கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர் நியமனத்திற்கு புதிய விதிமுறைகள்: "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 முதல், பட்டப் படிப்பு வரையில் பெற்ற மதிப்பெண் மற்றும் டி.இ.டி., தேர்வில் பெற்ற மதிப்பெண்களை, "வெயிட்டேஜ்' அடிப்படையில் கணக்கிட்டு, இனி பணி நியமனம் நடக்கும்.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டப்படி, 1 முதல், 8 வகுப்பு வரை, பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலையில், டி.இ.டி., தேர்வை, டி.ஆர்.பி., நடத்தியது. 6.5 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தோற்றவர்களுக்கு, மறுதேர்வு அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதில் வெற்றி பெறுபவரை, பணி நியமனம் செய்ய, தனி வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், நான்கு பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, இரண்டு முறை கூடி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, புதிய விதிமுறைகளை, அரசுக்கு பரிந்துரை செய்தது. இதை ஏற்று, புதிய நியமன வழிமுறைகள் தொடர்பாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்:
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "வெயிட்டேஜ்' மதிப்பெண்களாக, 15ம்; ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "வெயிட்டேஜ்' மதிப்பெண்களாக, 25ம் கணக்கிட்டு வழங்கப்படும். இத்துடன், டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், அதிகபட்சமாக, 60க்கு கணக்கிட்டு வழங்கப்படும். இந்த வகையில், 100 மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
பட்டதாரி ஆசிரியர்:
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண், 10; பட்டப் படிப்பிற்கு, 15; பி.எட்.,டுக்கு, 15 மற்றும் டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண் என, 100 மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில் தேர்ச்சி பெறுபவர், பணி நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...