கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர்கள் வருகை பதிவு எஸ்.எம்.எஸ்., திட்டத்தை மறந்த கடலூர் மாவட்ட பள்ளிகள்

கடலூர் மாவட்ட பள்ளிகளில், வருகை பதிவேட்டிற்காக எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டம் தொய்வடைந்துள்ளது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை என்ற, புகாரைத் தொடர்ந்து ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை "ஆன்-லைனில்' பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தனி குறியீட்டு எண் வழங்கி, அதன் மூலம் தேசிய தகவல் மையத்திற்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில், 1,215 தொடக்கப் பள்ளிகள், 117 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 177 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,500 பள்ளிகள் உள்ளன. கடந்த, 2011ம் ஆண்டு ஜூன், 6ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவை காலை, 10 மணிக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தேசிய தகவல் மையத்திற்கு அனுப்பி வருகின்றனர். தற்போது இந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதாவது, 1,500 பள்ளிகளுக்கு சராசரியாக, 900 பள்ளிகள் தான் தொடர்ந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றனர். கடலூர் தேசிய தகவல் மையத்திற்கு, மாவட்டம் முழுவதிலுமிருந்து, 1,100 எஸ்.எம்.எஸ்.,  வந்தன. அவற்றில், 78 எஸ்.எம்.எஸ்.,கள் தகவல் இல்லாமல் கிடைத்துள்ளன. எஸ்.எம்.எஸ்.,கள் தவறாக அனுப்பியது குறித்து தேசிய தகவல் மையம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மீதியுள்ள, 400 பள்ளிகள் எஸ்.எம்.எஸ்., அனுப்பாமல் இருந்து வருகின்றன. இந்த எஸ்.எம்.எஸ்., நகல்கள் மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, கலெக்டர் ஆகியோர்களுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணி ராஜ் கூறுகையில், "காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகளில், 1,000 பள்ளிகள் எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன. கடந்த வாரம் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் தொய்வு ஏற்பட்டது. விரைவில் சரியாகி விடும். தொடர்ந்து எஸ்.எம்.எஸ்., அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - 18-05-2024 காலை 9.30மணி நிலவரப்படி ஒன்றியத்திற்குள், கல்வி மாவட்டத்திற்குள், மாவட்டத்திற்குள், மாநிலத்திற்குள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) விண்ணப்பித்துள்ளோர் விவரம்...

 ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - 18-05-2024 காலை 9.30மணி நிலவரப்படி ஒன்றியத்திற்குள், கல்வி மாவட்டத்திற்குள், மாவட்டத்திற்குள், மாநிலத்...