கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் - கடலூர் தனியார் பள்ளிக்கு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்
கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடலூர் தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
கடலூர் செம்மப்பம் பகுதியில பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இரண்டு மாணவர், ஒரு மாணவி உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த அந்த பள்ளி வேன் குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த பள்ளி வேனில் 4 மாணவ, மாணவிகளும் ஒரு ஓட்டுநர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி பள்ளி வாகனங்களில் ஓட்டுநருடன் கட்டாயம் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான பள்ளி வாகனத்திற்கு உதவியாளர் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து உதவியாளர் இல்லாதது குறித்து விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூரில் உள்ள தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விபத்தில் நடந்தது எப்படி?
இன்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் செம்மாங்குப்பம் ரயில்வே கேட் அருகே சென்றபோது தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கிராஸ் செய்து விபத்து ஏற்பட்டது. ரயில்வே கேட் மூடாதால் ரயில் வரவில்லை என பள்ளி வேன் ஓட்டுநர் வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் பள்ளி வேன் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நசுங்கி உள்ளது.
அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்டோர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நிவாஸ் என்ற 12 வயது மாணவன் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சாருமதி என்ற 16 வயது மாணவியும், செழியன் என்ற 15 வயது மாணவனும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் சின்னகாட்டுசாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிடமணி என்பவரது மகன் மற்றும் மகள் ஆவர்.
தற்போது விஷ்வேஸ் என்ற மாணவன், பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் (47), ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.