கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>விரிவுரையாளர் தகுதி தேர்வு: 58 ஆயிரம் பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த, விரிவுரையாளர் தகுதி தேர்வில், 58ஆயிரம் பேர் பங்கேற்றனர். அரசு கல்லூரிகளில், காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப, மாநில அளவிலான தகுதித் தேர்வு, (செட்) நேற்று நடந்தது. இத்தேர்வை எழுத, இணையதளம் மூலம், 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
இதில், 58 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடந்த தேர்வில், பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். இவர்களுக்கான தகுதித் தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இதற்கென, மாநிலம் முழுவதும், 76 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு குறித்து, முதன்மை செயலர் ஸ்ரீதர் கூறுகையில், ""அதிகபட்சமாக சென்னையில், 12 மையங்களில், 10,508 பேர் தேர்வு எழுதினர். திருச்சியில், 9,812 பேரும், சேலத்தில், 7,344 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்,'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...