கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வாழ்வில் வெற்றியடைய விரும்பினால்...

எத்தனை புற அம்சங்கள் இருந்தாலும், தனக்கான எதிர்காலத் துறையைத் தேர்ந்தெடுப்பதில், ஒரு மாணவர், தன் விருப்பம் மற்றும் உள்ளார்ந்த திறனுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்தப்படி திருப்தியான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால், தனக்கான ஒரு எதிர்கால தொழில்துறையைத் தேர்ந்தெடுப்பது, ஒவ்வொரு மாணவருக்கும் பெரிய சவாலாகவே எப்போதும் திகழ்கிறது. ஏனெனில், பலரால் விரும்பப்படுவது, பலரால் பரிந்துரைக்கப்படுவது, வருமானம் அதிகம் வருவது, பல கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்பிற்கே முக்கியத்துவம் கொடுப்பது போன்ற நெருக்கடியான அம்சங்களைத் தாண்டி, ஒரு மாணவர், தனது விருப்பம் மற்றும் தன்னுடைய பிறவித் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு துறையை தேர்வு செய்வதென்பது சவாலான மற்றும் மனோதிடம் தேவைப்படும் ஒரு செயல்பாடாகும்.
இதுதொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
விருப்பமே முக்கியம்
ஒருவர் தனிப்பட்ட முறையில் வாழும் சந்தோஷமான மற்றும் திருப்தியான வாழ்க்கையானது, அவரது பணி திருப்தியையே பெரிதும் சார்ந்துள்ளது. தான் செய்யும் பணியை விரும்பி மேற்கொள்ளும் ஒருவர், தனது வாழ்க்கையையும் விரும்புகிறார். நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பணியானது, வருமானம் குறைந்த ஒன்றாகவும் இருக்கலாம். வருமானம் குறைவு என்பதற்காக ஒருவரின் இயல்பார்ந்த விருப்பத்தை மாற்றிக் கொள்ளுதல் என்பது கடினம். வேண்டாத வேலையும்கூட. வருமானத்தைப் பெருக்குவதற்கு வேறு மாற்று வழிகளைக்கூட உருவாக்கிக் கொள்ளலாம். ஏனெனில், பணத்தால் மட்டுமே ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துவிட முடியாது. எனவே, பணத்தின் அடிப்படையில் மட்டுமே, வருங்காலத் தொழிலை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், பலவிதமான உளவியல் சிக்கல்களை எதிர்கொள்வதோடு, இடையிலேயே தொழிலை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு, காலங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்படும்.
உள்ளார்ந்த திறன்
ஒருவர் பிறப்பிலேயே, மரபுவழியில் பல உள்ளார்ந்த ஆற்றல்களைப் பெற்றிருப்பார். ஒருவருக்கு வரலாறு, தத்துவம், அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்வதும் அவருக்கு எளிது. சிலருக்கு இலக்கியம் என்றால் உயிர். சிலருக்கு தொழில்நுட்பம் என்றாலே அலாதி விருப்பம். சிலருக்கோ, மருத்துவ ஆராய்ச்சியில் ஆர்வம். இப்படி, பலவாறாக இருக்க, இந்த சமூகம் பல சமயங்களில் அதைப் புரிந்துகொள்வதில்லை. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இயல்பாற்றலை அறியாமலேயே, சமூகத்தில், வருமானத்தின் பொருட்டு, பிரபலமாக இருக்கும் சில படிப்புகளில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் (உதாரணம் - மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள்). விருப்பமில்லாத மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் இல்லாத துறைகளில் ஈடுபடுபவர்கள், எதையும் சாதிக்க முடியாமல், வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்துவிட்டு போய்விடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும்.
இலக்கை நிர்ணயித்தல்
லட்சியத்தை அடைய, இலக்கு நிர்ணயம் செய்வதென்பது, ஒரு மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த செயல்பாடாகும். சரியான இலக்கின் மூலமே, நமது கனவை நனவாக்க முடியும். உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள் அனைவரும், சரியான ஒரு இலக்கை நிர்ணயம் செய்து, அதன்படி செயல்பட்டே தங்களின் லட்சியத்தை அடைந்தார்கள். இலக்கு நிர்ணயித்தல் என்பது, விரிவான செயல்திட்டம் வகுத்தலாகும். லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள், அதற்கான காலஅளவு, இன்னின்ன காலத்தில் இன்னின்ன முயற்சிகள், தேவைப்படும் மாற்றங்கள், சரியான நபர்களின் ஆலோசனைகள், ஏற்படும் தடைகளை களைவதற்கான வழிமுறைகள், சோர்ந்து போகாமல் இருப்பதற்கு தேவையான மனோதிடத்தை தக்கவைப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுதல், லட்சியத்தை அடைவதற்கான முழு காலஅளவு போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் திட்டமிட்டு முடிவெடுத்தலே இலக்கு நிர்ணயித்தலாகும். தெளிவான முறையில் இலக்கு நிர்ணயித்தப் பின்னர், தாமதமின்றி செயல்படத் தொடங்க வேண்டும்.
எதுவும் எளிதல்ல...
நீங்கள் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து, அதை அடைவதற்கான செயல்பாட்டில் ஈடுபடத் தொடங்குகையில், உங்களுக்கான பயணம் பெரும்பாலும் இலகுவானதாக இருக்காது. பலவிதமான தடைகள், மன உளைச்சல்கள், பலரின் எதிர்மறை கருத்துக்கள், உடலியல் உபாதைகள், திட்டமிட்ட காலத்தைவிட, அதிக காலம் செலவாதல், எதிர்பார்த்த எளிய வாய்ப்புகள் கிடைக்காமல் போதல் போன்ற எத்தனையோ தடைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அதற்கெல்லாம் சோர்ந்துவிட்டால், நிச்சயம் நினைத்ததை அடைய முடியாது. உங்களின் நண்பர்கள் ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் படிக்க வேண்டியதிருக்கலாம். ஆனால் அந்த ஜாலி நிரந்தரமல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எந்த லட்சியமும் உடனடியாக அடையப்பட்டதல்ல. பல நாள் முயற்சியில், பல ரணங்களுடன் அடையப்பட்டவையே. பல சாதனையாளர்களின் பேட்டிகளைப் படிக்கையில் இதனை நாம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு துறையில் சாதனைப் புரிந்தவர்களும் தாண்டி வந்த தடைக்கற்கள் பல. பள்ளிப் படிப்பை முடிக்கவே சிரமப்பட்டவர்கள் ஐஏஎஸ் ஆனதுண்டு. அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தவர்கள், கோட்டை விட்டதுமுண்டு. தளராத மனவுறுதியுடன், விடாத முயற்சியை மேற்கொள்பவரே, இறுதியில் வெற்றியாளராக ஜொலிப்பார் என்பதே உலக உண்மை. இதை உணர்ந்தவருக்கு கவலையில்லை.

>>>பிசியோதெரபிஸ்ட் பணியில் அருந்ததியருக்கு இடஒதுக்கீடு

பிசியோதெரபிஸ்ட் நியமனத்தில், அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், ஒரு இடத்தை காலியாக வைத்து, 5 பேரை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைத்து, தகுதியான ஒருவரை நியமிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை ஜெயந்தி மீனாம்பிகை, தாக்கல் செய்த மனு: கிராமப்புற மருத்துவ சுகாதார பணிகள் துறையில் பிசியோதெரபிஸ்ட் கள் (இயன்முறை மருத்துவர்) 15 பேர் பணி நியமனத்திற்கு, தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் 79 பேரை பரிந்துரைத்தது. கல்வி, வேலைவாய்ப்பில் அருந்ததியருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என 2009 ஏப்.,29 ல் அரசு உத்தரவிட்டது. இதன்படி, "பிசியோதெரபிஸ்ட்'கள் நியமனத்தில், அருந்ததியருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2005 ஜூலை 20 வரை (கட்-ஆப்) பதிவு செய்த ஆதிதிராவிடர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்பட்டது. அருந்ததியர்களுக்கு அவ்வாறு தேதி நிர்ணயிக்கவில்லை. அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்திருந்தால், எனக்கு பணி கிடைத்திருக்கும். பணி நியமனத்தில், எனது பெயரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி எஸ்.மணிக்குமார் முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல், பிசியோதெரபி படித்தவர்களில், அருந்ததியர் 25 பேர் மட்டும், மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அதில், பதிவு மூப்பில் மனுதாரர் 2 வது இடத்தில் உள்ளார் என்றார். இதையடுத்து நீதிபதி  கூறியதாவது:  வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஆதிதிராவிடர்களில் அருந்ததியர் பிரிவு என தனித்து காட்டவில்லை என, அரசு தரப்பே ஒத்துக்கொள்கிறது. "பிசியோதெரபிஸ்ட்' பணி நியமன தேர்வு நடைமுறை 2010 ல் துவங்கிவிட்டது. அரசு விதிகள்படி, இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. ஒரு பணி இடத்தை அருந்ததியர் பிரிவை சேர்ந்தவருக்கு உள் ஒதுக்கீடு முறையில், வழங்கியிருக்க வேண்டும். ஒரு பணி இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும். தகுதியான 5 பேரை பரிந்துரைத்து அதன் அடிப்படையில், ஒருவரை 2 மாதங்களுக்குள், அரசு தேர்வு செய்ய வேண்டும் என, உத்தரவிட்டார்.

>>>கல்வி உரிமை சட்டத்திற்கான காலக்கெடு நீட்டிப்பா?

கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடு, 2013 மார்ச் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு கூறினார். மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின், 60வது கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்ற, இந்தக் கூட்டத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு கூறியதாவது: ஆறு முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிப்பதை, அடிப்படை உரிமையாக்கி கொண்டு வரப்பட்டது, "குழந்தைகளுக்கான, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009 இந்த கல்வி உரிமைச் சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், 2013 மார்ச் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை அமல்படுத்த, சில மாநிலங்கள் தயார் நிலையில் இல்லை என, தெரிவித்தாலும், காலக்கெடு நீட்டிக்கப்படாது. இந்த விஷயத்தில், சட்டத்தை தளர்த்தும் பேச்சுக்கே இடமில்லை.சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும், "கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது" என, வலியுறுத்தி வருகின்றனர்; அப்படி நீட்டித்தால், சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது மேலும் காலதாமதமாகும் என, கூறுகின்றனர். எனவே, இந்த விஷயத்தில், இனியும் கால நீட்டிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.மேலும், கல்வி உரிமை சட்டத்தை, பாலர் பள்ளிகள் மற்றும் மேல்நிலைக் கல்விக்கும் நீட்டிக்க வேண்டும் என, கல்வியாளர்களும், மாநில கல்வி அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர். அது தொடர்பாக இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது; விரிவாக ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு பல்லம் ராஜு கூறினார்.

>>>கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும். நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?  அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும். அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும்!!!??? ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று. அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான். அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது. அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம். கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம். கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம். அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ். அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி. கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

>>>பல கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆல்ப்ஸ் மலை !!!

 

ஆல்ப்ஸ் என்ற பெயரைத் திரை இசைப் பாடல்களில் கேட்டிருப்போம். ஆல்ப்ஸ் என்பது தென் மத்திய ஆஸ்திரியா, ஸ்லோவேனியா பகுதிகளில் துவங்கி, இடையில் இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளைக் கடந்து, மேற்கே ஃபிரான்ஸ் தேசம் வரை, இம்மலைத்தொடர் பிறை வடிவத்தில் மத்தியதரைக்கடலோரம் நீண்டிருக்கிறது. லத்தீன் மொழியில் ஆல்ப்ஸ் என்றால் வெண்மை என்று அர்த்தம். இம்மலைத்தொடர் பனி நிறைந்து வெண்மையாக இருப்பதால், ஆல்ப்ஸ் என்ற பெயர் பெற்றது. சுமார் ஆயிரத்து இருநூறு கிலோமீட்டர் நீளமும், இரண்டு லட்சத்து ஏழாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பல சிகரங்கள் பத்தாயிரம் அடிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இங்கு பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பனிப்பாறைகள் உள்ளன. ஆல்ப்ஸ் மலைத்தொடர் அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்தியதரைக் கடலையும், கருங்கடலையும் பிரிப்பதாக அமைந்துள்ளது. ரோன், டான்யுப், மற்றும் போ உள்ளிட்ட பல ஐரோப்பிய ஆறுகளின் தோற்றுவாயாக இம்மலைத்தொடர் விளங்குகிறது. பொதுவாக, கிழக்கு ஆல்ப்ஸ், மேற்கு ஆல்ப்ஸ் என்று இம்மலைத்தொடர் இரு பகுதிகளாகக் குறிப்பிடப்படுகிறது. ரைன், லிரோ, மேரா என்ற நதிகளை ஒட்டி, கான்ஸ்டன்ஸ் மற்றும் கோமோ என்ற ஏரிகளுக்கு இடையில் இப்பிரிவு நிகழ்ந்துள்ளது. மேற்கு ஆல்ப்ஸில், பதினாறாயிரம் அடி உயரமுள்ள மான்ட் என்பது மிக உடரமான சிகரமாக விளங்குகிறது. கிழக்கு ஆல்ப்ஸில் பதிமூன்றாயிரம் அடிகளுக்கு மிகுந்த பிஸ் பெர்னியா என்பதே உயரமான சிகரமாகும். ஆர்வம், வணிகம், ஆராய்ச்சி, சுற்றுலா, யாத்திரை என்று பல காரணங்களுக்காக ஆல்ப்ஸ் மலைத் தொடர் மனிதனை வசீகரித்துத் தன்பால் இழுக்கிறது. அங்காங்கே மலைச்சரிவுகளையும், இடைப்பட்ட சமவெளிகளையும் கடக்கச் சாலைகள், ரயில் பாதைகள், நடைபாதைகள் இருக்கின்றன. அதனால், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் வசதியாகப் பயணம் செய்வது இன்றைக்கு சாத்தியமாகி இருக்கிறது. மலையின் வெவ்வேறு உயரங்களில் வெவ்வேறு சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அதற்கேற்றபடி அங்கே தாவரங்ளும், உயிரினங்ளும் காணப்படுகின்றன. கிரேநோபிள், இன்ஸ்ப்ரூக், பொல்ஸானோ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆல்பைன் நகரங்களாக விளங்குகின்றன. செயின்ட் காடர்ட் கணவாய் ஆல்ப்ஸின் குறிப்பிடத்தக்க சுரங்கப் பாதைகளில் ஒன்றாகும். மூவாயிரம் அடிக்கும் தாழ்வான உயரங்களில், குளிர் குறைவாக இருப்பதால், சிறு சிறு கிராமங்கள் அமைந்துள்ளன. பலவகைத் தாவரங்கள் இங்குப் பயிரிடப்படுகின்றன. பனி மூடாத நேரத்தில், மலைத்தொடரே திடீரென்று உயிர்பெற்றது போல், பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ணமான பூக்களுடன் காண்போர் கண்களைக் கொள்ளை கொள்கிறது. கோடை, குளிர்காலம் இரண்டு பருவங்களிலும் சுற்றுலாவுக்கு ஆல்ப்ஸ் வழி செய்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில், பனிச்சறுக்குப் பந்தையங்கள் உள்ளிட்ட பல்வேறு பனி விளையாட்டுக்களில் பங்கு கொள்ள ஆர்வலர்கள் கூடுகின்றனர். இயற்கையின் மாபெரும் அழகுப் பிரதேசங்களில் ஒன்றாக ஆல்ப்ஸ் அமைந்துள்ளது. தரை மார்க்கம், ஆகாய மார்க்கம், மற்றும் ரயில் வழி என்று அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து ஆல்ப்ஸ் சென்று வர பல வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதன் காரணமாக ஆண்டு தோறும் பல கோடி சுற்றுலாப் பயணிகள் ஆல்ப்ஸ் மலைக்கு வருகின்றனர்.

>>>நவம்பர் 11 [November 11]....

நிகழ்வுகள்

  • 1500 - பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நேபில்ஸ் பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1673 - உக்ரேனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-லித்துவேனியாப் படைகள் ஓட்டோமான் இராணுவத்தைத் தோற்கடித்தன.
  • 1675 - குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவானார்.
  • 1675 - லெய்ப்னிட்ஸ் (Gottfried Leibniz) என்பவர் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பாவித்தார்.
  • 1778 - மத்திய நியூ யோர்க்கில் செனெக்கா இந்தியர்கள் 40 பேரைக் கொன்றனர்.
  • 1831 - அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டான்.
  • 1865 - டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்குக் கொடுத்தது.
  • 1880 - ஆஸ்திரேலியாவின் Bushranger நெட் கெல்லி மெல்பேர்னில் தூக்கிலிடப்பட்டான்.
  • 1887 - ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1889 - வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது.
  • 1909 - ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
  • 1918 - பிரான்சில் "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
  • 1918 - ஜோசப் பித்சூத்ஸ்கி வார்சாவுக்குத் திரும்பி போலந்தின் உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.
  • 1919 - இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
  • 1930 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
  • 1933 - யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
  • 1940 - ஐக்கிய அமெரிக்காவின் மிட்வெஸ்ட் நகரில் எதிர்பாராத சூறாவளியினால் 144 பேர் இறந்தனர்.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி பிரான்ஸ் மீதான தனது முற்றுகையை முடித்தது.
  • 1960 - தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
  • 1965 - ரொடீசியாவில் இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளை இன சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.
  • 1966 - நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
  • 1968 - மாலைதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
  • 1975 - ஆஸ்திரேலியப் பிரதமர் கஃப் விட்லம் தலைமையிலான அரசை அதன் ஆளுநர் கலைத்தார்.
  • 1992 - இங்கிலாந்து திருச்சபை பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.
  • 2004 - யாசர் அரபாத் இறந்து விட்டதாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது. மஹ்மூத் அப்பாஸ் தலைவரானார்.

பிறப்புக்கள்

  • 1898 - கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர் (இ. 1994)
  • 1821 - பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)
  • 1937 - ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர்
  • 1945 - டானியல் ஒர்ட்டேகா, நிக்கராகுவாவின் குடியரசுத் தலைவர்
  • 1974 - லியோனார்டோ டிகாப்ரியோ, அமெரிக்கத் திரைப்பட நடிகர்

இறப்புகள்

  • 1993 - கப்டன் மயூரன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (பி. 1970)
  • 1993 - கப்டன் ஈழமாறன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (பி. 1973)
  • 2004 - யாசர் அரபாத், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர், நோபல் பரிசாளர் (பி. 1929)
  • 2005 - பீட்டர் டிரக்கர், ஆஸ்திரிய மேலாண்மை அறிவியலாளர் (பி. 1909)

சிறப்பு நாள்

  • பொதுநலவாய(CommonWealth) நாடுகள் - நினைவுறுத்தும் நாள்
  • போலந்து - விடுதலை நாள் (1918)
  • அங்கோலா - விடுதலை நாள் (1975)

>>>“ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ”

“ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ”
     -------------------------------------------------
1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.
3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.
4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.
5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.
6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.
7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்? எடுத்துக்காட்டாக:
1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும்?
4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் (முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம்), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன? பாதுகாப்பானவையா? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா?
8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது?
10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா?
11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா?
12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும்? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும்? இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.
மாநில அரசு தகவல்கள் பெற :-
திரு. எஸ். இராம கிருட்டிணன், (இ. ஆ. ப, ஓய்வு)
மாநில தலைமை தகவல் ஆணையர், காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி, (வானவில் அருகில்) பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை, (தபால் பெட்டி எண் : 6405) தேனாம்பேட்டை, சென்னை - 600 018 தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580 Email : sic@tn.nic.in http://www.tnsic.gov.in/contacts.html
Tamil Nadu Information Commission
www.tnsic.gov.in

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவ...