கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

"குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு நடக்கிறது. 2009ல் நடந்த குரூப்-2 தேர்வில், பணியில் சேராதவர்களால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில், 150 காலி பணியிடங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்வு வாரியம் நிரப்பியுள்ளது. அதேபோல், வி.ஏ.ஓ., தேர்வில் நிரப்பப்படாத 330 பணியிடங்களையும், காத்திருப்போர் பட்டியலில் இருந்து டி.என்.பி.எஸ்.சி நிரப்பியுள்ளது. இந்த விவரங்களை, தேர்வாணைய இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

>>>டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி: "ரேங்க்' பட்டியல் மாறுகிறது

ஆசிரியர் தகுதி தேர்வு என, அழைக்கப்படும் "டி.இ.டி.,' தேர்வில், தேர்ச்சி பெற்ற, 2,448 பேரின், "ரேங்க்' பட்டியல், புதிய விதிமுறைகளின்படி, மாற்றி அமைக்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். "இவர்களது பணி நியமனம், பணி நியமனத்திற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்தது. அதன்படி, புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, புதிய, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனால், தேர்வு பெற்றவரின், ரேங்க் இடம் மாறலாம்; ஆனால், வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய தேர்வுப் பட்டியல், ஓரிரு நாளில் வெளியிடப்படும்.புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும், சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வரும்  வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையிலேயே (டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்) நடக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

>>>ஆசிரியர் நியமனத்திற்கு புதிய விதிமுறைகள்: "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 முதல், பட்டப் படிப்பு வரையில் பெற்ற மதிப்பெண் மற்றும் டி.இ.டி., தேர்வில் பெற்ற மதிப்பெண்களை, "வெயிட்டேஜ்' அடிப்படையில் கணக்கிட்டு, இனி பணி நியமனம் நடக்கும்.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டப்படி, 1 முதல், 8 வகுப்பு வரை, பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலையில், டி.இ.டி., தேர்வை, டி.ஆர்.பி., நடத்தியது. 6.5 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தோற்றவர்களுக்கு, மறுதேர்வு அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதில் வெற்றி பெறுபவரை, பணி நியமனம் செய்ய, தனி வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், நான்கு பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, இரண்டு முறை கூடி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, புதிய விதிமுறைகளை, அரசுக்கு பரிந்துரை செய்தது. இதை ஏற்று, புதிய நியமன வழிமுறைகள் தொடர்பாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்:
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "வெயிட்டேஜ்' மதிப்பெண்களாக, 15ம்; ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "வெயிட்டேஜ்' மதிப்பெண்களாக, 25ம் கணக்கிட்டு வழங்கப்படும். இத்துடன், டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், அதிகபட்சமாக, 60க்கு கணக்கிட்டு வழங்கப்படும். இந்த வகையில், 100 மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
பட்டதாரி ஆசிரியர்:
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண், 10; பட்டப் படிப்பிற்கு, 15; பி.எட்.,டுக்கு, 15 மற்றும் டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண் என, 100 மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில் தேர்ச்சி பெறுபவர், பணி நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>நலந்தானா... உடலும் உள்ளமும் நலந்தானா...: இன்று உலக மனநல தினம்

உலக மனநல தினம், 1992 முதல் அக்., 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு, ஆறுதல் அளிக்க வேண்டிய தினம். மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு, உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம். உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது. நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, மதுப் பழக்கம், பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம். மனநலம் பாதிக்கப்பட்டால் உடல் நலனும் பாதிக்கப்படும் என்பதை மறக்க கூடாது. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது, சவாலாக உள்ளது. நீண்டகால சிகிச்சை மூலமே, அதுவும் ஓரவுளக்குத்தான் இதை தீர்க்க முடியும். இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை. கல்லூரிகளில் மனநிலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கருணை காட்டலாமே: மனநலம் பாதித்தவர்களை, தீண்டத்தகாதவர் போல பார்ப்பது பிரச்னையை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் வாழ்வோர், அதிகம் படித்தவர்களிடம் இப்பழக்கம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை மதிப்பது, சிகிச்சை அளிப்பது, அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவது போன்றவை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாமல் உள்ளது. மனநோயை பேய் பிடித்திருப்பதாக நினைக்கின்றனர். இதனால் மை வைத்தல், மருந்து வைத்தல், பேய் விரட்டுதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இவை மூட நம்பிக்கைகள்.

பாதிக்காமல் இருக்க: மனநலம் பாதிக்காமல் இருக்க, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இசை கேட்பது, விளையாடுவது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது, உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்வது நல்லது. மற்றவர்களுடன் பழக வேண்டும். தனிமையை தவிர்க்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டால் டாக்டரை அணுகுவது போல், மனநலம் பாதிக்கப்பட்டாலும் அணுக வேண்டும்.

>>>அக்டோபர் 10 [October 10]....

  • உலக மனநல தினம்
  • சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்
  • நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்(1888)
  • இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் பிறந்த தினம்(1906)
  • தமிழறிஞர் மு.வரதராசன் நினைவு தினம்(1974)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...