கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இரண்டாம் பருவத்திற்கு பாடப் புத்தகங்கள் வினியோகம்

நடப்புக் கல்வியாண்டில், இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தக வினியோகத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இரண்டாம் பாடப் பருவத்திற்காக, மொத்தம், 56 தலைப்புகளில், 2.2 கோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவக் கல்வி முறைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூன் முதல், செப்டம்பர் வரையிலான முதல் பருவம், இம்மாத இறுதியுடன் முடிகிறது.
இதையடுத்து, அக்டோபர் முதல், டிசம்பர் வரையிலான இரண்டாம் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி, சென்னையில் நேற்று துவங்கியது. எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, மாணவியருக்கு, பாடப் புத்தகங்களை வழங்கினார்.
எட்டாம் வகுப்பு வரையிலான மாணவியருக்கு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பிற்கும், தலா இரு தொகுதிகள் அடங்கியதாக, பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பருவத்திற்காக, 56 தலைப்புகளில், 2 .27 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.
இதில், 1.52 கோடி பாடப் புத்தகங்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்காக அச்சிடப்பட்டு உள்ளன. 75 லட்சம் பாடப் புத்தகங்கள், தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்காக அச்சிடப்பட்டு உள்ளன. இப்புத்தகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி, 15ம் தேதி முதல் நடந்து வருகிறது.
வரும் 25ம் தேதிக்குள், அனைத்துப் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பப்படும் என்றும், காலாண்டு விடுமுறை முடிந்து, அக்டோபர் 4ம் தேதி மாணவ, மாணவியர், பள்ளிகளுக்குத் திரும்பியதும், பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.
முதல், இரண்டாம் வகுப்புப் புத்தகங்களின் விலை, 70 ரூபாய், மூன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை, 85 ரூபாய், ஏழு, எட்டாம் வகுப்புப் புத்தகங்களின் விலை, 100 ரூபாய்.

>>>செப்டம்பர் 20 [September 20]....

  • தாய்லாந்து இளைஞர்கள் தினம்
  • தி ஹிந்து இதழ் வெளிவர துவங்கியது(1978)
  • நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டன், மொரீசியசில் வெளியிடப்பட்டது(1847)
  • துருவ செயற்கைகோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)
  • பெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசண்ட் நினைவு தினம்(1933)

>>>கடவுச்சீட்டு - தடையின்மைச் சான்று - விண்ணப்பப் படிவம் [Passport - No Objection Certificate - Proposal Format]

>>>Income Tax Department Recruitment of Sportspersons- 2012

 Last Date for Receipt of Application: 25-10-2012

>>>Click Here to Download Income Tax Department Recruitment Advt

>>>RMSA - 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுடைய கற்றல் திறன் மேம்படுத்துதல் - தமிழ், ஆங்கிலம் கட்டுரைகள் எழுதுவதில் மாற்றங்கள் குறித்த இயக்குநரின் அறிவுரைகள்

>>>SSA - Unified District Information System for Education 2012-13 (UDISE 2012-13) - DATA CAPTURE FORMAT

>>>தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - பி.எட் நுழைவுத்தேர்வு முடிவுகள் (AUGUST - 2012)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...