சமச்சீர் கல்வியில், இரண்டாம் பருவ சமூக அறிவியல் பாடப் புத்தகம்,
எழுத்துப் பிழைகளுடன் வினியோகிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும்
பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், கடந்த கல்வியாண்டு முதல், சமச்சீர்
கல்வித் திட்டம் அறிமுகமானது. இந்த ஆண்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ பாட முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
காலாண்டுத் தேர்வு முடிந்து, இம்மாதம், 4ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன;
தற்போது, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு
வருகின்றன. இதில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடப்
புத்தகத்தில், "குடியரசு' என்னும் தலைப்பிலான இரண்டாவது பாடத்தில்,
மூன்றாவது கேள்வியில், "உன் வகுப்பறைக்கான விதிமுறைகளை ஆசிரியரும்,
மாணவர்களும் சேர்ந்து உருவாக்கவும்' என்பதில், "மாணவர்' என்ற வார்த்தை,
"மானவர்' என, பிழையாக அச்சாகியுள்ளது. இதே பாடப் புத்தகத்தில், "வேத காலம்'
என்னும் தலைப்பிலான நான்காவது பாடத்தில், மூன்றாவது கேள்வியில், "வேத
காலத்தில் பெண்களின் நிலை, தற்காலத்தில் பெண்களின் நிலை
ஒப்புமைப்படுத்துக்க' என உள்ளது; "ஒப்புமைப்படுத்துக' என்பதே சரியானது.
எழுத்துப்பிழைகளுடன் சமூக அறிவியல் பாடப் புத்தகம், மாணவர்களுக்கு
வினியோகிக்கப்பட்டுள்ளது, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>ஆசிரியர் தகுதி தேர்வு: இன்று ஹால் டிக்கெட்
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு,
இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. டி.ஆர்.பி., இணையதளத்தில்,
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். ஆசிரியர் தகுதித் தேர்வை
நடத்துவதற்கான அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை, 12ம் தேதி
நடந்த தேர்வில், 6 .76 லட்Œம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்; 2, 448 பேர்
மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால்,
தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், அக்டோபர், 3ம் தேதி, மறுபடியும் தேர்வு
எழுதலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில்,
இத்தேர்வில், ஜூலைக்கு பின், பி.எட்., முடித்தவர்களையும் அனுமதிக்க
வேண்டும் என, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், "தேர்வுக்கு
இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த
தகுதித் தேர்வு, அக்டோபர், 14ம் தேதிக்கு மாற்றப்படுகிறது' என, ஐகோர்ட்
உத்தரவிட்டது. அதன்படி, தேர்வு எழுதுபவர்களுக்கு விண்ணப்பங்கள்
வினியோகிக்கப்பட்டன. புதிதாக தேர்வெழுத, 17 ஆயிரம் பேர் விண்ணப்பம்
செய்தனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று முதல் வழங்கப்படுகிறது.
ஹால் டிக்கெட்டை, டி.ஆர்.பி., இணையதளத்தில் www.trb.tn.nic.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட், எக்காரணம் கொண்டும், வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாது.
தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து மட்டுமே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழைய விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட் வீட்டுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

>>>விரிவுரையாளர் தகுதி தேர்வு: 58 ஆயிரம் பேர் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் நேற்று நடந்த, விரிவுரையாளர் தகுதி தேர்வில், 58ஆயிரம் பேர் பங்கேற்றனர். அரசு
கல்லூரிகளில், காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப, மாநில
அளவிலான தகுதித் தேர்வு, (செட்) நேற்று நடந்தது. இத்தேர்வை எழுத, இணையதளம்
மூலம், 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
இதில், 58 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடந்த தேர்வில், பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். இவர்களுக்கான தகுதித் தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இதற்கென, மாநிலம் முழுவதும், 76 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு குறித்து, முதன்மை செயலர் ஸ்ரீதர் கூறுகையில், ""அதிகபட்சமாக சென்னையில், 12 மையங்களில், 10,508 பேர் தேர்வு எழுதினர். திருச்சியில், 9,812 பேரும், சேலத்தில், 7,344 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்,'' என்றார்.

>>>2 ஆண்டுகளில் 52 பொறியியல் கல்லூரிகள் மூடல்
தொழில் முறை கல்விக்கு ஒரு பொற்காலம் என்பதை குறிப்பிடுகையில் புதிதாக
நூறு கல்வி நிறுவனங்கள் உருவாகின்றன. அதே வேளையில் ஆண்டு தோறும் ஒரு லட்சம்
இடங்கள் உருவாக்கப்படுகின்றன.இது ஒரு புறம் இருக்க பத்து ஆண்டுகளுக்கு
முன் தொழில்முறை கல்வி இந்த அளவு இருந்தது இல்லை. இந்நிலையில் இந்தியா
முழுவதிலும் 2011லிருந்து 225 பி-கிரேடு பள்ளிகளும் 50பொறியல் கல்லூரிகளும்
மூடிவிட்டன என தெரியவந்துள்ளது.
>>>பறந்தாலும் விட மாட்டேன்: இன்று விமானப்படை தினம்
இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, மற்ற நாடுகளின் வான்
வெளித் தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாக்கிறது. இது 1932 அக்., 8ல்
ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.
இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக, அக்., 8ம் தேதி தேசிய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள் தாமாக முன்வந்து விமானப்படையில் சேர வேண்டும் என்பதை இத்தினம் நினைவுபடுத்துகிறது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, இரண்டாம் உலகப்போரில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது. 1947ல் நாடு சுதந்திரம் பெற்ற பின் இந்தியா ஐந்து முறை(பாகிஸ்தானுடன் 4, சீனாவுடன் 1) போரில் ஈடுபட்டது. இந்த ஐந்து போரிலும் இந்திய விமானப்படை ஈடுபட்டது.
இந்திய விமானப்படையில், 1,27,000 வீரர்கள் பணி புரிகின்றனர். 1361 போர் விமானங்கள் உள்ளன. பைட்டர்ஸ், டிரைனர்ஸ், டிரான்ஸ்போர்ட்ஸ், ஹெலிகாப்டர், மைக்ரோ லைட்ஸ், அல்ட்ரா லைட்ஸ் கிளைடர்ஸ் போன்ற பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

நான்காவது இடம்:
பாதுகாப்பு
துறையில் சாதித்தவர்களுக்கு, வழங்கப்படும் விருதுகளில், உயரிய விருது
"பரம் வீர் சக்ரா' விருது. நாட்டின் முதல் போர் விமானம் "வெஸ்ட்லேன்ட்
வாபிதி'. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4வது பெரிய
விமானப்படையாக இந்திய விமானப்படை திகழ்கிறது. உயர் தொழில்நுட்பங்கள் ,
சிறப்பு வாய்ந்த போர் விமானங்கள் ஆகியவற்றை விமானப்படை கொண்டுள்ளது.
>>>அக்டோபர் 08 [October 08]....
- இந்திய விமானப் படை தினம்
- பெரு கடற்படை தினம்
- கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்(1959)
- இந்திய விமானப்படை நிறுவப்பட்டது(1932)
- ஜெர்மனி, மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது(1939)
>>>"சரியான திசையில், சரியான வேகத்தில் சென்றால் வெற்றி"- மயில்சாமி அண்ணாதுரை
"சரியான திசையில், சரியாக வேகத்தில், சரியான நேரத்தில் சென்றால்தான்
வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்" என, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
பேசினார்.
திருப்பூர், பள்ளியில், சூரிய சக்தி மின் உற்பத்தி
பிரிவை துவக்கி வைத்து, மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: ஒருவர் சிறப்பாக
செயல்பட்டால், அவரை தாராளமாக பாராட்ட வேண்டும்; தவறு செய்தால், கனிவாக
சுட்டிக் காட்ட வேண்டும். ஒலிம்பிக் போட்டியில், ஒருவர் தான் கோப்பை வெல்ல
முடியும். ஆனால் பள்ளி தேர்வில் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற
முடியும்.
நான்கு லட்சம் கி.மீட்டர் தூரத்தில் உள்ள நிலவை அடைய, சந்திராயனை
வினாடிக்கு ஒரு கி.மீ., வேகத்துக்கும் அதிகமாக செலுத்த வேண்டும்; சரியான
திசை, சரியான வேகம், சரியாக நேரத்தில் சென்றதால்தான் அது நிலவை அடைய
முடிந்தது. அதுபோல் நமது குறிக்கோளை அடைய, சரியான நேரத்தையும், சரியான
வேகத்தையும் பயன்படுத்த வேண்டும்.
அதற்கான சந்தர்ப்பங்கள் இளைய தலைமுறைக்கு நிறையவே உள்ளது. எந்த துறையாக
இருந்தாலும் அதில் வெற்றி பெற முடியும். சரியான பதில்களை பெற, சரியான
கேள்விகளை கேட்க தெரிந்திருக்க வேண்டும்; அப்போதுதான் அந்த கேள்விகள்,
வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Disciplinary action against panchayat union middle school teacher engaged in political party work
அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை... அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட சேலம் அரியா...