க் கிடைக்குமா? பார்வையற்றோர் பரிதவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில், பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம் வழங்கப்படாத காரணத்தால், அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இதனால், விடைத்தாள் மதிப்பீட்டில், தங்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.) சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில், வினாக்கள் கடினமாக இருந்ததால், குறித்த நேரத்துக்குள் விடை அளிக்க முடியாமல் போனதாக, பலர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இதுபோன்ற தேர்வு நடப்பது இதுவே முதல் முறை என்பதால், சாதாரண தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் சலுகை நேரம் கூட, இந்தத் தேர்வில் வழங்கப் படவில்லை. பார்வையற்ற தேர்வர்கள், "ஸ்கிரைப்&' எனும் உதவியாளரின் உதவியுடன் தான், தேர்வு எழுதுகின்றனர். இதனால், சாதாரண தேர்வர்களை விட, பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம் தேவை.
இதுகுறித்து,கோவையைச் சேர்ந்த பார்வையற்ற உமா கூறியதாவது: பிற அரசு தேர்வுகளில் வழங்கப்படுவது போல், இந்தத் தேர்விலும் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தோம். நேரமின்மையால், 117 கேள்விகளுக்கு மட்டுமே, என்னால் விடை அளிக்க முடிந்தது. இனி நடக்கும் தேர்வுகளிலாவது, பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம் ஒதுக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...