கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நவம்பர் 12 [November 12]....

நிகழ்வுகள்

  • 764 - திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.
  • 1833 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.
  • 1893 - அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாகிஸ்தான்) ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1905 - நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
  • 1906 - பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்.
  • 1918 - ஆஸ்திரியா குடியரசாகியது.
  • 1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
  • 1927 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
  • 1938 - மடகஸ்காரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி ஜேர்மனியின் திட்டத்தை "ஹேர்மன் கோரிங்" என்பவர் வெளிக் கொணர்ந்தார்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் "செர்வோனா உக்ரயீனா" மூழ்கடிக்கப்பட்டது.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அவ்ரோ போர் விமானம் ஜேர்மனியின் போர்க்கப்பல் ஒன்றை நோர்வேயில் மூழ்கடித்தது.
  • 1948 - டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு ஜப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
  • 1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹேர்ஷ் வெளியிட்டார்.
  • 1980 - நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
  • 1981 - கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.
  • 1982 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
  • 1982 - போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
  • 1989 - தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
  • 1990 - இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
  • 1991 - கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
  • 1994 - இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
  • 1996 - சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்ஸ்தானின் இல்யூஷின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1998 - கியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.
  • 2001 - நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 2001 - ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.
  • 2006 - முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.

பிறப்புக்கள்

  • 1817 - பஹாவுல்லா, பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1892)
  • 1866 - சுன் இ சியன், சீனாவின் புரட்சித் தலைவர் (இ. 1925)
  • 1896 - சலீம் அலி, இந்திய பறவையியல் வல்லுநர் (இ. 1987)
  • 1920 - வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (இ. 2006)

இறப்புகள்

  • 2001 - சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி, இந்து அமெரிக்க ஆன்மிகவாதி (பி. 1927)

சிறப்பு நாள்

  • பஹாய் நம்பிக்கை - புனித நாள் (பஹாவுல்லா பிறந்த நாள்)

>>>பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்கீடு: முதல்வர்

தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வருடந்தோறும மாணவ, மாணவியரின் நலன்களுக்கு தமிழக அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.63.94 கோடி செலவாகும். மேலும் 4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

>>>பொதுத்தேர்வு பணிகள் துவங்கின: நவ. 30க்குள் இறுதிப்பட்டியல்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை, தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை, இம்மாதம், 30ம் தேதிக்குள், தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் முதல் வாரம் துவங்கிவிடும். செய்முறைத் தேர்வுகள், பிப்ரவரி, முதல் வாரத்தில் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கும். பிப்ரவரியில் செய்முறைத் தேர்வை நடத்துவதற்கு வசதியாக, ஜனவரி, 15ம் தேதிக்குள், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க வேண்டும். இதனால், தேர்வுக்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை முழுவீச்சில் செய்து வருகிறது. பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் பெயர், பள்ளி, குரூப் விவரம், தேர்வெழுதும் பாடங்கள், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள், மாவட்ட வாரியாக, விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை, இம்மாதம், 30ம் தேதிக்குள் முடித்து, பட்டியல்களை ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாணவ, மாணவியர் பெயர் பட்டியல், விரைவில், மாவட்டங்களில் இருந்து வர ஆரம்பித்துவிடும். இம்மாத இறுதியில், எத்தனை பேர், பொதுத்தேர்வை எழுதுகிறார்கள் என்ற விவரம் தெரிந்துவிடும். பிளஸ் 2வை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 7.56 லட்சம் பேர் எழுதினர். வரும் தேர்வில், கூடுதலாக, 30 ஆயிரம் பேர் முதல், 40 ஆயிரம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கிறோம் இவ்வாறு, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முந்தைய பிளஸ் 2 தேர்வுகள், 1,974 மையங்களில் நடந்தன. புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி கோரி, பள்ளி நிர்வாகங்கள், தேர்வுத்துறையிடம் விண்ணப்பித்து வருகின்றன. 100 மையங்கள் வரை, புதிதாக அனுமதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாம் வகுப்பை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 10.84 லட்சம் பேர் எழுதினர்; 3,033 மையங்களில், தேர்வுகள் நடந்தன. வரும் தேர்வில், 11.20 லட்சம் பேர் வரை, இத்தேர்வை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால், மார்ச் இறுதி வாரத்தில் துவங்க வேண்டிய தேர்வு, ஏப்ரல் 4ம் தேதி, 23ம் தேதி வரை நடந்தது. இந்த அட்டவணை, வரும் பொது தேர்வுக்கு பொருந்தாது எனவும், வழக்கம்போல், மார்ச், 20ம் தேதிக்குப் பின் துவங்கி, ஏப்ரல், 10 தேதிக்குள், தேர்வு முடிவடையும் வகையில், அட்டவணை இருக்கும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>கல்வி கடன் விண்ணப்பங்கள்: வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ கண்டிப்பு

கல்விக் கடன் கோரும் மாணவர்களின் விண்ணப்பங்களை, தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்க கூடாது என, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, சர்வீஸ் ஏரியா எனப்படும் வங்கியின் செயல்பாட்டு வரையறை எல்லைக்குள் வராத மாணவர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கல்விக்கடன் கோரி, நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள், வங்கிகளில் விண்ணப்பிக்கின்றனர். சம்பந்தபட்ட வங்கியின், "சர்வீஸ் ஏரியா"வுக்குள் வசிக்காத, மாணவர்களின் விண்ணப்பங்கள், வங்கிகளால் நிராகரிக்கப்படுகின்றன. சில ஆண்டுகளாக, இதுபோல், ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, புகார்கள் குவிந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், தொழில்நுட்ப காரணங்களை காட்டி, மாணவர்களின் கல்வி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது. குறிப்பாக, சம்பந்தபட்ட வங்கிகளின், "சர்வீஸ் ஏரியா"வுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்காத மாணவர்களுக்கு, வங்கிகளால், கல்வி கடன் மறுக்கப்படுவது, சரியான நடைமுறை அல்ல. வங்கிகளின்,"சர்வீஸ் ஏரியா"வுக்கு வெளியில் வசிக்கும் மாணவர்களுக்கும், கல்விக்கடன் வழங்க வேண்டும். வங்கிகளை பொறுத்த வரை, "சர்வீஸ்  ஏரியா" என்பது, அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தான் பொருந்தும்; மாணவர்களின் கல்வி கடன் விஷயத்தில், இந்த நடைமுறையை பின்பற்றக் கூடாது. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>தேர்வுத்துறை பணியாளர்களுக்கும் ஆசிரியர் பணி வழங்க கோரிக்கை

கல்வித்துறையில், ஆசிரியர் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்குவது போல், தேர்வுத்துறை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என, ஆசிரியர் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், ஆசிரியர் அல்லாத பணிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களில், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தகுதி உடையவர்களுக்கு, 2 சதவீதம் அளவில், ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. இவ்வாறாக, பல ஊழியர்கள், ஆசிரியராக பணி மாறுதல் பெறுகின்றனர். இந்த வாய்ப்பு, தேர்வுத்துறை ஊழியர்களுக்கு மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் தகுதியுடன் பலர், தேர்வுத் துறையில், சாதாரண நிலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தேர்வுத்துறை ஊழியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் தான், தேர்வுத்துறையும் வருகிறது; இதர கல்வித் துறைகளும் வருகின்றன. அப்படியிருக்கும் போது, கல்வித்துறை ஊழியர்களுக்கு மட்டும், ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கி, எங்களுக்கு மறுப்பது, எந்த வகையில் நியாயம் என, தெரியவில்லை. தகுதி வாய்ந்த தேர்வுத்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர் பணி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தேர்வுத்துறை ஊழியர்களின் கோரிக்கை குறித்து, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் கூறுகையில், "இந்த விவகாரத்தில், தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்" என, தெரிவித்தன.

>>>அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை

நிதி நெருக்கடி காரணமாக தவித்து வரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணைவேந்தர் ராமநாதன் கூறியதாவது: நிதி நெருக்கடி காரணமாக தற்போது பல்வேறு தகவல்கள் ஊழியர்கள் மத்தியில் புரளியாக பேசப்படுகிறது. நிர்வாகத்தில், கண்டிப்பாக ஆள் குறைப்பு இல்லை. நிதி நிலை மோசமாக இருப்பதால், சம்பளம் கொடுப்பதில், சிக்கல் இருந்து வருகிறது. சம்பளம் குறைப்பது குறித்து, நான் மட்டுமே முடிவு செய்ய முடியாது. தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. இன்று முதல், பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது. மேலும் ஹாஸ்டலில் தங்கியுள்ள மாணவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் மன வேதனை அடைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகை வருவதால், குடும்பத்தினருக்கு புத்தாடை வாங்கவோ, பட்டாசு வாங்கவோ ஆர்வம் இல்லாமல் இருந்து வருகின்றனர்.
பல அறிஞர்களை உருவாக்கிய பல்கலை : கல்விப் பணியில் ஆர்வம் கொண்ட அண்ணாமலை செட்டியார், 1920ம் ஆண்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், மீனாட்சி கல்லூரி துவங்கினார். பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து, 1928ல், அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின்படி, 1929ம் ஆண்டு, ஒருங்கிணைந்த பல்கலைக்கழகமாக, தமிழக அரசின் நிதி உதவியுடன் மாறியது. கல்வியில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக துவங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், கல்வி மேதைகளை உருவாக்கியது. இங்கு படித்தவர்கள், உலக அளவில் பல துறைகளில், மிக முக்கிய பொறுப்புகள் வகித்து வருகின்றனர். பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த, பல லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது, 17 ஆயிரத்து 609 ஊழியர்கள், நேரடியாகவும், பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

>>>கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் முடிவுக்கு வந்தது

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 600க்கும் மேற்பட்ட, பகுதி நேர கடைநிலை ஊழியர்களை, பணி வரன்முறை செய்ய, அரசாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிரான, கோர்ட் அவமதிப்பு வழக்கை, சென்னை ஐகோர்ட் முடித்துக் கொண்டது. தமிழகத்தில், பல மாவட்டங்களில் உள்ள, அரசு பள்ளிகளில், பகுதி நேர, தினக்கூலி ஊழியர்கள், பலர் பணியாற்றுகின்றனர். தங்களை பணிவரன்முறை செய்யக் கோரி, 600க்கும் மேற்பட்டோர், ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது, 2010ம் ஆண்டு, டிசம்பரில், ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. ஊழியர்களின் மனுக்களை பரிசீலித்து, உத்தரவுகளை பிறப்பிக்குமாறு, பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டது. உத்தரவு அமல்படுத்தவில்லை எனக் கூறி, பள்ளி கல்வித் துறைச் செயலர், பள்ளி கல்வி இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கு, தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை, நீதிபதி ஜோதிமணி (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட் உத்தரவுப்படி, பணி வரன்முறை செய்து, கடந்த அக்., 3 ல் தேதி, பள்ளி கல்வித் துறை, உத்தரவு பிறப்பித்துள்ளது. பணப் பலன்கள் வழங்கப்படும் என, அரசு உத்தரவிலும், கூடுதல் அரசு பிளீடரின் வாதத்திலும், தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்கிறேன். கோர்ட் உத்தரவை அமல்படுத்தும் விதமாக, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, எடுத்த நடவடிக்கைகளை, இந்த கோர்ட் பாராட்டுகிறது. இவ்வாறு, நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...