துணை ராணுவ படையில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர்களுக்கு, "முன்னாள்
ராணுவத்தினர்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால், நான்கு லட்சம், துணை
ராணுவப்படை முன்னாள் வீரர்கள் பயனடைவர்.டில்லி அருகே உள்ள குர்கானில்
நேற்று, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) நிகழ்ச்சி நடந்தது.
அதில் பங்கேற்ற, மத்திய, உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, இதற்கான
அறிவிப்பை வெளியிட்டார்.அதன்படி, சி.ஆர்.பி.எப்., மத்திய தொழில் பாதுகாப்பு
படை (சி.எஸ்.ஐ.எப்.,), எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) இந்தோ -
திபெத் எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி.,) மற்றும் சஷாஸ்ட்ர சீமா பால்
(எஸ்.எஸ்.பி.,) ஆகிய, துணை ராணுவப் படையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற, நான்கு
லட்சம் பேருக்கு, முன்னாள் ராணுவத்தினர் அந்தஸ்து கிடைக்கும்.ராணுவத்தில்
பணியாற்றி, ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படும், "எக்ஸ்சர்வீஸ் மேன்'
எனப்படும், முன்னாள் ராணுவ வீரர் அந்தஸ்து, பல சிறப்பான பலன்களை அளிக்கக்
கூடியது. கேன்டீன் வசதி, மருத்துவமனை வசதி, கல்வி, வேலைவாய்ப்பில்
வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு போன்ற பல பலன்கள், துணை ராணுவத்தினருக்கும்
கிடைக்கும்.முன்னாள் ராணுவத்தினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டாலும், துணை
ராணுவத்தினர், எக்ஸ்சர்வீஸ்மேன் என்றழைக்கப்பட மாட்டார்கள்;
எக்ஸ்-சென்ட்ரல் போலீஸ் பெர்சானல் என்றழைக்கப்படுவர்.துணை ராணுவப் படை
பிரிவுகளில், எட்டு லட்சம், ஆண் மற்றும் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
முன்னாள் துணை ராணுவப் படையினரின் நீண்ட கால கோரிக்கையான, முன்னாள்
ராணுவத்தினர் அந்தஸ்தை நேற்று வழங்கி, அறிவிப்பை வெளியிட்ட, அமைச்சர்,
சுஷில்குமார் ஷிண்டே, துவக்க காலத்தில், மகாராஷ்டிராவில், போலீஸ்
சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>அண்ணா பல்கலை ஆசிரியப் பணியில் முதுநிலைப் பட்டதாரிகள்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க,
முதுநிலை பொறியியல் படிப்பை முடித்த 150 பட்டதாரிகளை ஒப்பந்த அடிப்படையில்
ஆசிரியர் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில்
பணிபுரிவோர், தங்களின் பணி காலத்திலேயே, பி.எச்டி படிப்பை முடிப்பதற்கான
வாய்ப்பும் வழங்கப்படும். எம்.இ/எம்.டெக் முடித்த நபர்கள்,
ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வின் மூலமாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், 1:5 என்ற
விகிதத்தில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இந்த ஒப்பந்த அடிப்படையிலான
ஆசிரியர்கள், வருடத்திற்கு ஒருமுறை, தங்களின் ஒப்பந்தத்தை
புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஆசிரியப் பணியின்போதே, தங்களின் முனைவர் பட்ட ஆராய்ச்சியையும் இவர்கள்
மேற்கொள்ளலாம். இதன்மூலம், அவர்களின் ஆராய்ச்சித் திறன் மேம்படும்.
வெற்றிகரமாக முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தவர்கள், அண்ணா பல்கலையிலோ
அல்லது வேறு பொறியியல் கல்லூரியிலோ பணியமர்த்தப்படுவார்கள். AICTE, தனது
அறிவிப்பில், ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:15 என்ற அளவில் இருக்க வேண்டுமென
கூறியுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையைப்
போக்க, இளநிலைப் பொறியியல் பட்டதாரிகளை நியமிக்கலாம் என்றும், ஆனால்
அவ்வாறு நியமனம் செய்யப்படுபவர்கள், 3 ஆண்டுகளுக்குள் முதுநிலைப் படிப்பை
முடித்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு AICTE அனுமதியளித்துள்ளது. மேலும், பொறியியல் முதுநிலைப் படிப்புகளை மேற்கொள்வோரின் எண்ணிக்கையை
அதிகரிக்கும்பொருட்டு, 2 காலஅளவுகளில்(2 shifts) அப்படிப்புகளை கல்வி
நிறுவனங்கள் வழங்கவும் AICTE இசைவு தெரிவித்துள்ளது.
>>>சர்வதேச மாணவர்கள் சங்கமிக்கும் என்.யு.எஸ்.
உலக வரைபடத்தில், கூர்மையான பென்சில் முனையைவிடச் சிறியதாகவே தோன்றும் ஒரு குட்டி நாடு தான் சிங்கப்பூர்.
ஆனால், திட்டமிட்ட உள்கட்டமைப்பு,
சிறந்த பாதுகாப்பு, உயர்ந்த பொருளாதாரம், உலகத் தரமான வாழ்க்கைச் சூழல்
ஆகியவற்றுடன் சுற்றுலா பயணிகள், தொழில் முதலீட்டாளர்களை மட்டுமின்றி
சர்வதேச மாணவர்களையும் வசீகரிக்க முடிகிறது என்றால் ஆச்சரியமே...
சிங்கப்பூர், உயர் கல்வியிலும் சர்வதேச அளவில் உயர உறுதுணையாக இருப்பது
என்.யு.எஸ்., என்கிற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம். க்யூஎஸ் உலக
பல்கலைக்கழக தரவரிசையில் 25வது இடத்தையும், டைம்ஸ் உயர்கல்வி உலக
பல்கலைக்கழக தரவரிசையில் 29வது இடத்தையும் பிடித்துள்ள என்.யு.எஸ்., குட்டி
நாட்டிற்குள் தனக்கென ஒரு குட்டி கல்வி நகரத்தையே உருவாக்கியுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்
1905ம் ஆண்டு 23 மாணவர்களுடன் துவக்கப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரி,
இன்று மூன்று வளாகங்களில் 100 நாடுகளைச் சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் அதிகமான
மாணவ, மாணவியரைக் கொண்டு ஒரு சர்வதேச பல்கலைக்கழகமாக மகத்தான வளர்ச்சி
பெற்றுள்ளது என்.யு.எஸ்.
>>>ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை
ஆங்கிலம், கணிதம் ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பள்ளியில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆவடி சத்தியமூர்த்தி நகரில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த
ஆண்டுதான், இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. "மேல்நிலை பாடப் பிரிவுகளுக்கு,
ஒன்பது ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என, அரசு அறிவித்தது. இப்பள்ளியில்,
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில் உள்ள மூன்று பிரிவுகளில்,
மொத்தம், 90 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், கணித பிரிவில் மட்டும்,
40 மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது, வேதியியல், இயற்பியல், உயிரியல், பொருளியல், வரலாறு
பாடங்களுக்கான ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். ஆனால், ஆய்வகங்கள்
இல்லை. பெயரளவுக்கு, ஏழு கம்ப்யூட்டர்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம்,
கணிதம், வணிகவியல் பாடங்களுக்கு, ஆசிரியர்கள் இல்லை. இதனால், இப்பாட
வேளைகளில், மாணவர்கள், விளையாடி வருகின்றனர். பத்தாம் வகுப்பு தமிழ்
ஆசிரியரே, பிளஸ் 1 வகுப்புக்கு பாடம் எடுக்கிறார். இதுதவிர, காலாண்டு தேர்வை, மொத்தமுள்ள, 90 மாணவர்கள், ஆங்கில பாடம்
படிக்காமலும், கணித பிரிவில் உள்ள, 40 மாணவர்கள், கணித பாடம் படிக்காமலும்
எழுதியுள்ளனர். சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள்
மூலம், இந்த வினாத்தாள்களை திருத்தியதாக கூறப்படுகிறது. காலாண்டு தேர்வு
முடிந்த பின்னும், ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது குறித்து, பள்ளி ஆசிரியர்களை கேட்டபோது, "நாங்கள் என்ன செய்வது?"என,
கைவிரித்தனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர் பாலாஜி கூறுகையில், "போதிய
ஆசிரியர்களை நியமிக்காமல், பள்ளியை மட்டும் தரம் உயர்த்தி எந்த பயனும்
இல்லை. மாணவர்களின் நலன் கருதி, அரையாண்டு தேர்வுக்கு முன்பாவது, தேவையான
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என்றார்.
>>>டி.இ.டி. தேர்வு முடிவுகள் ஒரு வாரம் தள்ளிவைப்பு
சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த,14ல் நடந்த, டி.இ.டி.,
மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு
முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும்
மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண்
இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக
நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. இதனால்,
28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி.,
திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என,
தெரியவில்லை. இதற்கிடையே, நேற்று(அக்., 29) துவங்கிய சட்டசபையின், குளிர்கால
கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை
வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ,
எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும்,
டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின்,
தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
>>>நவம்பர் 02 [November 02]....
- பெங்களூர் நகரம் பெங்களூரு என பெயர் மாற்றப்பட்டது(2006)
- பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை துவக்கியது(1936)
- பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது(1953)
- தமிழறிஞர் பரிதிமாற் கடலைஞர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரிகள் இறந்த தினம்(1903)
- நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது(1868)
>>>நவம்பர் 1 - கன்னியாகுமரி மாவட்டம் பிறந்த நாள்!
கன்னியாகுமரி
மாவட்டம் 1956க்கு முன்னர் கேரளாவுடன் இணைந்திருந்தது. தமிழகத்துடன்
இணைக்க போராட்டம் நடத்தப்பட்டது. இறுதியில் 1956-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம்
தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. மாவட்டத்திற்கு இன்று
உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...