கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>"தமிழக பள்ளிகளுக்கு 6 மாதத்தில் கழிப்பிட வசதி"

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்னும் 6 மாதத்தில் கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், சென்னையில் நேற்று நடந்த விசாரணையின் போது, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி ஒருவர், "தமிழகத்தில், தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் தான், அதிகளவிற்கு, குழந்தை உரிமை மீறல் சம்பவங்கள் நடக்கின்றன" என்றார். இதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பேசியதாவது: பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர் மீது, மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு தனி சட்டம் இயற்றி, அமல்படுத்தியுள்ளது. சட்டத்தின்படி, சம்பந்தபட்ட ஆசிரியரை, பணியில் இருந்து, "டிஸ்மிஸ்&' செய்வதுடன், அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். பள்ளிகளில், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள், போதிய அளவிற்கு இல்லை என, ஆணைய தலைவரிடம் ஒருவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து, "ஆறு மாதங்களுக்குள், அனைத்துப் பள்ளிகளிலும், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?" என, ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா கேள்வி எழுப்பினார். இதற்கு, பள்ளிக் கல்வி செயலர் சபிதா கூறுகையில், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், ஆறு மாதங்களுக்குள், முழுமையான அளவில் கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

>>>224 பேர் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, ஆன்-லைன் வழியாக, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. பட்டதாரி ஆசிரியர், 224 பேர், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டனர். கடந்த 15ம் தேதி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, "ஆன்-லைன்" வழியாக நடந்தது. இதில், 143 பேர், பதவி உயர்வு பெற்றனர். இதைத் தொடர்ந்து, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஆன்லைன் வழியாக நடந்தது. மொத்தம், 446 பணியிடங்கள் காலியாக உள்ளன. நேற்று, 250 பணியிடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர். முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தபடி, ஆன்-லைனில், ஒவ்வொருவராக, விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.இதில், 224 பேருக்கு, பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. 26 பேர், பதவி உயர்வை, மறுத்தனர். பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், கலந்தாய்வு பணிகளை கவனித்தனர். மீதமுள்ள காலியிடங்களுக்கு, இன்று கலந்தாய்வு நடக்கிறது.

>>>"ஆதிதிராவிடர் பள்ளி விடுதிகள் மோசம்"

"தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பள்ளி விடுதிகள், மிக மோசமான, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன" என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா கூறினார். தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிகழ்ந்த, குழந்தை உரிமை மீறல்கள் குறித்த, சென்னையில் நடந்த, இரண்டு நாள் பொது விசாரணை நேற்று நிறைவடைந்தது. ஆணையத்தின் தலைவர், சாந்தா சின்கா கூறியதாவது: கல்வி உரிமை மறுத்தல், குழந்தை தொழிலாளர், உடல் ரீதியான தண்டனை அளித்து, குழந்தை கடத்தல், பாலியல் கொடுமைகள் என, 67 வழக்குகள் விசாரிக்கப் பட்டன. இதற்கு, விரைவில் தீர்வு காண, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பள்ளி விடுதிகளில், மோசமான நிலையே நிலவுகிறது. இதை அரசும், ஏற்றுக் கொண்டுள்ளது. மாநிலத்தில், முறைப்படுத்தப் படாத விடுதிகள் எண்ணிக்கை, அதிகளவில் உள்ளன. குழந்தைகள் சம்பந்தப்பட்ட, பல்வேறு துறைகள், ஒருங்கிணைந்து பணிபுரிவதில்லை. இவர்களுடன், போலீசார் ஒத்துழைப்பும் அவசியம். அப்படி ஒருங்கிணைந்து பணிபுரிந்தால் மட்டுமே, குழந்தைகள் உரிமைகள் நிலைநாட்டப்படும்.இரண்டு நாள் பொது விசாரணையில், பல்வேறு விஷயங்கள், கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பல பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி கூறியதாவது:தமிழகத்தில், கல்வி உரிமை சட்டம் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. இதை கல்வி துறை சார்ந்தவர்களும், ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக, பல பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்படும். குழந்தை திருமணம் குறித்த, ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, விரிவாக ஆய்வு செய்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு, அறிக்கை அளிக்க, சிபாரிசு செய்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

>>>குரூப்- 2 கலந்தாய்வில் 2,446 பேருக்கு உத்தரவு

குரூப்- 2 கலந்தாய்வில், நேற்று வரை, 2,446 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்கப்பட்டன. குரூப்- 2 தேர்வில் தேர்வு பெற்ற, 3,475 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்குவதற்கான கலந்தாய்வு, 15ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் துவங்கியது. நேற்று வரை முடிந்த ஐந்து நாளில், 2,446 பணிகளை நிரப்பி, அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி நாளான இன்றும் கலந்தாய்வு நடக்கிறது. இன்று, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணி ஒதுக்கீடு ஆணை பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு நாள் கலந்தாய்விலும் பங்கேற்காத தேர்வர்களுக்கு, வேறொரு நாளில் தனியாக, கலந்தாய்வு நடத்தப்படலாம் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

>>>இன்று - அக்.20: அதிரடி மன்னன் 'வீரு'வின் பிறந்தநாள்

 
 * வீரேந்தர் சேவாக், அக்டோபர் 20, 1978 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் பிறந்தார். அப்பா அரிசி வியாபாரி. தன் மகன் சிறந்த கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்ற ஆசையில் ஏழு மாத குழந்தையாக சேவாக் இருந்தபோதே பிளாஸ்டிக் பேட் வாங்கிக்கொடுத்து உள்ளார்.

* டெல்லி அரோரா வித்யா பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கிய சேவாக் தன் பன்னிரெண்டாவது வயதில் விளையாடும்போது கீழே விழுந்ததில் பற்கள் உடைந்தன. இந்த நிகழ்வு சேவாக்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளிவைக்கும் அளவுக்குத் தந்தையின் மனதை மாற்றியது. ஆனால் அந்தத் தடையை அம்மாவின் ஆதரவால் முறியடித்து 1997-ல் டெல்லி கிரிக்கெட் அணிக்குத் தேர்வானார்.

* தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பில் சேர்ந்த சேவாக் உள்ளூர் போட்டிகளில் சதம், இரட்டை சதம் என்று கலக்கியதால் 1999-ல் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களம் இறங்கியவர் ஒரு ரன்னோடு ஆட்டம் இழந்தார். பந்து வீச்சிலும் மூன்று ஓவருக்கு 35 ரன்கள் கொடுத்தார். அதன் விளைவு... இந்திய அணியில் அடுத்த வாய்ப்புக் கிடைக்க ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தார்.

* பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 54 பந்துகளுக்கு 58 ரன்கள் சேர்த்து ரசிகர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தார். இதுவே சேவாக்கின் நான்காவது ஒரு நாள் போட்டி. அப்போது தொடங்கிய அதிரடி இந்திய அணியின் தொடக்க வீரராகத் தொடர்ந்து களம் இறங்க வகை செய்தது.

* நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 68 பந்துகளுக்கு 100 ரன்கள் அடித்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதல் சதத்தைப் பதித்தார்.

* இதுவரை 245 ஒரு நாள் போட்டிகளில் 8,090 ரன்களும், 96 டெஸ்ட்களில் 8,178 ரன்களையும் குவித்து உள்ளார். ஒரு நாள் போட்டியில் இவரின் அதிகபட்ச ரன்கள் 219. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 149 பந்துகளிலேயே இந்த இமாலயச் சாதனையைச் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்சம் 319 ரன்கள்.

* ஒரு நாள் போட்டிகளில் விரைவாக சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைத் தட்டிச்சென்றவர் சேவாக். டெஸ்ட் போட்டிகளைக்கூட ஒரு நாள் போட்டிகளைப் போலவே அணுகக் கூடியவர். சர்வதேச அளவில் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன், மேற்கிந்தியத் தீவுகளின் ப்ரையன் லாரா, கிறிஸ் கெய்ல் வரிசையில் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் தொட்டவர்களுள் சேவாக்கும் ஒருவர்.

* ஆரம்ப காலத்தில் சச்சினுக்கு நிகராக கருதப்பட்டவர். தன் முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக இருப்பவர் என்று சச்சினையே முன் உதாரணமாகக் கொண்டவர். ஃபார்மில் இல்லாதபோது ஏற்படும் சறுக்கல்களைத் தனது தீவிரப் பயிற்சியால் ஏற்றங்களாக மாற்றிக் காட்டியவர்.

* 2002-ல் அர்ஜூனா விருது, 2010-ல் சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் விருது, 2010-ல் பத்மஸ்ரீ விருது என உயரிய கௌரவங்களைப் பெற்றவர். உலக அளவில் கொடுக்கப்படும் விஸ்டன் லீடிங் கிரிக்கெட்டர் விருது 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் சேவாக்குக்குக் கிடைத்து இருக்கிறது.

* 'தோல்விகளுக்கு எதிரான எனது வெற்றிகள் தொடரும்’ என்ற முழக்கத்தோடு சேவாக் ஒரு மூத்த ஆல்ரவுண்டராக இன்று வரையில் உற்சாகத்துடன் வலம் வந்துகொண்டேதான் இருக்கிறார்!

* வீரேந்தர் சேவாக், அக்டோபர் 20, 1978 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் பிறந்தார். அப்பா அரிசி வியாபாரி. தன் மகன் சிறந்த கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்ற ஆசையில் ஏழு மாத குழந்தையாக சேவாக் இருந்தபோதே பிளாஸ்டிக் பேட் வாங்கிக்கொடுத்து உள்ளார்.

* டெல்லி அரோரா வித்யா பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கிய சேவாக் தன் பன்னிரெண்டாவது வயதில் விளையாடும்போது கீழே விழுந்ததில் பற்கள் உடைந்தன. இந்த நிகழ்வு சேவாக்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளிவைக்கும் அளவுக்குத் தந்தையின் மனதை மாற்றியது. ஆனால் அந்தத் தடையை அம்மாவின் ஆதரவால் முறியடித்து 1997-ல் டெல்லி கிரிக்கெட் அணிக்குத் தேர்வானார்.

* தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பில் சேர்ந்த சேவாக் உள்ளூர் போட்டிகளில் சதம், இரட்டை சதம் என்று கலக்கியதால் 1999-ல் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களம் இறங்கியவர் ஒரு ரன்னோடு ஆட்டம் இழந்தார். பந்து வீச்சிலும் மூன்று ஓவருக்கு 35 ரன்கள் கொடுத்தார். அதன் விளைவு... இந்திய அணியில் அடுத்த வாய்ப்புக் கிடைக்க ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தார்.

* பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 54 பந்துகளுக்கு 58 ரன்கள் சேர்த்து ரசிகர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தார். இதுவே சேவாக்கின் நான்காவது ஒரு நாள் போட்டி. அப்போது தொடங்கிய அதிரடி இந்திய அணியின் தொடக்க வீரராகத் தொடர்ந்து களம் இறங்க வகை செய்தது.

* நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 68 பந்துகளுக்கு 100 ரன்கள் அடித்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதல் சதத்தைப் பதித்தார்.

* இதுவரை 245 ஒரு நாள் போட்டிகளில் 8,090 ரன்களும், 96 டெஸ்ட்களில் 8,178 ரன்களையும் குவித்து உள்ளார். ஒரு நாள் போட்டியில் இவரின் அதிகபட்ச ரன்கள் 219. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 149 பந்துகளிலேயே இந்த இமாலயச் சாதனையைச் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்சம் 319 ரன்கள்.

* ஒரு நாள் போட்டிகளில் விரைவாக சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைத் தட்டிச்சென்றவர் சேவாக். டெஸ்ட் போட்டிகளைக்கூட ஒரு நாள் போட்டிகளைப் போலவே அணுகக் கூடியவர். சர்வதேச அளவில் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன், மேற்கிந்தியத் தீவுகளின் ப்ரையன் லாரா, கிறிஸ் கெய்ல் வரிசையில் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் தொட்டவர்களுள் சேவாக்கும் ஒருவர்.

* ஆரம்ப காலத்தில் சச்சினுக்கு நிகராக கருதப்பட்டவர். தன் முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக இருப்பவர் என்று சச்சினையே முன் உதாரணமாகக் கொண்டவர். ஃபார்மில் இல்லாதபோது ஏற்படும் சறுக்கல்களைத் தனது தீவிரப் பயிற்சியால் ஏற்றங்களாக மாற்றிக் காட்டியவர்.

* 2002-ல் அர்ஜூனா விருது, 2010-ல் சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் விருது, 2010-ல் பத்மஸ்ரீ விருது என உயரிய கௌரவங்களைப் பெற்றவர். உலக அளவில் கொடுக்கப்படும் விஸ்டன் லீடிங் கிரிக்கெட்டர் விருது 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் சேவாக்குக்குக் கிடைத்து இருக்கிறது.

* 'தோல்விகளுக்கு எதிரான எனது வெற்றிகள் தொடரும்’ என்ற முழக்கத்தோடு சேவாக் ஒரு மூத்த ஆல்ரவுண்டராக இன்று வரையில் உற்சாகத்துடன் வலம் வந்துகொண்டேதான் இருக்கிறார்!

>>>இன்னும் 7 ஆண்டில் அனைத்து மாணவருக்கும் ஆகாஷ் டேப்லட்

 
"இன்னும், ஏழு ஆண்டுகளில், அனைத்து மாணவர்களுக்கும், ஆகாஷ் டேப்லட் கம்ப்யூட்டர் வழங்கப்படும்" என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், கபில் சிபல் கூறினார். டில்லியில் நேற்று, இந்தியா - நியூசிலாந்து, கல்வி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்துள்ள, நியூசிலாந்து, கல்வி, திறமை மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர், ஸ்டீவன் ஜாய்ஸ் தலைமையிலான, உயர்மட்டக் குழுவுடன், மத்திய அரசு, பல உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
இந்த நிகழ்ச்சியில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், கபில் சிபல் பேசியதாவது: நாட்டின் உயர் கல்வியை மேம்படுத்த, மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, பல மசோதாக்களை வரைந்துள்ளது. அவற்றை நிறைவேற்ற, எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால், நாட்டின் கல்வித் துறை மேம்படும். குறைந்த விலை, டேப்லட் கம்ப்யூட்டர் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில், அரசு முனைப்பாக உள்ளது. இன்னும், ஐந்து முதல், ஏழு ஆண்டுகளுக்குள், அனைத்து மாணவர்களுக்கும், இது வழங்கப்படும்.இவ்வாறு, கபில் சிபல் பேசினார்.

>>>கற்றல், கேட்டல் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய விருப்பமா?

மாணவர் பருவத்தில் அல்லது இளைஞர் பருவத்தில் உள்ள ஆண்கள் சிலருக்கு, கீச்சு குரல் இருக்கும். பெண்களைப் போல் இருக்கும் அந்த குரலால், அவர்கள் பல இடங்களில் கிண்டலுக்கு ஆளாகி, அவமானமாக உணர்வர். இதுபோன்ற நபர்களுக்கு வாய்ஸ் தெரபி சிகிச்சை தேவைப்படுகிறது.
நோக்கம்
பேசும் திறனை மேம்படுத்துவது ஒரு அம்சம் என்றால், கேட்கும் திறன் மற்றொரு அம்சம். ஆடியாலஜிஸ்ட் அன்ட் ஸ்பீச் லாங்குவேஜ் பேதாலஜிஸ்ட்(ASLP) எனப்படும் மருத்துவரின் ஒட்டுமொத்தமான நோக்கம் என்னவெனில், இந்தப் பிரச்சினையைக் கொண்டிருக்கும் அனைத்து வயது மக்களுக்கும் உதவிசெய்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே.
இந்தப் பணிக்கான வாய்ப்புகள்
ASLP நிபுணர்கள் மொத்தம் 3 பிரிவுகளில் கவனம் செலுத்துகிறார்கள்.
* ஆடியாலஜி - இது கேட்பது தொடர்பானது
* ஸ்பீச் - இது குரல் செயல்பாடுகள் தொடர்பானது
* லாங்க்வேஜ் - இது ஒருவரின் மொழி புரிந்துணர்வு திறன் தொடர்பானது.
சோதனைகளின் பேட்டரி மூலம், பிரச்சினையை அளவிட அல்லது பரிசோதிக்க, இத்துறை நிபுணர்கள் பயிற்சியளிக்கப்பட்டுள்ளார்கள். வாய்ஸ் பயிற்சிகள் மற்றும் நீண்ட கவுன்சிலிங் மூலமாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், ஒலியளவை அதிகப்படுத்த, hearing aids மற்றும் cochlear implants போன்ற சாதனைங்களை சோதனை செய்து அவற்றை பரிந்துரைக்கிறார்கள் ASLP நிபுணர்கள். இத்துறையானது, ஒரு கூட்டு செயல்பாட்டுத் துறையாகும். இத்துறை நிபுணர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், ஆகுபேஷனல் தெரபிஸ்டுகள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்படுகிறார்கள்.
பலவிதமான குறைபாடுகள்
கேட்டல் மற்றும் பேசுதல் குறைபாடுகள், பல காரணங்களால் ஏற்படுகின்றன. சில குறைபாடுகள், புற்றுநோய் மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவற்றின் பாதிப்புகளால் ஏற்படும். மேலும் சில, கேட்டல் கோளாறுகள், கற்றல் குறைபாடுகள், வளர்ச்சி தாமதங்கள், ஆடிஸம், வாய் அமைப்பில் ஏற்படும் பிளவு மற்றும் மூளை தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றால் ஏற்படுகின்றன. சிலருக்கு திக்குவாய் உள்ளிட்ட பலவிதமான பேச்சு தொடர்பான சிக்கல்கள் இருக்கலாம். சிலருக்கோ, விழுங்குதல் கூட கடினமாக காரியமாக இருக்கும்.
BASLP படிப்பு
இளநிலை ஆடியாலஜி அன்ட் ஸ்பீச் லாங்குவேஜ் பேதாலஜி(BASLP) எனப்படும் படிப்பானது, துணை மருத்துவ அறிவியல்களுக்கான மணிப்பால் கல்லூரியில் வழங்கப்படுகிறது. டெல்லியிலுள்ள எய்ம்சில், 3 வருட B.Sc in Hearing and Speech படிப்பு வழங்கப்படுகிறது. BASLP படிப்பில், 4ம் வருடத்தில் ஒரு கூடுதல் அம்சமாக, கட்டாய இன்டர்ன்ஷிப் உள்ளது.
படிப்பிற்கான அங்கீகாரம்
BASLP படிப்பானது, கடந்த 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய ரீஹேபிலேஷன் கவுன்சிலால்(RCI) பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. ரீஹேபிலேஷன் தொடர்பான படிப்புகளை தரப்படுத்துவது, இந்த கவுன்சிலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இந்த BASLP படிப்பானது, ஒருவர் இத்துறையில் பயிற்சி பெறும் தகுதியை அளிக்கிறது.
அதேசமயம், ஒருவர் பயிற்சியைத் தொடங்கும் முன்பாக, RCI -ல் பதிவுசெய்ய வேண்டும். இன்றைய நிலையில், இந்தியாவில், இத்துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்கும் மொத்தம் 54 கல்வி நிறுவனங்களை RCI அங்கீகரித்துள்ளது.
இளநிலை படிப்பில் சேரும் தகுதிகள்
நீங்கள் பள்ளி படிப்பில் இயற்பியல் மற்றும் வேதியியலை கட்டாயம் படித்திருக்க வேண்டும். மூன்றாவது பாடமாக, கணினி அறிவியல், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், உளவியல் போன்ற பாடங்களில் ஏதேனும் ஒன்றை படித்திருக்கலாம்.
Hearing-Language-Speech துறையில் டிப்ளமோ(DHLS) படித்தவர்கள் மற்றும் 2 வருட பணி அனுபவம் உடையவர்கள், BASLP படிப்பில் நேரடியாக இரண்டாவது வருடம் சேரலாம். 2 வருட DHLS படித்த ஒருவர், முழுமையாக பயிற்சியளிக்கப்பட்ட பட்டதாரி அல்லது முதுநிலை பட்டதாரியின் கீழ், ஸ்பீச் அன்ட் ஹியரிங் டெக்னீசியனாக பயிற்சி எடுக்கலாம்.
தேர்வு முறைகள்
ஒவ்வொரு கல்வி நிறுவனம் தனக்கான சொந்த நுழைவுத்தேர்வை வைத்துள்ளன. பல வளாகங்களை வைத்துள்ள Ali Yavar Jung national institute for the hearing handicapped(AYJIHH), தனது அனைத்து வளாகங்களுக்கும் ஒரே நுழைவுத்தேர்வையே நடத்துகிறது. கடந்த 1965ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட, நாட்டிலேயே பழமையான, அகில இந்திய ஸ்பீச் மற்றும் ஹியரிங் கல்வி நிறுவனம், ஒரு நுழைவுத்தேர்வை நடத்துகிறது. இத்தேர்வானது, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பாடத்திட்ட அடிப்படையில் நடத்தப்படுகிறது.
மருத்துவக் கல்லூரி நன்மை
இப்படிப்பிற்கான கல்வி நிறுவனத்தை தேர்வு செய்கையில், அது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டதாக இருந்தால் பயன்கள் அதிகம். இதன்மூலம், பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆராயச்சி நிறுவனங்கள்
AIISH நிறுவனமானது, இத்துறை நிபுணர்களால் மிகவும் சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிறுவனம், பொது மக்களுக்கான சேவையை வழங்குவதால், மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக திகழ்கிறது. பல இடங்களிலிருந்து வரும் நோயாளிகளின் மூலம் பரவலான அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேசமயம், இந்தக் கல்வி நிறுவனத்தின் புகழ் மற்றும் குறைந்த கல்விக் கட்டணம் போன்ற காரணிகளால், இங்கே இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இந்நிறுவனத்தில், இளநிலைப் படிப்பை மேற்கொள்ள முடியாதவர்கள், முதுநிலைப் படிக்க இங்கு வருகிறார்கள். ஆனால், அவர்கள் அப்படிப்பை மேற்கொள்ள ஸ்பீச் லாங்குவேஜ் அல்லது ஆடியாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முதுநிலைப் படிப்பிற்காக தேர்ந்தெடுக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள்
ASLP நிபுணர்கள், இ.என்.டி, நியூராலஜி, சைக்யாட்ரிக், பீடியாட்ரிக்ஸ், சர்ஜரி மற்றும் ஆன்காலஜி ஆகிய துறைகளுடன், நெருங்கி பணிபுரிவார்கள். மேலும், குழந்தைகளுக்கான வாய்ஸ் அல்லது ரீஹேபிலேஷன் தொடர்பான சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மையங்களில் நிறைய வேலைவாய்ப்புகள் உண்டு.
இவைத்தவிர, சிறப்பு பள்ளிகள் மற்றும் ஆரம்ப கால சிகிச்சை மையங்கள் போன்றவற்றில் பணிவாய்ப்புகளை பெறலாம். மேலும், வெளிநாட்டு மற்றும் ரெகுலர் பள்ளிகள், தங்களுடைய மாணவர்களின் பிரச்சினைகளுக்காக ASLP நிபுணர்களை தொடர்பில் வைத்துள்ளன. இந்த வழக்கத்தை, வேறு பல பள்ளிகளும் பின்பற்ற தொடங்கிவிட்டன.
இத்துறை நிபுணர் ஒருவர், தனியார் ஆலோசகராகவும் இருக்கலாம். ஆனால், புதிதாக படித்து இத்துறையில் நுழையும் ஒருவர் ஆலோசகர் ஆவது கடினம். ஏனெனில், இதற்கான முதலீடும், பரவலான தொடர்பும் தேவை.
சம்பளம்
இத்துறை வருமானம், இடத்திற்கு இடம் மாறுபடும். நிலையானது என்று எதுவுமில்லை. இத்துறையில் முதுநிலைப் படிப்பு முடித்து, அனுபவமின்றி, ஒரு நல்ல மருத்துவமனையில் பணிக்கு சேரும் ஒருவர், மாதம் ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை பெறுகிறார்.
தொழில்துறை பணிவாய்ப்பு
Hearing aids உள்ளிட்ட, இத்துறை தொடர்பான மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளின் மூலமாக பணி வாய்ப்புகள் உண்டு. இன்றைய நிலையில், நாட்டில், இத்துறை தொடர்பான சாதனங்களை தயாரிக்கும் குறைந்தபட்சம் 8 முதல் 10 வரையான பிரபல நிறுவனங்கள் உண்டு. இந்நிறுவனங்களுக்கு, அச்சாதனங்களின் பயனாளர்கள் மற்றும் நோயாளிகளிடமிருந்து கருத்துக்கள் தேவை. அந்த கருத்துக்களைப் பெற்று தருபவர்களாக ASLP நிபுணர்கள் விளங்கி, பணி வாய்ப்புகளை அளிக்கிறார்கள்.
தொழில்நுட்ப அனுகூலம்
கடந்த 70 மற்றும் 80ம் ஆண்டுகளில், மருத்துவ பரிசோதனை செயல்பாடுகள் என்பவை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கடுமையாக உணரும் ஒன்றாக இருந்தது. ஆனால் இன்றோ, தொழில்நுட்பத்தின் உதவியால், பல நவீன, மேம்பட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, சமீபத்திய தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்த அறிவைக் கொண்டிருப்பது அவசியம்.
அறுவை சிகிச்சையின்போது மற்றும் அதற்கு பிறகான நிலைமைகளில், சாதனம் சரியாக பொருந்தியிருக்கிறதா மற்றும் நோயாளி சூழலுக்கு ஏற்றவாறு பொருந்திக் கொள்கிறாரா என்பதை மதிப்பிடுவது இத்துறை நிபுணர்களின் முக்கியப் பணிகளில் ஒன்று.
என்ன தேவை?
பேசுதல் மற்றும் கேட்டல் குறைபாடானது, பொதுவாக, சமூக அளவிலான ஒரு மதிப்பு குறைபாடாக கருதப்படுகிறது. மேலும், இத்துறை நிபுணர்கள், தங்களிடம் வரும் மருத்துவ பிரச்சினைகளை உளவியல் ரீதியாக அணுக வேண்டியுள்ளது. ஏனெனில், பல பெற்றோர்கள், தங்களது குழந்தைக்கு இதுபோன்ற ஒரு குறைபாடு இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களால் அதை தாங்கிக்கொள்வதும் கடினம்.
எனவே, அதீத பொறுமையையும், கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் கைக்கொண்டு, ஒருவரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டிய பெரும் பொறுப்பு இத்துறை நிபுணருக்கு உள்ளது. இத்தகைய கடும் முயற்சிகளுக்குப் பிறகு கிடைக்கும் பலன்கள், அதீத சந்தோஷத்தையும், திருப்தியையும் கொடுக்கும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...