கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore



அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம்


ஆம்பூா் அருகே பள்ளியில் கல்வி அதிகாரி பிறந்தநாள் கொண்டாடிய விவகாரம் தொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.


மாதனூா் ஒன்றியம், மணியாரகுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் திங்கள்கிழமை மாதனூா் வட்டார கல்வி அலுவலரான உதய்சங்கா் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினாா். இந்த விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் செய்ததாக கூறப்படுகிறது.


இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் ஆம்பூா் மற்றும் சுற்றுபகுதிகளில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது தொடா்பாக தொடக்க கல்வி இயக்ககம், சென்னையில் இருந்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.


இதைத் தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மலைவாசன் மணியாரகுப்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு விசாரணை நடத்த வந்தாா். அப்போது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியா் சிவக்குமாா், உடன் பணிபுரிந்த ஆசிரியா், மாணவ, மாணவியா் ஆகியோரிடம் இதுபற்றி விசாரணை மேற்கொண்டாா். மேலும், இந்த சம்பவம் குறித்து வட்டார கல்வி அலுவலா் உதயசங்கரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.


இதுதொடா்பாக அலுவலா் மலைவாசன் கூறியது, வட்டார கல்வி அலுவலரின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து சம்பந்த பட்ட பள்ளியை சாா்ந்த தலைமை ஆசிரியா், மாணவ, மாணவியா் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்யப்பட்டது. இதுகுறித்த அறிக்கை தயாா் செய்யபட்டு தொடக்க கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தாா்.


அதனைத் தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கும், தலைமை ஆசிரியர் வேலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...