கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கான மாதாந்திர அறிக்கை, சம்பளப்பட்டியல் மற்றும் சம்பள செல்லுப்பட்டியல் படிவங்கள் [Monthly Return,Pay Bill & Acquittance Formats in MS Excel]

>>>சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள கபாடியா, வரும், 28ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக, தற்போதைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி, அல்தாமஸ் கபீரை நியமிக்கும்படி, பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து சட்ட அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளே, தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த அடிப்படையில், அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து, ஓய்வு பெறும் தலைமை நீதிபதியின் பரிந்துரையை கேட்கும் சட்ட அமைச்சர், அவர் பரிந்துரைத்த பெயரை, பிரதமரின் ஒப்புதல் பெற்று, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார். தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள கபாடியா, புதிய தலைமை நீதிபதியாக, அல்தாமஸ் கபீரை நியமிக்க பரிந்துரை செய்துள்ளார். அல்தாமஸ் கபீர், 2005ம் ஆண்டிலிருந்து, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். இவர், தன், 65வது வயது வரை, அதாவது, 2013, ஜூலை 18 வரை பதவியில் தொடர்வார்.

>>>பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள்: வெளியிட்டது அரசு

பள்ளி வாகனங்களில், குழந்தைகள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்ய, புதிய வரைவு விதிகளை, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த விதிமுறைகளை, ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது.

சென்னை சேலையூரில், சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பலியான சம்பவம் குறித்த வழக்கை, தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' தானாக முன் வந்து விசாரித்தது.
வரைவு விதிகள்:
"பள்ளி பஸ்களை ஒழுங்குபடுத்த, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்; வரைவு விதிகளை, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.கடந்த ஆகஸ்ட், 30ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், "இந்த முக்கியமான பிரச்சனைக்கான வரைவு விதிகளை தாக்கல் செய்வதாக, அரசு சார்பில் உத்தரவாதம் அளித்தும், அதை நிறைவேற்றாமல், இதுவரை அதை தாக்கல் செய்யாமல், மேலும் கால அவகாசம் கேட்பது துரதிருஷ்டம்; செப்., 3ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்று, வரைவு விதிகளை அரசு கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.அதை தொடர்ந்து, இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி, ஆகஸ்ட், 31ம் தேதியிட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதை நீதிபதிகள் படித்துப் பார்த்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, "ஐகோர்ட் தலையிட்டதால் தான், இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. எனவே, கோர்ட்டை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்' என்றார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, "பள்ளி குழந்தைகளின் நலனை, இந்த கோர்ட் எப்போதுமே கருத்தில் கொள்ளும்' என்றார்.

முழு திருப்தி:
அதை தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில், வரைவு விதிகளை அரசு தாக்கல் செய்துள்ளது. அதை, விதிகளாக அரசு அறிவிக்கை செய்ய வேண்டும். வரைவு அறிக்கையை படித்துப் பார்த்தோம். முழு திருப்தி அடைந்தோம். இந்த விதிகளை கண்டிப்பாக அமல்படுத்தினால், பள்ளி வாகனங்கள் தொடர்பான விபத்துகள் பெருமளவு குறையும். இந்த பள்ளி சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

>>>சம்பளமின்றி 2 மாதங்களாக தவிக்கும் 1,500 ஆசிரியர்கள்

மாநிலம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் ஏற்பட்ட கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 1,500 முதுநிலை ஆசிரியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
கடந்த ஜூனில், தமிழகத்தில் 100 அரசு உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும், 9 பணியிடங்கள் வீதம், அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டன.
கடந்த ஜூலையில் நடந்த பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு மூலம், இந்த 900 கூடுதல் பணியிடங்கள் உட்பட 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் நியமனம் பெற்ற இவர்களுக்கு, நிதித்துறை ஒப்புதல் அளித்து,
எக்ஸ்பிரஸ் பே ஆர்டர் (ஊதிய வழங்குவதற்கான உடனடி உத்தரவு) வழங்க வேண்டும். ஆனால் 2 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால், இவர்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட்டிற்கான சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை தலைவர் சரவணமுருகன் கூறியதாவது: ஒரு பள்ளியில் இருந்து பணியிடம் மாற்றி, வேறு பள்ளிக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய வழங்குவதற்கான உடனடி உத்தரவு வழங்க வேண்டும். இதற்கு மாநில நிதித்துறையில் இருந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
நிதி துறை ஒப்புதல், இந்த ஆசிரியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் 2 மாதம் 1590 ஆசிரியர்கள் சம்பளம் பெறமுடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

>>>செப்டம்பர் 04 [September 04]....

  • அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1978)
  • அமெரிக்க செய்தித்தாள் தினம்
  • மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பிறந்த தினம்(1941)
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது(1781)

>>>TNPSC – Departmental Exam Dec 2012 – Online Registration


DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

Month Current Online Registration for...
(Click to Apply Online)
Help Current Status
 
Sep 2012
Departmental Examinations December 2012
Tamil | English
Online till
30 Sep 2012



Departmental Examinations December 2012 - Instructions
  1. Applications are invited from the candidates for admission to the Departmental Examinations December 2012 through "FULLY ONLINE" mode. Filled-up Online Application Forms will be electronically transmitted to the TNPSC Office and hence there is no need to send the application by post.
     
  2. Fully Online registration for Departmental Examinations, December 2012 is available for candidates applying from all the 33 Centres, from 01/09/2012 to 30/09/2012.
     
  3. CANDIDATES WILL NOTE THAT REGISTRATION FEE OF Rs. 30/- WILL HAVE TO BE INCLUDED IN THE POSTAL RECEIPT APART FROM THE FEE FOR THE TESTS APPLIED FOR
     
  4. Total Fees should be paid through postal receipt only except the candidates opting NEW DELHI as Centre.
     
  5. Examination / Registration Fees: Kindly make sure that you have the Postal Receipt for the requisite number of tests that you will be applying for, before registering online. (Calculate the Total Fee using Fee Calculator)
     
  6. Procedure to apply online :

    View the Instructions to the Candidates for applying through Online.
     
  7. Last date: The candidates can register their particulars online till 5.45 P.M. on 30/09/2012.



>>>Click here to Apply Online...



>>>செப்டம்பர் 03 [September 03]....

  • ஆஸ்திரேலிய கொடி நாள்
  • கத்தார் விடுதலை தினம்(1971)
  • சீனா ராணுவ படை தினம்
  • உலகின் மிகச் சிறிய நாடான சான் மரீனோ, புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது(301)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Our next calender year 2025 is a mathematical wonder

 நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025  1) 2025, ஒரு முழு வர்க்க எண்  2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...