- நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)
- பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)
- டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)
- கம்ப்யூட்டரை கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)
- அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>அக்டோபர் 18 [October 18]....
>>>குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியில்லாத பள்ளிகளின் விவரங்கள் -தொடக்கக்கல்வித்துறை சேகரிப்பு
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:026095/கே2/2012, நாள்:17-10-2012ன் படி குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியில்லாத பள்ளிகளின் விவரங்களைச் சேகரித்து 31-10-2012க்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
>>>பகுதிநேரப் பயிற்றுநர்களின் கோரிக்கைகளுக்கு எஸ்.எஸ்.ஏ. மாநிலத் திட்ட இயக்குநரின் தெளிவுரை
அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2254/அ5/பநேப/SSA/2012, நாள்:17-10-2012ன் படி பகுதிநேரப் பயிற்றுநர்களின் கோரிக்கைகளுக்கு தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி
- பகுதிநேரப் பயிற்றுநர்களை இடம் மாறுதல் செய்ய வழிவகை ஏதுமில்லை.
- பகுதிநேரப் பயிற்றுநர்களை முழுநேரப் பயிற்றுநர்களாக மாற்றுவது அரசின் கொள்கை முடிவாகும்.
- அவர்களுக்குரிய பணியை மட்டும் செய்தால் போதுமானது.
- அவர்களின் ஊதியத்தைத் தாமதமின்றி வழங்க வேண்டும்.
எனத் தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
>>>கல்வித்துறையில் தகவல் மேலாண்மை :ஆன்லைன் முறை டிசம்பரில் துவக்கம்
தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த
தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை,
ஆன்லைனில் பெறலாம்.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி
திட்டம் இணைந்து, கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான தகவல் சேகரிக்கும்
பணியில் இறங்கியுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும், பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு, படிவங்கள் வழங்கப்பட்டு, பள்ளிகள் குறித்து தகவல்
சேகரித்தனர். இப்பணி நேற்றுடன் முடிவடைந்தது. வட்டார மற்றும் மாவட்ட அளவில்
சரிபார்க்கப்பட்டு, வரும் 21ம் தேதி, கம்பயூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட
உள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு நவ., 30க்குள் கம்ப்யூட்டர்
பதிவுகள் அனுப்பப்படும். டிசம்பர் முதல், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின்
விபரங்கள் குறித்து, www.tn.nic.gov.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் www.communication.tn.schools.gov.in
என்ற இணையதளம் மூலம், கல்வித்துறை வட்டார அலுவலர்கள் மற்றும் மாவட்ட
அலுவலர்கள் தங்களுக்குள், தகவல் பரிமாற்றம் செய்யவும், மாநில அலுவலர்கள்
நேரடியாக பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் தொடர்பு கொள்ளவும் முடியும்.
>>>உயர் வருமான பதவிகள் நிரம்பின: குரூப் - 2 கலந்தாய்வில் ருசிகரம்
குரூப் - 2 பணி ஒதுக்கீடு கலந்தாய்வு துவங்கிய, முதல் இரண்டு நாளிலேயே,
சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட,
"பசை'யுள்ள பதவிகள் நிரம்பின.குரூப் - 2 தேர்வில் வெற்றி பெற்ற, 6,949
பேரில், 3,472 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு,
நேற்று முன்தினம், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் துவங்கியது.குரூப் - 2
நிலையில், அரசின் பல்வேறு துறைகளில், பல்வேறு பணிகள் இருந்தாலும்,
சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர், வணிக வரித்துறையில், உதவி வணிகவரி அலுவலர்
உள்ளிட்ட சில வகை பணியிடங்களே, "டாப்'பில் இருக்கின்றன. இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், இதைப்
பிடிப்பதற்குத் தான், தேர்வர் மத்தியில், கடும் போட்டி நிலவுகிறது.
கலந்தாய்வு துவங்கிய முதல் நாளில், 640 பேர் அழைக்கப்பட்டனர்; ஒன்பது பேர்
வரவில்லை.சார்பதிவாளர் பதவியில், ஏழு இடங்களும், நகராட்சி கமிஷனர்
பதவியில், ஐந்து இடங்களும், முதல் நாளே நிரம்பின. முதல், 10 இடங்களைப்
பிடித்தவர்கள், இந்த பதவிகளை அள்ளிச் சென்றனர். உதவி வணிக வரி அலுவலர் பதவிகளும், நேற்று முன்தினம் கணிசமாக நிரம்பின.
மொத்தத்தில், முதல் நாள், 605 பேர், பணி ஒதுக்கீடு பெற்றனர். இரண்டாம்
நாளான நேற்றும், 640 பேர் அழைக்கப்பட்டனர்; 18 பேர் வரவில்லை. மீதம்
இருந்தவர்களில், 526 பேர், பணி ஒதுக்கீடு ஆணை பெற்றனர். இரு நாளும்
சேர்த்து, 1,131 பேர், பணி ஒதுக்கீடு ஆணை பெற்றனர். இவர்களால், 125 உதவி
வணிகவரி அலுவலர் பணியிடங்கள், 281 உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்கள்
மற்றும் நிதித்துறையில், 44, உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்கள் ஆகிய
அனைத்தும் நிரம்பி விட்டன. பசை நிறைந்த பதவிகள், இரண்டே நாளில் நிரம்பியதைக் கண்டு, தேர்வாணைய
வட்டாரம், வியப்பில் ஆழ்ந்தது. "கலந்தாய்விற்கு வராமல், தேர்வர்,
"ஆப்சென்ட்' ஆனால், அடுத்த நாளில் கலந்து கொள்ளலாம்; ஆனால், முதல் நாள்
சீனியாரிட்டியை கேட்க முடியாது. கலந்தாய்விற்கு வரும் நாளன்று, முதலில்
அழைக்கப்பட்டு, அவருக்குரிய பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும்' என,
தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன
>>>பட்டதாரி ஆசிரியர் விரைவில் நியமனம்
தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்,
விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.கடந்த, 2008-09, 09-10, 10-11
ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, 319 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில், டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பை
நடத்தியது. அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியலையும் வெளியிட்டது. இவர்களில், பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 149 பட்டதாரி ஆசிரியர், 10ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டனர். தொடக்க கல்வித்துறைக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்ட, 83 பட்டதாரி ஆசிரியர், ஒரு வாரத்திற்குள், பணி
நியமனம் செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.மதுரை மற்றும் கோவை
மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 19 பணிஇடங்கள்,
நிரப்பப்பட்டு விட்டன. இதர துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஆசிரியர்களை
நியமனம் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
>>>அனைத்துப் பள்ளிகளிலும் 6 மாதங்களில் கழிப்பறை வசதி - நிறைவேற்றுவது சாத்தியமா?
"அனைத்து வகை பள்ளிகளிலும், ஆறு மாதங்களில், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி
உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்' என, சமீபத்தில்,
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, தமிழகத்தில், ஆறு
மாதங்களுக்குள் நிறைவேற்ற முடியுமா என்பது, கேள்விக்குறியாக
உள்ளது.சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் என்ற, தன்னார்வ
அமைப்பு, தொடர்ந்த வழக்கில், "அனைத்து வகை பள்ளிகளிலும், கழிப்பறை வசதி,
குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, ஆறு மாதங்களில்
ஏற்படுத்திட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,
இம்மாதம், 3ம் தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தமிழகத்தில்,
தற்போது, பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த புள்ளி விவரங்கள்
சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள், நவம்பர் இறுதியிலோ அல்லது
டிசம்பர் முதல் வாரத்திலோ முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கணக்கெடுப்பு தகவல்கள் கிடைத்தபிறகே, எத்தனை
பள்ளிகளில், அடிப்படை வசதிகள் உள்ளன; எத்தனை பள்ளிகளில், போதிய அளவிற்கு,
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த
புள்ளி விவரங்கள் அடிப்படையில், தேவை உள்ள பள்ளிகளுக்கு, அடிப்படை வசதிகளை
நிறைவேற்ற, திட்டங்கள் தீட்டி, அரசின் அனுமதிபெற வேண்டும். அதன்பின்,
டெண்டர் விட்டு, பணிகளை நிறைவேற்ற, நடவடிக்கைஎடுக்க வேண்டும்.பட்ஜெட்
நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய திட்டங்கள் குறித்த
அறிவிப்புகள், கடைசி நேரத்தில் தனியாக வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை என,
துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே, புள்ளி விவரங்கள் அடிப்படையில், தீட்டப்படும் புதிய திட்டங்கள்
குறித்த அறிவிப்புகள், வரும் பட்ஜெட்டிலோ அல்லது பள்ளிக்கல்வி மானியக்
கோரிக்கையிலோ வெளியாகலாம். அதனால், ஆறு மாதங்களுக்குள், திட்டப்
பணிகளை முடிப்பதற்கு, நடைமுறையில் சாத்தியமில்லை என, கல்வித்துறை கை
விரிக்கிறது.இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளில், 3,769 குடிநீர் வசதிகள், 4,373
மாணவர் கழிப்பறை வசதிகள், மாணவியருக்கென, 7,262 கழிப்பறை வசதிகள், 7,907
கூடுதல் வகுப்பறைகள், 3.81 லட்சம் மீட்டரில், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர்
உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புதிட்டங்கள், 1,507 கோடி ரூபாய்
செலவில் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்படது. இப்பணிகளில், 90
சதவீதத்திற்கும் அதிகமான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை
வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த திட்டங்களை உள்ளடக்கிய பள்ளிகள் போக, மேலும்
அடிப்படை வசதிகள் தேவைப்படும் பள்ளிகள் எண்ணிக்கை, குறைவாகவே இருக்கும் என,
கல்வித்துறை எதிர்பார்க்கிறது.இந்தப் பள்ளிகளுக்கு, வரும் கல்வியாண்டில்,
தேவையான அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என, துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...