கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அக்டோபர் 7ம் தேதி செட் தேர்வு

மாநில அரசின் கீழுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமிப்பதற்கான செட் தேர்வு, வரும் அக்டோபர் 7ம் தேதி, மாநிலமெங்கும் 10 மையங்களில் நடக்கிறது.
புதுச்சேரி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேரவும் இத்தகுதி தேர்வு செல்லும். தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்களை பாரதியார் பல்கலைக்கழகம் வரவேற்கிறது.
யு.ஜி.சி. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 27 பாடப்பிரிவுகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் பாடப்பிரிவுகள், மானுடவியல், சமூகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவை.
முதுநிலைப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம்.

>>>STATE ELIGIBILITY TEST (SET) FOR LECTURESHIP, OCTOBER 2012

>>>Hon'ble Chief Minister's Award for excellence in e-Governance for students

>>>ஆகஸ்ட் 14 [August 14]....

  • பாகிஸ்தான் விடுதலை தினம்(1947)
  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • பராகுவே கொடி நாள்
  • பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)
  • இஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது(2006)

>>>தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு - இணையவழி கோரிக்கைப் பதிவு மற்றும் பராமரிப்பு முறைமை [TAMILNADU CHIEF MINISTER'S SPECIAL CELL Online Petition Filling and Monitoring System]

முதலமைச்சரின் தனிபிரிவு 
 ஒரு பரிவுள்ள அரசு ஏழு தத்துவங்களில் நிலைகொண்டு பணியாற்றுகிறது. அவையாவன, எளிதில் அணுகுதல், சமத்துவமாக நடத்துதல், தொடர்பாடல், பதில் தருதல் , துரிதமாக செயல்படுதல் , திறமையுடன் கையாளுதல் மற்றும் பொறுப்பு ஏற்றல் ஆகியன. இவைகளை உறுதிப்படுத்த வெவ்வேறு பின்னணி கொண்ட பொதுமக்கள் அரசு சேவைகளைப் பெறுவதில் தடையின்மை உருவாக்குதல், தகுதியிருந்தும் தடுக்கப்படும்போது உதவுதல், கோரிக்கைகளை எடுத்துரைக்க வசதி செய்து தருதல், உண்மையான கோரிக்கைகளுக்கு அதற்கேற்ற தீர்வு தருதல் ஆகிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. அனைத்து பொதுமக்களுக்கும் அதிமுக்கிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவானது, மாண்புமிகு முதலமைச்சரின் கோரிக்கை தீர்வு குழுவாக செயல்படுகிறது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாமல் நியாயமாகவும் பரிவுடனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு பதில் நடவடிக்கைகள் இணைய வழி கண்காணிப்பு முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலிருந்தும் உணர்திறனுடன் தேவையான சரியான பயனுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொறு துறைதோறும் மற்றும் மாவட்டங்கள்தோறும் தொடர்பு அலுவலர்களைக் கொண்டு நடத்தி தாமதங்கள் தவிர்க்கப்படுகிறது.

>>>மனுதாரர்களுக்கு தகவல் தரவும் ஏற்பாடு: முதல்வர் தனிப்பிரிவிற்கு புதிய வலைதளம்

முதல்வரின் தனிப் பிரிவிற்கு, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, புதிய வலைதளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையையும் முதல்வர் அவர்கள் துவக்கி வைத்து உள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதல்வரின் தனிப்பிரிவிற்கு நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், தபால் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மனுக்கள் பெறப்படுகின்றன. இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கையால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.முதல்வரின் தனிப்பிரிவின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதல்வரின் தனிப்பிரிவிற்கு, http://cmcell.tn.gov.in என்ற புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் அவர்கள் நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.

ஒப்புகைச் சீட்டு: இவ்வலைதளத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு, உடனே மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும். புதிய வலைதளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள முதல்வர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைதளத்தில் குறிப்பிடப்படும். இதன்மூலம் மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.மேலும், இப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்.,) மூலம் மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையையும் முதல்வர் துவக்கி வைத்தார். அதேபோல், தபால் வழியாக அனுப்பும் மனுக்களில் மனுதாரர் கைபேசி எண்ணை குறிப்பிட்டிருந்தால் முதல்வரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண், தொடர்புடைய அலுவலகம் மற்றும் அலுவலர் ஆகிய விவரங்கள் முதல்வர் தனிப்பிரிவிலிருந்து குறுந்தகவல் மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பப்படும்.

>>>ஆர்.டி.ஐ., கேள்விகள் 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்: மத்திய அரசு கட்டுப்பாடு

"தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்' என, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து, பொதுமக்கள், தங்களுக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்காக, 2005ம் ஆண்டில், தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் அடைந்து வருகின்றனர்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்கள் கேட்டு, கேள்விகள் சமர்ப்பிக்கும் போது, அந்தக் கேள்விகள், இவ்வளவு வார்த்தைகளில் தான் இருக்க வேண்டும் என, இதுவரை எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது கேள்விகள், 500 வார்த்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என, கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். இதில், மத்திய பொது தகவல் அலுவலர் பெயர், முகவரி, விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் இணைப்புக்கள் போன்றவை கணக்கில் எடுப்பதில்லை. இருப்பினும், 500 வார்த்தைகளுக்கு மேல் இருந்தாலும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.மேலும், மத்திய தகவல் ஆணையரிடம், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்பவர்கள், அவர்களே நேரடியாக ஆஜராக வேண்டும் அல்லது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். இல்லையெனில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராகலாம்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்கப்பட்டு, பதில்கள் தபாலில் அனுப்பப்படும் போது, 50 ரூபாய்க்கு மேல், செலவு ஏற்பட்டால், கூடுதலாகும் தபால் செலவை விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.

தகவல்கள் கோரி விண்ணப்பம் செய்வோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர் என்பதற்கான, அரசு வழங்கிய சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். பிற விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்துடன், 10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண வில்லையை இணைக்க வேண்டும்.இவ்வாறு பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...