கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>2017க்குள் இந்தியாவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியா சார்பில் வரும் 2017ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாதாரண கம்ப்யூட்டர்களை விட, பல மடங்கு வேகமான செயல்திறன் கொண்டதாகவும், கடினமான கணக்குகளையும் வினாடிகளில் செய்யும் திறன் கொண்ட கம்ப்யூட்டர்கள் சூப்பர் கம்ப்யூட்டர் என அழைக்கப்படுகிறது. இவ்வகை கம்ப்யூட்டர்கள் ராணுவம், விண்வெளி, ஆராய்ச்சிக்கூடம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
உலகில் முதன் முதலாக சூப்பர் கம்ப்யூட்டர் 1960களில் அறிமுகமானது. இந்தியா திட்டமிட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர், தற்போது உள்ள அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரான ஐ.பி.எம் நிறுவனத்தின் "செகுயா" வை விட 61 மடங்கு வேகமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு 4,700 கோடி ரூபாய். திட்டமிடப்பட்டுள்ள காலம் 5 ஆண்டுகள்.
பெடலொப் என்பது கம்ப்யூட்டரின் வேகத்தை குறிக்கிறது. ஒரு பெடலொப் ஒரு வினாடிக்கு ஆயிரம் டிரில்லியன் வேகத்தில் செயல்படும் திறன் கொண்டது. ஒரு டிரில்லியன்க்கு, 1க்கு அருகில் 18 பூஜ்ஜியங்களை சேர்க்க வேண்டும். அப்படியென்றால் இதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
2012ம் ஆண்டின் உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக தேர்வு செய்யப்பட்ட ஐ.பி.எம்., நிறுவனம் தயாரித்த "செகுயா" என்ற சூப்பர் கம்ப்யூட்டரின் வேகம் 16.32 பெடலொப் அதாவது 7.8 லட்சம் அதிவேகமான லேப்டாப் கம்ப்யூட்டர்களை ஒன்றிணைப்பதற்கு சமம். ஆனால் மத்திய அரசு திட்டமிட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டரின் வேகம், இந்த ஐ.பி.எம்., கம்ப்யூட்டரின் வேகத்தை விட 61 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களின் வரிசையில், இந்தியா தற்போது 58வது இடத்தில் உள்ளது. இந்தியா முதன்முதலாக 1987ம் ஆண்டு சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டது. நாட்டின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் "பரம்".

>>>51 இடங்கள் காலி: செப். 30ல் இறுதிக்கட்ட கலந்தாய்வு

இரண்டாம் கட்ட கலந்தாய்வின் முடிவில், 51 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள, பி.டி.எஸ்., இடங்களை நிரப்ப, வரும், 30ம் தேதிக்குள், இறுதிகட்ட கலந்தாய்வு நடைபெறும். இதற்கான அறிவிப்பு, நாளை மறுநாள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக இருந்த, 19 மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், காலியாக இருந்த, 106, பி.டி.எஸ்., இடங்களை நிரப்ப, நேற்று கலந்தாய்வு நடந்தது.
கலந்தாய்வின் முடிவில், அரசு பல் மருத்துவமனையில் 5 இடங்களும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 46 இடங்களும் காலியாக உள்ளன. இவற்றில், எம்.பி.சி., பிரிவில், 14; எஸ்.சி., பிரிவில், 23 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.  சுகாதாரத் துறை இணையதளத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>கட்டாய கல்வி சட்டம்: ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, 2013 மார்ச் மாதத்திற்குள், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 27ம் தேதி, வட்டார வள மைய அளவில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 28ம் தேதி உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 29ம் தேதி நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன வழிகாட்டுதல் படி, அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

>>>செப்டம்பர் 19 [September 19]....

  • சிலி ராணுவ தினம்
  • சுவாமி விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்(1893)
  • நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது(1893)
  • அமெரிக்கா, நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது(1957)

>>>பாரதிதாசன் பல்கலைக்கு மீண்டும் அதிகபட்ச அந்தஸ்து

பாரதிதாசன் பல்கலைக்கு, நாக் கமிட்டி தரநிர்ணய மறுமதிப்பீட்டில், மீண்டும் ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது. இதுகுறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூருவில் உள்ள தேசிய தரநிர்ணய மதிப்பீட்டுக் குழுமத்தின் (நாக் கமிட்டி) சார்பாக, இந்தியாவின் தலைச்சிறந்த கல்வியாளர்கள் அடங்கிய, எட்டு பேர் கொண்ட ஆய்வுக்குழு, கடந்த, 3,4,5ம் தேதிகளில், திருச்சி பாரதிதாசன் பல்கலை வந்து, இங்குள்ள அனைத்துத்துறைகளையும் பார்வையிட்டது. பாரதிதாசன் பல்கலை ஏற்கனவே சமர்ப்பித்திருந்த சுயபரிசீலனை அறிக்கையை அடிப்படையாக கொண்டு, குழு ஆய்வு மேற்கொண்டது.
அதனடிப்படையில் இக்குழு, தனது அறிக்கையினை "நாக்" கமிட்டியிடம் ஒப்படைத்தது. 15ம் தேதி, "நாக்" நிர்வாகக் குழுக் கூட்டத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கு அதிகபட்ச அந்தஸ்தான ஏ-கிரேடு வழங்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலை பெற்றிருந்த "ஏ" கிரேடு அந்தஸ்தை, மீண்டும் மறுமதிப்பீட்டில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தரச்சான்று கிடைக்க ஒத்துழைப்பு நல்கிய பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும், தனது மகிழ்ச்சியையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக துணைவேந்தர் மீனா குறிப்பிட்டுள்ளார்.

>>>மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக பணி வழங்க உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, உடனே பணி வழங்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குரூப்-4 தேர்வு, கடந்தாண்டு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களை, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட துறைகளில் பணியமர்த்தாமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மறுத்தனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி.,யிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தமிழக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலர் குற்றாலிங்கம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடந்த, 12ம் தேதி, கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விதி 22ன் படி, பணியாளர் தேர்வாணையம் மூலம், தேர்வு செய்யப்பட்ட பார்வையற்றவர்களை பணியமர்த்த மறுப்பது, அரசு விதிகளுக்கு எதிரானது. எனவே, உடனடியாக அவர்களை பணியமர்த்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

>>>20-09-2012 அன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 015224/கே2/2012, நாள்: 18-09-2012ன் படி 20-09-2012 வியாழன் அன்று அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...