கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நவம்பர் 15 [November 15]....

நிகழ்வுகள்

  • 1505 - போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
  • 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப்படைத் தளபதி வில்லியம் ஷேர்மன் அட்லாண்டா நகரைத் தீக்கிரையாக்கி ஜோர்ஜியாவின் சவான்னா துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.
  • 1889 - பிரேசில் குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.
  • 1926 - என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.
  • 1941 - நாசி ஜெர்மனியில் சில உயர் அதிகாரிகளைத் தவிர்த்து அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களையும் வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: சொலமன் தீவுகளில் குவாடல்கனல் என்ற இடத்தில் ஜப்பானியப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.
  • 1943 - நாசி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
  • 1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
  • 1949 - நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
  • 1966 - ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
  • 1969 - வியட்நாம் போர்: வாசிங்டன் டிசியில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.
  • 1970 - சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.
  • 1971 - இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.
  • 1978 - டிசி-8 ரக தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1983 - வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது.
  • 1988 - சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பூரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.
  • 1988 - பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.
  • 1990 - அட்லாண்டிஸ் விண்ணோடம் STS-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
  • 2002 - ஹூ சிங்தாவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
  • 2000 - இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • 2007 - வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1738 - வில்லியம் ஹேர்ச்செல், விண்கோள் யுரேனசைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி (இ. 1822)
  • 1986 - சானியா மிர்சா, இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை

இறப்புகள்

  • 1630 - ஜொஹான்னெஸ் கெப்லர், ஜெர்மானிய கணிதவியலாளரும், வானியலாளரும் (பி. 1571)
  • 1917 - எமில் டேர்க்கேம், பிரெஞ்சு சமூகவியலாளர் (பி. 1858)
  • 1949 - நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1910)
  • 1949 - நாராயண் ஆப்தே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1911)
  • 1961 - இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர்
  • 1982 - வினோபா பாவே, (பி. 1895)

சிறப்பு நாள்

  • பிரேசில் - குடியரசு நாள் (1889)
  • பாலஸ்தீனம் - விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)

>>>வட்ட, மாவட்ட தலைநகர்களில் ஆங்கில பயிற்சி மையங்கள்:ஒரு மாணவனுக்கு ரூ.2,800 ஒதுக்கீடு

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின், ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், வட்ட, மாவட்ட தலைநகரங்களில், ஆங்கில பயிற்சி மையங்கள் துவக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 10 மாதம் அளிக்கப்படும் பயிற்சிக்கு, ஒரு மாணவனுக்கு 2,800 ரூபாய் வீதம், 6,550 மாணவர்களுக்கு, 1.83 கோடி ரூபாயை, தமிழக அரசு செலவிட உள்ளது.மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டான, 2012-13ல், இப்பயிற்சி துவங்குகிறது. முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள, 96 பிற்படுத்தப்படுத்தப் பட்டோர் நல விடுதிகள், 47 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 13 சீர்மரபினர் நல விடுதிகள், 5 சிறுபான்மையினர் நல விடுதி என, 161 கல்லூரி விடுதிகளின் மாணவர்கள், இதில் பயிற்சியை பெற உள்ளனர். ஒரு மாணவருக்கு, 2,800 ரூபாய் வீதம், 6,550 மாணவர்களுக்கு, 1.80 கோடி ரூபாய், மாநில அரசு சார்பில் செலவு செய்யப்பட உள்ளது.சென்னையில், 500 மாணவர்கள், திருச்சியில் 475, தஞ்சாவூரில் 475, காஞ்சிபுரத்தில் 250, திருவண்ணாமலையில் 150, திருவள்ளூரில் 100 மாணவர்கள் என, 32 மாவட்டங்களை சேர்ந்த, 6,550 மாணவர்கள், இந்தப் பயிற்சி மூலம், பயன் பெற உள்ளனர். 10 மாதங்கள் அளிக்கப்படும் இந்தப் பயிற்சி, அடுத்த மாதம் துவங்குகிறது. ஒரு மணி நேரம் அளிக்கப்படும், இப்பயிற்சியில், பணிசார்ந்த மொழி கற்பித்தல், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, நடைமுறையில் பயன்படுத்தும் அடிப்படை சொற்கள், வாக்கியங்களை புரிந்து கொள்ளுதல், தகவல்களை தெளிவாக புரிந்து கொள்ளுதல், சரளமாகவும், தன்னிச்சையாகவும் ஆங்கிலம் பேசுதல், பிரபலமான தலைப்புகளிலிருந்து கருத்துகளை தெரிவித்தல், நிகழ்வுகள், அனுபவங்களை விவரித்தல் மற்றும் பேச்சு, இலக்கணம், உச்சரிப்பு உள்ளிட்டவைகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
பயிற்சி மையங்கள்:இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவர்களின் உயர் கல்விக்கும், படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள், வேலையில் சேர எதிர் கொள்ள கூடிய தகுதி தேர்வு, குழு உரையாடல் மற்றும் நேர்காணல் உள்ளிட்டவைகளை, எளிதில் சமாளித்து வெற்றி பெறுவதற்கும் இப்பயிற்சி உறுதுணையாக இருக்கும்.முதல் கட்டமாக, விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பயன் பெற்றவுடன், அடுத்த கட்டமாக, வட்ட, மாவட்ட தலைநகர்களில் பயிற்சி மையங்களை அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

>>>"புகைபிடிப்பதால் உருவாகும் உயிர்க்கொல்லி நோய்': நவ., 14, உலக சி.ஓ.பி.டி., நோய் தினம்

பத்து பயங்கர உயிர்க்கொல்லி நோய்கள் பட்டியலில், 1990ல் 6வது இடத்தில் இருந்த சி.ஓ.பி.டி., நோய், இன்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2020ல் இது 3வது இடத்திற்கு முன்னேறும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 23 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 62 சதவீதம் பேர் ஆண்கள். 38 சதவீதத்தினர் பெண்கள்.
நோயின் அறிகுறிகள்: வேகமான சுவாசித்தல், மூச்சை வெளியிடுவதற்கு அதிக நேரம் எடுத்தல், மார்பளவு அதிகரித்தல், முக்கியமாக முன்புறத்தில் இருந்து பின்புறத்திற்கான அளவு அதிகரித்தல், சுவாசித்தலுக்காக கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் அதிகம் பயன்படுவது, உதடுகளை சுழித்து மூச்சு இழுத்தல், மார்பின் குறுக்கு மற்றும் நெடுக்கு வீதம் அதிகரிப்பது இதன் அறிகுறிகள்.சி.ஓ.பி.டி., நோய்க்கு முக்கிய காரணம் புகைப்பிடிப்பதே.
இந்நோய் உருவாவதற்கான வாய்ப்பு, வயது அதிகமாகும்போது அதிகரிக்கிறது. வாழ்நாள் முழுவதும் புகை பிடிக்கும் அனைவருக்குமே சி.ஓ.பி.டி., தோன்றும். எனவே புகைபிடிப்பதை நிறுத்துவது அவசியம். இதற்கு மனஉறுதி அவசியம். சி.ஓ.பி.டி., நோய் 40 வயதை கடந்தவர்களுக்கு அதிகம் வருகிறது. இதனால் அவர்களின் சாதாரண வேலையைக் கூட செய்ய இயலாமல், மூச்சுத் திணறல் ஏற்படும். பகல், இரவு நேரங்களில் இடைவிடாது இருமல், மஞ்சள் கலந்த பச்சைநிறசளி அடிக்கடி வரும். பேச, நடக்க சிரமமாக இருப்பது, உதடு அல்லது விரல் நகங்கள் நீலம் அல்லது சாம்பல்நிறத்தில் இருப்பது, இருதயத் துடிப்பு வேகமாக, சீரற்று இருப்பது, மருந்தை எடுத்துக் கொண்ட பிறகும் நிவாரணம் கிடைக்காமல் மூச்சிரைப்பு இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும்.
கண்டறியும் பரிசோதனை: நுரையீரல் பரிசோதனைக்காக சில பரிசோதனைகள் உள்ளன. ஸ்பைரோமெட்ரி என்ற எளிய சோதனை மூலம், நுரையீரலுடைய செயல் திறன், மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை கண்டறியலாம். இதன் மூலம் எதிர்கால நுரையீரல் பிரச்னைகளை முன்கூட்டியே அறியலாம்.ஆறு நிமிட "வாக் டெஸ்ட்': இதில் நோயாளிகள் 6 நிமிடங்கள் நடப்பர். அதில்அவர்களின் நுரையீரல் செயல் திறனை அறியலாம்.இந்நோயை கட்டுப்படுத்த மிகவும் ஆற்றல் வாய்ந்த சிகிச்சைகள் உள்ளன.
குறிப்பாக இன்ஹேலர் சிகிச்சை உலகளவில் சிறந்தது. மேலும் விலையுயர்ந்த மருத்துவச் செலவையும் வீட்டிலேயே ஆக்சிஜன் சிகிச்சைக்கு உட்படுத்துவதை தவிர்க்கலாம்.இதன் மூலம் சிரமமின்றி சுவாசிக்க முடியும். நன்கு தூங்க முடியும். அன்றாட வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் தொடரலாம்.கட்டியான பச்சை நிற சளியை கரைக்க, "மியூக்கோ லைட்டிக்' மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.சி.ஓ.பி.டி.,யை கண்டறிதல் மூலம் இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க முடியும். இதற்காக மதுரை ஷெனாய்நகர், செஸ்ட்கிளினிக்கில் நவ., 16, 17 ல் பொருட்காட்சி நடத்தப்பட உள்ளது.-டாக்டர் எம்.பழனியப்பன் நுரையீரல் நோய் நிபுணர்மதுரை. 98421 16070.

>>>குழந்தைகள் - நாட்டின் மன்னர்கள் : -இன்று தேசிய குழந்தைகள் தினம்

 
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. இவரது பிறந்த தினம் (நவ.,14), தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது இவர் அன்பு கொண்டிருந்தார். குழந்தைகளும் அவரை "நேரு மாமா' என அழைத்தனர். இத்தினத்தில், பள்ளிகளில் பேச்சுப் போட்டி, கவிதை, ஓவியப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1889 நவ., 14ல் அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம் அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன. இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தை பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தை பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே உதவும் மனப்பான்மை வளரும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்து கொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும்

>>>உடல் உழைப்பு இல்லாததே நீரிழிவுக்கு முக்கிய காரணம்

"நீரிழிவு நோய் ஏற்பட, முக்கிய காரணம், உடல் உழைப்பு இல்லாததே' என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். நவம்பர், 14ம் தேதி, நீரிழிவு நோய் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, "அசோசேம்' அமைப்பின், டில்லி தலைவர் மற்றும் செயலர், டி.எஸ்.ராவத் கூறியதாவது:நொறுக்குத்தீனி தின்னும் பழக்கம் அதிகரிப்பு, பேக்கேஜ் உணவுகள் அதிகம் பயன்படுத்தப்படுவது, உடல் உழைப்பு சரிவர இல்லாதது போன்றவையே, நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணங்கள்.டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா மற்றும் புனே போன்ற நகரங்களில், 500 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில், அவர்கள் யாருமே போதிய அளவு, உடற்பயிற்சி மேற்கொள்வதில்லை என்பது தெரிய வந்தது. மேலும், அவர்களில் பெரும்பாலானோர், வீட்டை விட்டு வெளியே சென்றே விளையாடுவதில்லை. இதனால், நீரிழிவு நோய் மட்டுமின்றி, உடல் எடை அதிகரிப்பு, மன அழுத்தம், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.மைதாவால் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை உட்கொள்வது, கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது, வறுத்த, பொரித்த தின்பண்டங்கள் அதிகமாக சாப்பிடுவது போன்றவையே நீரிழிவு நோய்க்கான காரணங்களில் முக்கியமான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

>>>கூகுள் டூடுல் போட்டியில் சண்டிகர் மாணவர் வெற்றி!

தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, கூகுள் இந்தியா நடத்திய 'கூகுள் டூடுல்' போட்டியில் சண்டிகர் மாணவர் அருண் குமார் யாதவ் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ல் கூகுளின் இந்திய வலைத்தளப் பக்கத்தின் மாணவர் அருண் குமாரின் படைப்பில் உருவான டூடுல் வெளியாகும்.

உலக அளவில் சிறப்பு தினங்களையும், தலைவர்கள் மற்றும் வரலாற்று நாயகர்களின் பிறந்த தினங்களையும் கூகுள் தனது வலைப்பக்கத்தில் சிறப்பிக்கும். கண்ணைக் கவரும் அம்சங்கள்கொண்ட அந்தப் பக்கங்களே கூகுள் டூடுல் எனப்படுகிறது.

நடப்பு ஆண்டின் குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய மாணவர்களுக்கு கூகுள் இந்தியா ஒரு போட்டியை வைத்தது. டூடுல் ஃபார் கூகுள் என்பது அந்தப் போட்டி. அதன் தலைப்பு - 'வேற்றுமையில் ஒற்றுமை'.

இந்தப் போட்டியில் இந்தியா முழுவதும் 60 நகரங்களைச் சேர்ந்த 2,00,000 சிறுவர், சிறுமிகள் தங்கள் கற்பனையில் டூடுல்களை வரைந்து அனுப்பினர்.

டெல்லியில் உள்ள ரயில் அருங்காட்சியகத்தில் திங்கட்கிழமை வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதில், சண்டிகரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் அருண் குமாரின் டூடுல், குழந்தைகள் தினத்தன்று கூகுள் இந்தியாவில் வெளியிட தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. கால்பந்து வீரர், கதகளி நடனக் கலைஞர், மயில், விவசாயி மற்றும் பூக்களைக் கொண்டு கூகுள் டூடுலை அவர் கண்ணைக்கவரும் வகையில் டூடுலை உருவாக்கினார்.

மேலும், கோழிக்கோடைச் சேர்ந்த வாசுதேவன் தீபக், பெங்களூரைச் சேர்ந்த ஷ்ர்வயா மற்றும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ப்ரீத்தம் பால் ஆகிய மூன்று மாணவர்களும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரபல கார்ட்டூனிஸ்ட் அஜித் நினான் மற்றும் நடிகர் போமன் ஹிரானி ஆகியோர் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

''குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் கூகுள் டூடுல் போட்டிகளை நடத்தி வருகிறோம். கூகுள் மூலமாக விழிப்பு உணர்வும் மேற்கொண்டு வருகிறோம்," என்றார் கூகுள் இந்தியாவின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜன் ஆனந்தன்.  

>>>நவம்பர் 14 [November 14]....

நிகழ்வுகள்

  • 1885 - செர்பியா பல்கேரியா மீது போர் தொடுத்தது.
  • 1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
  • 1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.
  • 1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் ஜேர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.
  • 1956 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
  • 1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
  • 1965 - வியட்நாம் போர்: லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.
  • 1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
  • 1970 - மேற்கு வேர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1971 - மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
  • 1975 - மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.
  • 1990 - கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
  • 1991 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரொடோம் சிஹானூக் 13 ஆண்டுகளின் பின்னர் புனோம் பென் திரும்பினார்.
  • 1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  • 2001 - ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் கூட்டுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.

பிறப்புக்கள்

  • 1840 - குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (இ. 1926)
  • 1889 - ஜவகர்லால் நேரு, இந்தியப் பிரதமர் (இ. 1964)
  • 1930 - எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967)
  • 1931 - இரா. பெருமாள் ராசு, இந்தியக் கவிஞர்
  • 1954 - காண்டலீசா ரைஸ், ஐக்கிய அமெரிக்காவின் 66வது செயலாளர்
  • 1971 - அடம் கில்கிறிஸ்ற், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.

இறப்புகள்

  • 1831 - ஹெகல், ஜெர்மன் நாட்டு மெய்யியல் அறிஞர் (பி. 1770)

சிறப்பு நாள்

  • இந்தியா: குழந்தைகள் நாள்.
  • உலக நீரிழிவு நோய் நாள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...