கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு
கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.
இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், ஒரு மாணவி என 2 பேர் பலியாகி உள்ளனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தின்போது, ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது.
இது விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வரும்.
கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் இந்த வழியே செல்கின்றன. இதனால், அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.
🚨 கடலூர் அருகே மூடப்படாத ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரயில் மோதிய விபத்து எதிரொலி - முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்
🚆 திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
🚆 மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியபோது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.
*கேட் கீப்பரின் அலட்சியத்தால் தனியார் பள்ளி வேன் கோர விபத்து
*கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கி விட்டதால் பள்ளி வேன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது
*கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது என நேரில் பார்த்த பொதுமக்கள் குற்றச்சாட்டு
* கேட் கீப்பரை தாக்கிய கிராம மக்கள்: கடலூரில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் ஏற்பட்ட மோதி விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்
ரயில்வே கேட் கீப்பர் சஸ்பெண்ட்
* கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கேட்கீப்பறை தற்போது பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு
தற்போதைய செய்தி
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரயில்வே சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர், 1 மாணவி உள்பட மூவர் பரிதாபமாக பலியாகினர்.
ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் மூவர் பலியாகினர். அவர்களில் சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணியின் மகள் சாருமதி (16), அவரன் மகன் செழியன்(15), விஜயசந்திரகுமாரின் மகன் விமலேஷ்(10) ஆகியோர் பலியாகினர்.
இந்நிலையில், இவ்விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Daily Thanthi
முகப்பு > செய்திகள் > தமிழக செய்திகள் > கடலூர்: பள்ளி வேன்...
கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? 3 மாணவர்கள் பலியான சோகம் - கேட் கீப்பர் கைது
கடலூர் செம்மங்குப்பத்தில் வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
By - தினத்தந்திUpdate:2025-07-08 10:41 IST
கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? 3 மாணவர்கள் பலியான சோகம் - கேட் கீப்பர் கைது
கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.
இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், ஒரு மாணவி என 2 பேர் பலியாகி உள்ளனர்.
வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தின்போது, ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது. இது விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் பற்றி ரெயில்வே தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ரெயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தினார். வேன் போகும் வரை கேட்டை மூட வேண்டாம் என அவர் கூறினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இன்று காலை சுமார் 7.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட். கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார். இதேபோன்று கேட்டை பாதி மூடி கொண்டிருக்கும்போது, வேன் ஓட்டுநர் உள்ளே சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில், ரெயில்வே மாறுபட்ட விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் செம்மங்குப்பம் பகுதியில் பணியாற்றிய கேட் கீப்பர் மீது ரெயில்வே அதிகாரிகள் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான முழு காரணம் பற்றி தெரிய வரும் என்று கூறப்படுகிறது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் இந்த வழியே சென்று வரும் நிலையில், அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி?
'Non Interlocking' ரெயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் தரப்படும்.
தொலைபேசி மூலம் தகவல் அளித்து கேட் மூடியதை உறுதிப்படுத்திய பின்னரே ரெயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும்.
செம்மங்குப்பத்தில் ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக உறுதி அளித்தபின், பள்ளி வேனை மட்டும் கேட் கீப்பர் அனுமதித்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மூன்று மாணவர்கள் உயிரிழப்பு
பள்ளி வேனில் டிரைவர் மற்றும் 4 மாணவர்கள் பயணித்துள்ளனர். அந்த கோர விபத்தில் சிக்கி மாணவி சாருமதி(15), மாணவர் நிமலேஷ் (10) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மாணவர்கள் செழியன், விஷ்வேஸ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவர், சிகிச்சை பலனில்லாமல் உயிரிந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநர் சங்கரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியபோது ரெயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலியான சோகம்
செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சிக்கிய தொண்டமாநத்தத்தை சேர்ந்த சாருமதி (11-ம் வகுப்பு), அவரது தம்பி செழியன் (10-ம் வகுப்பு) ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.