கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>எழுத்துப் பயிற்சியால், அதிக மதிப்பெண் பெறலாம்

"புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கான விடைகளை, எழுதிப்பயிற்சி செய்வதால் அதிக மதிப்பெண் பெறலாம்," என ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.
பத்தாம் வகுப்பு: 
ஆங்கிலம்: மொழிப்பாடம் என்பதால், தெளிவாக விடையளிப்பது அவசியம். "பாராகிராப்,  மனப்பாடப் பகுதிகளை படிப்பது மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் எழுதிப்பார்ப்பது பயனளிக்கும்.
கணிதம்: கணங்களும் சார்புகளும், அணிகள், நிகழ்தகவு, வரைபடங்கள், செய்முறை வடிவியல் ஆகிய பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தினால், 53 மதிப்பெண்களை எளிதாகப் பெறலாம்.
அறிவியல்: மொத்தமுள்ள 15 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளையும், ஒரு பக்கத்திற்குள் எழுதுதல் நலம். "ஆப்ஷன்" உடன் கூடிய விடை எழுதுவதே, விடைத்தாளை மதிப்பிடுதலில் மாணவர்களுக்கு பலனளிக்கும். நோய் தடைக்காப்பு மண்டலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணுக்களும் மூலக்கூறுகளும், மின்னோட்டத்தின் காந்த விளைவு பாடங்களில் மட்டும், 36 மதிப்பெண்கள் பெறலாம்.
சமூக அறிவியல்: காலக்கோடு பகுதியில் சுதந்திர போராட்டம், சிப்பாய்க்கலகம் வரைபட குறித்தலில் ஆசிய வரைபடத்தில் நாடுகள், புவியியலில் முதல் பாடத்திற்கான ஏழு இடங்களை குறிக்க தெரிந்திருக்க வேண்டும் பொருளியலில் இரண்டாவது பாடம், குடிமையியலில் முதல் பாடம், வரலாறில் சுதந்திர போராட்டம், புவியியலில் முதல் மூன்று பாடங்களில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்
பிளஸ் 2: 
ஆங்கிலம்:புத்தக வங்கியில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்து இருக்க வேண்டும். முதல் இரண்டு பாடத்தில்,கட்டுரை கேள்விகள் வர வாய்ப்புள்ளது. கடிதம் எழுதும் வினாக்களுக்கு, முழு மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது.
கணிதம்: பாடம் எண், 2,3,4,6,9 களில் இருந்து பத்து மார்க் கேள்விகள் அதிகம் கேட்க வாய்ப்புள்ளது. ஒன்பதாவது பாடத்தில் 6 மார்க் கேள்விகள் கேட்கப்படும்.
இயற்பியல்: முதல் 16 பாடங்களில் இருந்து, ஒரு மார்க் வினாக்கள் அதிகம் கேட்கப்படும். கணக்கீடுகளில் இருந்து குறைந்தது 37 மார்க்குகளுக்கான கேள்விகள் கேட்கப்படும். 7,8 பாடங்களில், 5 மார்க் கேள்விகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. நேரம் மேலாண்மை மிக முக்கியம்.
வேதியியல்: வெட்ப இயக்கவியல், வேதி சமநிலை, நடைமுறை வேதியியல் ஆகிய பாடங்களில்இருந்து கூடுதல் கேள்விகள் கேட்கப்படும். பயிற்சி வினாக்களில் இருந்து முழுமையான பயிற்சி பெற வேண்டும்.
உயிரியல்: புளூபிரிண்ட் அடிப்படையில், 5, 10 மார்க் வினாக்களுக்கு பதில் தர கற்றுக்கொள்ள வேண்டும். 10 மார்க் வினாக்களுக்கு விடை தரும்போது, சரியான தலைப்புகள் தரவேண்டும்.

>>>தமிழகம், புதுச்சேரியில் விரிவுரையாளர் தகுதித்தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், இன்று விரிவுரையாளர் தகுதித் தேர்வு நடக்கிறது.மொத்தம் 10 முக்கிய மையங்கள் மூலம், 76 துணைதேர்வு மையங்களில், இத்தேர்வு நடக்கிறது.
இதுதொடர்பாக பாரதியார் பல்கலை தேர்வாணையர் செந்தில்வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: இத்தேர்வை, 58 ஆயிரத்து 234 பேர் தேர்வு எழுதுகின்றனர். 10 ஆயிரத்து 508 பேர் சென்னையிலும், 9,812 பேர் திருச்சியிலும், 7,344 பேர் சேலத்திலும் எழுதுகின்றனர்.மொத்தம் 31 ஆயிரத்து 498 பெண்களும், 26ஆயிரத்து 736 ஆண்களும் எழுதும் இத்தேர்வில், பெண்களே அதிகம்.
இதில், 268 பார்வையற்றவர்களும், 991 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள், அவர்களுக்குரிய தேர்வு மையங்களில் தரைதளத்தில் எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 27 பாடப்பிரிவுகளில் எழுதப்படும், இத்தேர்வில் 7,345 பேர் கம்ப்யூட்டர் சயன்ஸ், வணிகவியலில் 6,020 பேரும், 5,516 பேர் உயிரி அறிவியலிலும் தேர்வு எழுதுகின்றனர்.
மிகக்குறைந்த அளவாக, தத்துவவியலில் 62 பேரும், இசைப்பாடத்தில் 93 பேரும் எழுதுகின்றனர். இவ்வாறு, அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

>>>RTE ACT 2009, RTE RULES 2011 & RTE RELATED G.O.s

>>>ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட கட்டட பணிகள்: தலைமையாசிரியர் "போர்க்கொடி

பள்ளிகளில், அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம். எஸ்.ஏ.,) திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளுக்கான பொறுப்பில் இருந்து, தலைமையாசிரியர்களை விடுவிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2009ல் இருந்து, மத்திய அரசு நிதி மூலம் செயல்படும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் சார்பில், மக்கள் தொகை, பள்ளிகளிடையே உள்ள தூரம் போன்ற சில வரையறைகள் படி, நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதன்படி, 2009-2010ல் 200, 2010-2011ல் 344, 2011-2012ல் 710 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இதில், முதலில் உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளுக்கு மட்டும், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்படி, கட்டட பணிகளை தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர், வார்டு/ஒன்றிய உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் கழக (பி.டி.ஏ.,) உறுப்பினர், என்.ஜி. ஓ.,வை சேர்ந்த ஒருவர் என, "ஐவர் குழு' கண்காணிக்க வேண்டும். இதில், காசோலை "பவர்', தலைமையாசிரியர் மற்றும் பி.டி.ஏ., உறுப்பினரிடம் அளிக்கப்பட்டது. ஆனால், தலைமையாசிரியர்களுக்கும், பி.டி.ஏ., உறுப்பினருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பல இடங்களில் கட்டட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. மேலும், கட்டுமான தொழில் நுட்பம் தெரியாததால், ஒப்பந்ததாரர் கட்டியதுதான் கட்டடம். அவை தரமானதாக இல்லாவிட்டால் அதற்கு, பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கும், நிம்மதியாக ஓய்வு பெறமுடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் தலைமையாசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில பொது செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: ஒரு பள்ளிக்கு ஒதுக்கப்படும் 49 லட்சம் ரூபாயில், 13 வகுப்பறைகள் கட்ட வேண்டும். அதற்கு 70 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதை சமாளிக்க முடியாமல் பல தலைமையாசிரியர்கள் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர். எனவே, 2010-2011, 2011-2012ல் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகளை, தலைமையாசிரியர்களிடம் அளிக்க கூடாது. அதற்கென தனி வாரியம் அமைத்தோ அல்லது பொதுப் பணித்துறை, காவலர் வீட்டு வசதி வாரியத்திடமோ ஒப்படைக்க வேண்டும். அப்படி நடந்தால், தலைமையாசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மேற்பார்வை பணிகள் பாதிக்காது. அவர்களுக்கு, தேவையில்லாத மன உளைச்சலும் ஏற்படாது, என்றார்.

>>>ஆசிரியர்கள் வருகை பதிவு எஸ்.எம்.எஸ்., திட்டத்தை மறந்த கடலூர் மாவட்ட பள்ளிகள்

கடலூர் மாவட்ட பள்ளிகளில், வருகை பதிவேட்டிற்காக எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டம் தொய்வடைந்துள்ளது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை என்ற, புகாரைத் தொடர்ந்து ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை "ஆன்-லைனில்' பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தனி குறியீட்டு எண் வழங்கி, அதன் மூலம் தேசிய தகவல் மையத்திற்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில், 1,215 தொடக்கப் பள்ளிகள், 117 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 177 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,500 பள்ளிகள் உள்ளன. கடந்த, 2011ம் ஆண்டு ஜூன், 6ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவை காலை, 10 மணிக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தேசிய தகவல் மையத்திற்கு அனுப்பி வருகின்றனர். தற்போது இந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதாவது, 1,500 பள்ளிகளுக்கு சராசரியாக, 900 பள்ளிகள் தான் தொடர்ந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றனர். கடலூர் தேசிய தகவல் மையத்திற்கு, மாவட்டம் முழுவதிலுமிருந்து, 1,100 எஸ்.எம்.எஸ்.,  வந்தன. அவற்றில், 78 எஸ்.எம்.எஸ்.,கள் தகவல் இல்லாமல் கிடைத்துள்ளன. எஸ்.எம்.எஸ்.,கள் தவறாக அனுப்பியது குறித்து தேசிய தகவல் மையம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மீதியுள்ள, 400 பள்ளிகள் எஸ்.எம்.எஸ்., அனுப்பாமல் இருந்து வருகின்றன. இந்த எஸ்.எம்.எஸ்., நகல்கள் மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, கலெக்டர் ஆகியோர்களுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணி ராஜ் கூறுகையில், "காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகளில், 1,000 பள்ளிகள் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன. கடந்த வாரம் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் தொய்வு ஏற்பட்டது. விரைவில் சரியாகி விடும். தொடர்ந்து எஸ்.எம்.எஸ்., அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

>>>"ஆங்கிலம் எளிது': அசத்தும் மாணவர்கள்!

தமிழ் பாடத்திலேயே தடுமாறும் மாணவர்களுக்கு மத்தியில், கேட்கப்படும் கேள்விகளுக்கு, ஆங்கிலத்தில் "டாண் டாண்' என பதில் அளிக்கின்றனர், எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்கள். எப்படி இவர்கள் ஆங்கிலம் கற்கின்றனர்? இவர்களோடு உரையாடியதில் இருந்து...
எங்களை ஆங்கிலம் படிக்கத் தூண்டியவர், எங்கள் வகுப்பு ஆசிரியை கனகலெட்சுமி தான். தமிழை எளிமையாக படிக்க கற்றுக் கொடுத்த, அவர் படிப்படியாக, ஆங்கில இலக்கணத்தையும் கற்று தந்தார். எந்த மொழியையும் இலக்கணத்தோடு கற்றால் தான், எழுதுவதில் பிழை வராது என்பார் ஆசிரியை. முதலில் எளிமையாக, ஒரு வாக்கியம் எழுதுவதை பற்றி சொல்லி கொடுத்தார். இப்போது, ஒவ்வொரு ஆங்கில எழுத்திலும் உள்ள பல்வேறு சொற்களைப் படிக்கும் வகுப்புகள் நடக்கின்றன. முதலில், கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. ஒரு நாளைக்கு, ஐந்து புதிய சொற்கள் என்ற கணக்கில் வகுப்புகள் நடக்கும். அந்த ஐந்து புதிய சொற்களை உச்சரிக்கும் முறை, தமிழ் அர்த்தம் சொல்லி கொடுப்பார். அடுத்த நாள் எழுத்து தேர்வு நடக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு பரிசு உண்டு. தற்போது, 200 ஆங்கில வார்த்தைகள் எங்களுக்கு தெரியும். அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தைகளை படிப்பதால், மற்றவர்கள் பேசும் போது ஓரளவுக்கு புரிகிறது. ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும், தனித்தனி அட்டவணை போட்டு, அந்த எழுத்தில் உள்ள விலங்குகள், பறவைகள், காய்கறிகள், பூக்கள் என, அனைத்து படங்களையும் ஒட்டி, அவற்றின் கீழ் அதற்கான ஆங்கில வார்த்தைகளை எழுதுவோம். வார இறுதி நாளில் நடக்கும் ஆங்கில வகுப்பில், குழுக்களாகப் பிரிந்து, வார்த்தை போட்டிகளில் ஈடுபடுவோம். எதையும் கடமையே என்று நினைக்காமல், விளையாட்டுப் போக்கிலும், கதை வடிவிலும் கற்றால், ஆங்கிலமும் எளிமையான பாடமே. எங்கள் ஆசிரியை துவக்கி வைத்த பயிற்சி இது. கற்பதற்கான அடித்தளம் சிறப்பாக அமைந்துவிட்டால் எதையுமே கற்க முடியும்.

>>>அக்டோபர் 07 [October 07]....

  • ஜேம்ஸ் குக், நியூசிலாந்தை கண்டுபிடித்தார்(1769)
  • ஜெர்மன், ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது(1949)
  • இஸ்ரேலிய அரசு, டேவிட் பென் கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது(1951)
  • ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாளுக்கான காப்புரிமம் பெறப்பட்டது(1806)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...