"மொழி பெயர்ப்பின் மூலம் நாம் வேற்றுமையை போக்கவேண்டும்,'' என,
தமிழ்நாடு தேர்வாணைய குழு தலைவர் நடராஜ் பேசினார். நல்லி சின்னசாமி செட்டி
நிறுவனம், திசை எட்டு மொழியாக்க காலாண்டிதழ் ஆகியவை இணைந்து இந்த ஆண்டில்,
சிறந்த மொழியாக்கப் படைப்பாளிகள், 14 பேருக்கு விருது வழங்கியுள்ளன.
அதற்கான விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழிலிருந்து
வங்காளிக்கும், வங்காளியிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்த,
சு.கிருஷ்ணமூர்த்தி, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து
ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்துள்ள ராஜரத்தனம் ஆகியோருக்கு வாழ்நாள்
சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. குறுந்தொகையை ஆங்கிலத்தில் மொழியாக்கம்
செய்த தட்சணாமூர்த்தி, சிவகுமார், ராமன்ராஜா, சின்னத்தம்பி முருகேசன்,
மகாதேவன், கிருட்டிணமூர்த்தி, பானுமதி, மாரியப்பன், பாலசுப்பிரமணியன்,
குளச்சல்.யூசுப், ஜெயஸ்ரீ, ஸ்டான்லி ஆகியோருக்கு விருதுகளை தொழிலதிபர்
நல்லி குப்புசாமி வழங்கினார். மேனகா காந்தி எழுதிய ஆங்கில நூலினை தமிழில்,
"மரங்களின் கதைகள்' என்ற தலைப்பில் சுப்ரபாலன் மொழிபெயர்த்துள்ளார்.
நிகழ்ச்சியின் போது இந்த நூலை நல்லி குப்புசாமி வெளியிட தமிழ்நாடு
தேர்வாணைய குழுத் தலைவர் நடராஜ் பெற்றுக்கொண்டார். அவர் பேசுகையில்,
""மொழியில் எப்போது வேற்றுமை வந்தது என்றால், மொழி தோன்றி பேசியபோதுதான்
வேற்றுமை வந்தது. இதை போக்க வேண்டுமென்றால் வேற்று மொழி நூல்களை தமிழில்
மொழிபெயர்ப்பதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். திசை எட்டும்
விழாவில், திசை எட்டும் எட்டி விட்டது. அதேபோல மற்ற நூல்கள் அங்கிருந்து
கொண்டு வந்ததைப்போல, இங்கு உள்ள நூல்களை மற்ற மொழிகளுக்கு கொண்டு
செல்லவேண்டும்,'' என்றார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>6,500 மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் :நிதிஉதவி தந்து அரசு உதவி
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல
கல்லூரி விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலை
மேம்படுத்தும் பயிற்சிகளுக்கு, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், 6,500 மாணவ, மாணவியர்
பயனடைவர். தமிழக அரசின் செய்திக்குறிப்பு: அரசு விடுதியில் தங்கி படிக்கும்
மாணவர்களில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, முதல்
மூன்று இடங்களை பெறும், சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுதொகை,
3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. "பிளஸ் 2'
வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்று, முதல் மூன்று இடங்களை பெறும்,
சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை, 6,000, 4,000 மற்றும் 2,000
ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.. முஸ்லிம் சமுதாய மக்களின் வாழ்வை
மேம்படுத்த வழங்கப்படும், 10 லட்சம் ரூபாய் மானிய தொகை, 20 லட்சம் ரூபாயாக
உயர்கிறது. இதற்கு, மூன்று கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டில், பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி
விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, 4,200 இரண்டடுக்கு இரும்பு
கட்டில்கள் வழங்கப்படும். குளிர்பிரதேச பகுதியில் உள்ள, இரு
பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதியில் படிக்கும், 100 மாணவர்களுக்கு,
மரத்திலான இரண்டடுக்கு, 50 கட்டில்கள் வழங்கப்படும். இவைகளுக்கு, நான்கு
கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல
கல்லூரி விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலை
மேம்படுத்த, பயிற்சிகளை நடத்த, இரண்டு கோடி ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது. 160 விடுதிகளில் உள்ள, 6,550 மாணவர்கள் ஆங்கில
பேச்சாற்றல் பயிற்சி பெற்று பயனடைவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
>>>அரசு பள்ளிகளில் அடுத்தாண்டு ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ். வருகைபதிவேடு முறை அமல்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல்
ஆசிரியர்களின் வருகையை, எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து, அதிகாரிகளுக்கு
அனுப்பும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் வருகை குறித்து, பதிவு செய்ய, மாநிலம்
முழுவதும் ஒரே மாதிரி முறையை அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி, ஒவ்வொரு
பள்ளியிலும் தலைமை ஆசிரியர், காலை 9:30 மணிக்கு, பள்ளிக்கு வந்த
ஆசிரியர்களின் வருகை குறித்து, அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அல்லது
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிப்பர். இது
கம்ப்யூட்டர் மூலம் ,தானாகவே கல்வி துறை அலுவலகத்தில் பதிவாகிவிடும். ஒரு
பள்ளியின் ஆசிரியர்கள் வருகை குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி,
தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள "பாஸ்வேர்ட்' மூலம் கம்ப்யூட்டரில் பார்த்து
தெரிந்து கொள்ளலாம். இதே போல், கல்வி துறை இயக்குனர் வரை கொடுக்கப்பட்டுள்ள
"பாஸ்வேர்ட்' மூலம், தமிழகத்தில் எந்த ஊரிலும் உள்ள பள்ளி ஆசிரியர்கள்
வருகை குறித்து, சென்னையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். "இம்முறை தற்போது
தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த
கல்வியாண்டிலிருந்து, அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வர உள்ளது' என
கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
>>>எழுத்துப் பிழைகளுடன் இரண்டாம் பருவ பாடபுத்தகம்
சமச்சீர் கல்வியில், இரண்டாம் பருவ சமூக அறிவியல் பாடப் புத்தகம்,
எழுத்துப் பிழைகளுடன் வினியோகிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும்
பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், கடந்த கல்வியாண்டு முதல், சமச்சீர்
கல்வித் திட்டம் அறிமுகமானது. இந்த ஆண்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ பாட முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
காலாண்டுத் தேர்வு முடிந்து, இம்மாதம், 4ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன;
தற்போது, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு
வருகின்றன. இதில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடப்
புத்தகத்தில், "குடியரசு' என்னும் தலைப்பிலான இரண்டாவது பாடத்தில்,
மூன்றாவது கேள்வியில், "உன் வகுப்பறைக்கான விதிமுறைகளை ஆசிரியரும்,
மாணவர்களும் சேர்ந்து உருவாக்கவும்' என்பதில், "மாணவர்' என்ற வார்த்தை,
"மானவர்' என, பிழையாக அச்சாகியுள்ளது. இதே பாடப் புத்தகத்தில், "வேத காலம்'
என்னும் தலைப்பிலான நான்காவது பாடத்தில், மூன்றாவது கேள்வியில், "வேத
காலத்தில் பெண்களின் நிலை, தற்காலத்தில் பெண்களின் நிலை
ஒப்புமைப்படுத்துக்க' என உள்ளது; "ஒப்புமைப்படுத்துக' என்பதே சரியானது.
எழுத்துப்பிழைகளுடன் சமூக அறிவியல் பாடப் புத்தகம், மாணவர்களுக்கு
வினியோகிக்கப்பட்டுள்ளது, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
>>>ஆசிரியர் தகுதி தேர்வு: இன்று ஹால் டிக்கெட்
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு,
இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. டி.ஆர்.பி., இணையதளத்தில்,
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். ஆசிரியர் தகுதித் தேர்வை
நடத்துவதற்கான அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை, 12ம் தேதி
நடந்த தேர்வில், 6 .76 லட்Œம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்; 2, 448 பேர்
மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால்,
தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், அக்டோபர், 3ம் தேதி, மறுபடியும் தேர்வு
எழுதலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில்,
இத்தேர்வில், ஜூலைக்கு பின், பி.எட்., முடித்தவர்களையும் அனுமதிக்க
வேண்டும் என, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், "தேர்வுக்கு
இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த
தகுதித் தேர்வு, அக்டோபர், 14ம் தேதிக்கு மாற்றப்படுகிறது' என, ஐகோர்ட்
உத்தரவிட்டது. அதன்படி, தேர்வு எழுதுபவர்களுக்கு விண்ணப்பங்கள்
வினியோகிக்கப்பட்டன. புதிதாக தேர்வெழுத, 17 ஆயிரம் பேர் விண்ணப்பம்
செய்தனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று முதல் வழங்கப்படுகிறது.
ஹால் டிக்கெட்டை, டி.ஆர்.பி., இணையதளத்தில் www.trb.tn.nic.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட், எக்காரணம் கொண்டும், வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாது.
தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து மட்டுமே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழைய விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட் வீட்டுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
ஹால் டிக்கெட்டை, டி.ஆர்.பி., இணையதளத்தில் www.trb.tn.nic.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட், எக்காரணம் கொண்டும், வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாது.
தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து மட்டுமே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழைய விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட் வீட்டுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
>>>விரிவுரையாளர் தகுதி தேர்வு: 58 ஆயிரம் பேர் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் நேற்று நடந்த, விரிவுரையாளர் தகுதி தேர்வில், 58ஆயிரம் பேர் பங்கேற்றனர். அரசு
கல்லூரிகளில், காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப, மாநில
அளவிலான தகுதித் தேர்வு, (செட்) நேற்று நடந்தது. இத்தேர்வை எழுத, இணையதளம்
மூலம், 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
இதில், 58 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடந்த தேர்வில், பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். இவர்களுக்கான தகுதித் தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இதற்கென, மாநிலம் முழுவதும், 76 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு குறித்து, முதன்மை செயலர் ஸ்ரீதர் கூறுகையில், ""அதிகபட்சமாக சென்னையில், 12 மையங்களில், 10,508 பேர் தேர்வு எழுதினர். திருச்சியில், 9,812 பேரும், சேலத்தில், 7,344 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்,'' என்றார்.
இதில், 58 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடந்த தேர்வில், பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். இவர்களுக்கான தகுதித் தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இதற்கென, மாநிலம் முழுவதும், 76 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு குறித்து, முதன்மை செயலர் ஸ்ரீதர் கூறுகையில், ""அதிகபட்சமாக சென்னையில், 12 மையங்களில், 10,508 பேர் தேர்வு எழுதினர். திருச்சியில், 9,812 பேரும், சேலத்தில், 7,344 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்,'' என்றார்.
>>>2 ஆண்டுகளில் 52 பொறியியல் கல்லூரிகள் மூடல்
தொழில் முறை கல்விக்கு ஒரு பொற்காலம் என்பதை குறிப்பிடுகையில் புதிதாக
நூறு கல்வி நிறுவனங்கள் உருவாகின்றன. அதே வேளையில் ஆண்டு தோறும் ஒரு லட்சம்
இடங்கள் உருவாக்கப்படுகின்றன.இது ஒரு புறம் இருக்க பத்து ஆண்டுகளுக்கு
முன் தொழில்முறை கல்வி இந்த அளவு இருந்தது இல்லை. இந்நிலையில் இந்தியா
முழுவதிலும் 2011லிருந்து 225 பி-கிரேடு பள்ளிகளும் 50பொறியல் கல்லூரிகளும்
மூடிவிட்டன என தெரியவந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...