இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா,
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 20 பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர்
பதவிக்கான பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்வு டிசம்பர் மாதம்
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (IBPS) சார்பில் நடத்தப்படும் இந்த எழுத்துத் தேர்வுக்கு www.ibps.in எனும் இணையதளத்தின் மூலமாக, நவம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் ஆன்லைன் வழியாக நடத்தப்பட உள்ளது.
எழுத்தர் அல்லது வங்கி பணிகளில் பணி புரிய விரும்புபவர்கள் இந்த தேர்வினை
கட்டாயம் எழுதியிருக்க வேண்டும். தேர்வினைத் தொடர்ந்து பொது நேர்முகத்
தேர்வு IBPS ஆல் நடத்தப்படும். எழுத்துத் தேர்விற்கான அழைப்புக் கடிதத்தினை டிசம்பர் 3ம் தேதி
இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.ibps.in எனும் இணையதளத்தினை அணுகலாம்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்:கரும்பலகை, சாக்பீஸ் முறைக்கு "குட்பை'
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை
மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் "ஸ்மார்ட் கிளாஸ்'
வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திட்டத்தின்
முதல் கட்டமாக மணியகாரன்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதல்
ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின்
கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், "அமெரிக்கன் இந்தியா
பவுண்டேஷன்'(ஏ.ஐ.எப்) எனும் அமைப்பின் நிதியுதவியுடன், "டிஜிட்டல்
ஈக்குவலைசர்' எனும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகளை துவங்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.சி., வசதியுள்ள இந்த வகுப்பறைகளில் "டெல்' மற்றும்
ஏ.ஐ.எப். அமைப்பின் சார்பில் 25 கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர், டிஜிட்டல்
பிளாக்போர்டு, இன்டெர்நெட் இணைப்பு, புரொஜக்டர் உள்ளிட்ட வசதிகளும் இலவசமாக
வழங்கப்பட்டுள்ளன. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு,
கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் கோவை ஒருங்கிணைப்பாளர்
அலெக்சாண்டர் கூறியதாவது: வருங்காலங்களில் கம்ப்யூட்டர் இல்லாமல் எதையும்
செய்ய முடியாது. அப்படிப்பட்ட நவீன உலகில், மாநகராட்சிப் பள்ளிகளில்
படித்து வெளியேறும் மாணவர்களும் நிலைத்து நிற்க, அவர்களுக்கும்
கம்ப்யூட்டர் தொழில் நுட்ப அறிவு முக்கியம். ஆறாம் வகுப்பு முதலே
கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பாடங்களை கற்பிப்பதுதான்
ஸ்மார்ட் கிளாஸ் எனும் "கம்ப்யூட்டர் கிளப்' துவங்குவதன் நோக்கம். கிளப்பில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களும் அதிவேக இன்டர்நெட் இணைப்பு
வசதியுடன்,"ஒயர்ப்ரீ' முறையில் ஆசிரியரின் கம்ப்யூட்டருடன்
இணைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் தனது பாடத்துக்கென
ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒரு மணி நேரத்தை கம்ப்யூட்டர் மூலம் கற்பிக்க
வேண்டும். பாடத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட "டிவிடி', ஏற்கனவே
கம்ப்யூட்டர்களில் "லோடு' செய்யப்பட்டிருக்கும். பாடங்களை ஆசிரியர்கள்
"தொடுதிரை டிஜிட்டல் ஒயிட் போர்டின்' உதவியுடன் விளக்குவர். அதே பாடங்கள்
மாணவர்களின் கம்ப்யூட்டர்களிலும் இடம் பிடித்திருக்கும். மாணவர்களின்
கம்ப்யூட்டர்கள், ஆசிரியர் வசமுள்ள கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில்
இருக்கும். இதனால் இன்டர்நெட் இணைப்பை மாணவர்களால் தவறாக பயன்படுத்த
முடியாது. இன்டெர்நெட் இணைப்பு உள்ளதால், பாடம் தொடர்பான தகவல்கள்
மற்றும் படங்களை உடனுக்குடன் "டவுன்லோடு' செய்து படிக்கலாம். இதே வசதியுள்ள
பிற மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன், "வீடியோ கான்பிரன்ஸ்'
முறையில் பாடம் தொடர்பாக கலந்துரையாடலாம். வண்ணப் படங்கள் சகிதம் "விஷூவல்' ஆக பாடங்களை படிக்க முடிவதால், பாடத்தின்
மையக்கருத்து எளிதில் மறக்காது.ஆசிரியர்களுக்கு 56 மணி நேரம் பயிற்சி
அளிக்கப்படும். இதற்கென ஒவ்வொரு கிளப்புக்கும் தனி ஒருங்கிணைப்பாளர்
நியமிக்கப்படுவர். "சாக் அண்டு டாக்' எனும் பழைய கற்பித்தல் முறைக்கும்,
மனப்பாட கல்வி முறைக்கும் இனி "குட்பை' சொல்லி விடலாம். இத்திட்டம் பெறும்
வெற்றியின் அடிப்படையில், மீதமுள்ள பள்ளிகளிலும் துவங்கப்படும். 2014 வரை
செயல்படுத்தப்படும் இத்திட்டம், அதன் பின் மாநகராட்சி நிர்வாகத்திடம்
ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
>>>சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்: தேர்வு பட்டியல் வெளியீடு
பள்ளி கல்வித் துறையில், 1,524 சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான
தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு
உள்ளது. இதுகுறித்து, வாரியம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி கல்வித் துறையில், உடற்கல்வி,
ஓவியம், தையல் உள்ளிட்ட பிரிவுகளில், 1,524 சிறப்பு ஆசிரியர்கள்; அரசு
பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்கள்; அரசு,
"பாலிடெக்னிக்" கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட
உள்ளனர். இதற்கான, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் இன சுழற்சி அடிப்படையிலான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம், 1ம் தேதி, ஐகோர்ட்
பிறப்பித்த உத்தரவின்படி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், நிரப்பப்பட
உள்ளன. தேர்வு பட்டியலில் இடம் பெற்றோருக்கு, விரைவில் கடிதம்
அனுப்பப்படும்.
>>>அக்டோபர் 20 [October 20]....
- சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)
- கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)
- சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)
- இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது(1982)
- வீரேந்தர் சேவாக் பிறந்த தினம்(1978)
>>>அன்ன பிளவு அறுவை சிகிச்சை தொடர்புகொள்ள வேண்டுகோள்
"அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ், அன்ன
பிளவு மற்றும் மேல் உதடு பிளவு இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
அவ்வாறு அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், மாவட்ட திட்ட அலுவலகத்தை தொடர்பு
கொள்ளலாம்' என, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ்
தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ், சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான பல்வேறு உதவிகள், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதில், நடந்து முடிந்த மருத்துவ முகாமில் கண்டறியப்பட்டுள்ள அன்ன பிளவு மற்றும் மேல் உதடு பிளவு அறுவை சிகிச்சை தேவைப்படும் மாணவர்களுக்கு மேற்கொள்ள வேண்டியது அவசியம். நடப்பு கல்வி ஆண்டில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றம் ஸ்மைல் ட்ரெயின் தொண்டு நிறுவனம் சார்பில், இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை, சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி, சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனை, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், கோவை கங்கா மருத்துவமனை ஆகியவற்றில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அன்ன பிளவு மற்றும் மேல் உதடு பிளவு அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ், சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான பல்வேறு உதவிகள், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதில், நடந்து முடிந்த மருத்துவ முகாமில் கண்டறியப்பட்டுள்ள அன்ன பிளவு மற்றும் மேல் உதடு பிளவு அறுவை சிகிச்சை தேவைப்படும் மாணவர்களுக்கு மேற்கொள்ள வேண்டியது அவசியம். நடப்பு கல்வி ஆண்டில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றம் ஸ்மைல் ட்ரெயின் தொண்டு நிறுவனம் சார்பில், இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை, சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி, சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனை, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், கோவை கங்கா மருத்துவமனை ஆகியவற்றில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அன்ன பிளவு மற்றும் மேல் உதடு பிளவு அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
>>>சிறுபான்மை பள்ளிகளில் உரிமை மீறல்கள் அதிகம் : தேசிய ஆணைய குழுவிடம் புகார்
"தமிழகத்தில், தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் தான், அதிக உரிமை
மீறல்கள் நடக்கின்றன' என, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம்,
புகார் தெரிவிக்கப்பட்டது. ஆணையத்தின் சார்பில், சென்னையில் நேற்று
நடந்த விசாரணையின் போது, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி ஒருவர்,
"தமிழகத்தில், தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் தான், அதிகளவிற்கு,
குழந்தை உரிமை மீறல் சம்பவங்கள் நடக்கின்றன' என்றார். ஆணையத்தின்
தலைவர் சாந்தா சின்கா கூறுகையில், ""தனியார் பள்ளியோ, சிறுபான்மை
பள்ளியோ... எந்தப் பள்ளிகளாக இருந்தாலும், அங்கு, எத்தகைய குழந்தை உரிமை
மீறல் நடந்தாலும், அதற்கு, கல்வித் துறைக்கும், மாநில அரசுக்கும் முழு
பொறுப்பு உண்டு. அவர்கள் தான், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். பள்ளிக்
கல்வித்துறை செயலர் சபிதா பேசியதாவது: பாலியல் குற்றங்களில் ஈடுபடும்
ஆசிரியர் மீது, மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு தனி சட்டம்
இயற்றி, அமல்படுத்தியுள்ளது. சட்டத்தின்படி, சம்பந்தபட்ட ஆசிரியரை, பணியில்
இருந்து, "டிஸ்மிஸ்' செய்வதுடன், அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை ரத்து
செய்யவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, சமீபத்தில் நாமக்கல்லைச்
சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்
கூறினார். பள்ளிகளில், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள், போதிய
அளவிற்கு இல்லை என, ஆணைய தலைவரிடம் ஒருவர் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, ""ஆறு மாதங்களுக்குள், அனைத்துப் பள்ளிகளிலும், கழிப்பறை
மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என,
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில், தமிழக அரசு நடவடிக்கை
எடுத்துள்ளதா?'' என, சாந்தா சின்கா கேள்வி எழுப்பினார். இதற்கு,
பள்ளிக் கல்வி செயலர் சபிதா கூறுகையில், ""சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி,
அனைத்து வகை பள்ளிகளிலும், ஆறு மாதங்களுக்குள், முழுமையான அளவில் கழிப்பறை
வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்,''
என்றார்.
>>>கல்வி உதவி தொகைக்கான போட்டி தேர்வு அறிவிப்பு
மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கான போட்டி தேர்வு, வரும், டிசம்பர் 30ல்
நடக்கிறது. தேர்வுத்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: போட்டி தேர்வு,
அனைத்து கல்வி மாவட்ட தலைநகரங்களில் நடக்கும். இதற்கான விண்ணப்பங்களை, நவ.,
1 முதல், 9ம் தேதி வரை, www.dge.tn.nic.in
என்ற, தேர்வு துறையின் இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ,
மாணவியர், இத்தேர்வில் பங்கேற்கலாம். மாணவரின் பெற்றோர் ஆண்டு வருவாய், 2.5
லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தேர்வெழுத தகுதி வாய்ந்த மாணவ,
மாணவியர், கடந்த ஆண்டு, ஏழாம் வகுப்பு, முழு ஆண்டு தேர்வில், எஸ்.சி., -
எஸ்.டி., பிரிவு மாணவர், 50 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவு மாணவ,
மாணவியர், 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். பதிவிறக்கம்
செய்யும் விண்ணப்பத்தில், புகைப்படத்தை ஒட்டி, தேர்வு கட்டணம், 50 ரூபாய்
உடன், பள்ளி தலைமை ஆசிரியரிடம், விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு, இரு
பகுதிகளை கொண்டது. பகுதி ஒன்றில், மனத்திறன் தேர்வு; பகுதி இரண்டில்,
படிப்பறிவு தேர்வு. ஒவ்வொரு பகுதிக்கும், தலா, 90 நிமிடங்கள் வழங்கப்படும்.
படிப்பறிவு தேர்வில், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில்
இருந்து, கேள்விகள் கேட்கப்படும். அறிவியலில், 35 கேள்விகள்,
கணிதத்தில், 20, சமூக அறிவியலில், 35 என, 90 கேள்விகள் கேட்கப்படும். தலா, 1
மதிப்பெண்கள். மனத்திறன் தேர்வுக்கு, பாடப் பகுதி கிடையாது.
இப்பகுதியிலும், 90 கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு தேர்வு துறை
தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...