அரசு பள்ளிகளில், 5,000 ஆய்வக உதவியாளர்கள், வேலைவாய்ப்பு அலுவலக
பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசு
உயர்நிலைப் பள்ளிகளில், 1980ல், 400 ஆய்வுக்கூட உதவியாளர் பணியிடங்களும்,
'81ல், 500 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின், இப்பணியிடங்களில்
நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், 31 ஆண்டுகளுக்குப்
பின், தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 544 ஆய்வக உதவியாளர்
பணியிடமும், காலியாக உள்ள, 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களையும் நிரப்ப,
இம்மாதம், 11ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆய்வக
உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், பணி
நியமனங்கள் நடந்தன. தற்போது, அனைத்து வகை பணி நியமனங்களும், போட்டித்
தேர்வு அடிப்படையிலேயே நடந்து வருகின்றன. இதனால், ஆய்வக உதவியாளர்
பணியிடங்களும், போட்டித்தேர்வு அடிப்படையில் நடைபெறுமா என, கேள்வி
எழுந்தது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரம் கூறியதாவது:
அமைச்சுப் பணியாளர்கள் நியமனம் மட்டுமே, தேர்வாணைய வரம்பிற்குள் வருவர்.
ஆய்வக உதவியாளர் பணி நியமனம், பொது சார்புப் பணிகளின் கீழ் வரும். எனவே,
இந்த வகை பணி நியமனங்கள், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் தான்
நடக்கும். கல்வித்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களில்,
கல்வித்தகுதி வாய்ந்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு முதலில், ஆய்வக
உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்படும். மீதமுள்ள பணியிடங்கள், அந்தந்த
மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட அளவிலான
பதிவுமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி
நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆய்வக
உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்த முதல்வரின் அறிவிப்பை,
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட உதவியாளர் சங்கம் வரவேற்றுள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>கண் மருத்துவ பட்டய படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
கண் மருத்துவ பட்டய படிப்பு மற்றும் மருத்துவம் சார்
படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வழங்கப்படுகிறது. மருத்துவ
பதிவேடு அறிவியல், பல்வேறு மருத்துவம் சார் சான்றிதழ் படிப்புகள்,
செவிலியர் உதவியாளர் பட்டய படிப்பு மற்றும் கண் மருத்துவ பட்டய படிப்பு
ஆகியவற்றில் சேர, இன்று முதல், இம்மாதம், 24ம் தேதி வரை, சென்னை
மருத்துவக் கல்லூரியில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்ப
கட்டணம், 200 ரூபாயை, ஏதேனும் ஒரு தேசியமய வங்கியில், சென்னையில்
மாற்றத்தக்க வகையில், " The Secretary, Selection Committee, Kilpauk,
Chennai 10' என்ற பெயரில், டி.டி.,யாக எடுக்க வேண்டும். எஸ்.சி., -
எஸ்.டி., பிரிவினர், விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. சென்னை
மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>>டி.என்.பி.எஸ்.சி., செயலர் பொறுப்பேற்பு
டி.என்.பி.எஸ்.சி., செயலராக நியமிக்கப்பட்ட விஜயகுமார், நேற்று பொறுப்பேற்றார். தேர்வாணையத்தின்
செயலராக இருந்த உதயசந்திரன், அக்., 22ம் தேதி, குன்னூர் தேயிலை தோட்டக்கழக
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் - செயலரான விஜயகுமார், தேர்வாணையத்தின்
புதிய செயலராக அறிவிக்கப்பட்டிருந்தார். அரசின் உத்தரவு வந்ததும்,
உடனடியாக செயலர் பதவியில் இருந்து, உதயசந்திரன் விலகவில்லை.
தேர்வாணையத்தில், அவரை தக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இது தோல்வி
அடைந்ததைத் தொடர்ந்து, இம்மாதம், 9ம் தேதி, செயலர் பதவியில் இருந்து,
உதயசந்திரன் விலகினார். இதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் புதிய செயலராக,
விஜயகுமார், நேற்று காலை பொறுப்பேற்றார்.
>>>ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிட கலந்தாய்வு
சென்னையில் நேற்று, ஆதிதிராவிட பள்ளிகளுக்கு தேர்வான பட்டதாரி
ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கடந்த, 2010-11ம் ஆண்டில்,
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி காலி பணியிடங்களை
நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது.
இதில், தேர்வானவர்களுக்கு, நேற்று, சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல
ஆணையர் அலுவலகத்தில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், ஆதிதிராவிடர் நல
ஆணையர், சிவசங்கரன் தலைமை வகித்து, ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தினார்.
தமிழகமெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 37 ஆசிரியர்கள், நலத்துறை
கல்வி அதிகாரிகள், இதில் கலந்து கொண்டனர்.
>>>வெஜ் புலவு, முட்டை மசாலா தயாரிப்பது எப்படி? : பள்ளி சத்துணவு சமையலர்களுக்கு விரைவில் பயிற்சி
பள்ளிகள், அங்கன்வாடி சத்துணவில், பலவகை உணவு வகைகளை சமைப்பது குறித்த
பயிற்சி, சத்துணவு சமையலர்கள், உதவியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. கடந்த
30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே மாதிரியான உணவுத்திட்டம் செயல்படுத்தப் பட்டு
வருகிறது. குழந்தைகளிடத்தில் தற்போது உணவுப் பழக்க வழக்கம் மாறியுள்ளது.
இதனால், சத்துணவுத் திட்டத்தில் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக
குறைந்தது. பள்ளி இடை நிற்றல் மற்றும் ஊட்டச்சத்து குறைவு அதிகரித்ததாக
அரசுக்கு தகவல் கிடைத்தது. இதை மாற்றும் முயற்சியாக, பள்ளிகளில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும், பல வகை உணவுகளை அளிக்க அரசு முடிவெடுத்தது. சென்னையில்,
தாமு உள்ளிட்ட, சில பிரபல சமையல் வல்லுனர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களின்
ஆலோசனையுடன், புதிய உணவுகளை, சத்து குறையாமல் தயாரித்து வழங்க
திட்டமிடப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை மற்றும் திருச்சி, ஸ்ரீரங்கம்
தொகுதியில் உள்ள ஒரு பள்ளியிலும், சோதனை ரீதியாக இந்த திட்டம் அமல்படுத்தப்
பட்டது. அப்போது, பலவகை சாதங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிட்டது
கண்டறியப் பட்டது. இதையடுத்து, ஊட்டச்சத்து மிகுந்ததாக, அந்த சாதங்களை
தருவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு, இத்திட்டத்தை, இம்மாதம் 2ம் தேதி,
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, 13 சாத வகைகள்,
மசாலா, மிளகுத்தூள் முட்டை என, நான்கு முட்டை உணவு வகைகள், உருளைக்கிழங்கு
பொரியல் உள்ளிட்டவை, வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். வாரந்தோறும்
மாறும் இந்த உணவு வகைகள், சோதனை அடிப்படையில், மாவட்டத்திற்கு ஒரு
பகுதியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முதல்கட்டமாக, சத்துணவு திட்ட
சமையலர், அங்கன்வாடி ஊழியர்களுக்கு, பல வகை உணவு சமைப்பது குறித்து
பயிற்சியளிக்க சத்துணவுத் திட்டத்துறை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து
அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்,
சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்பணி விரைவில்
முடிந்து விடும். மாவட்டம் தோறும் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லாத பகுதியை
தேர்வு செய்து, அதில் உள்ள சமையலர்கள், உதவியாளர்கள், சத்துணவு
அமைப்பாளர்களுக்கு, பலவகை உணவு சமைத்தல், அதில் சேர்க்க வேண்டிய
பொருட்களின் அளவு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், கடைகளில்
கிடைக்கும், "ரெடிமேட்' பொடி வகைகளை பயன்படுத்தக் கூடாது என்றும்,
புளியோதரைக்கு தேவையான புளிக்காய்ச்சல், அன்றாடம் தயாரிக்க வேண்டும்
என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையலர்களுக்கான பயிற்சி விரைவில் துவங்க
உள்ளது. தொடர்ந்து, பல வகை உணவுகள் மாணவர்களுக்கும், அங்கன்வாடி
குழந்தைகளுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
>>>சர்க்கரை நோய் வந்தாலே, அது "முதல் மாரடைப்பு'
"சர்க்கரை நோய் வந்துவிட்டாலே, "முதல் மாரடைப்பு' வந்துவிட்டதாக பொருள்,'
என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கருத்தரங்கு நடந்தது. இதில் டாக்டர்
மகேஷ்பாபு பேசியதாவது: இந்தியாவில் 6 கோடி பேர், சர்க்கரை நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதைவிட அதிகமானோர், தங்களுக்கு நோய் உள்ளது
என்பதை கண்டறியாமல் உள்ளனர். எனவே 30 வயதை கடந்த அனைவரும் தங்களை பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும். அவசர வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் சர்க்கரை நோயை
உருவாக்கியுள்ளன. துவக்கத்தில் இந்நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால், நோய்
முற்றி கண்கள், சிறுநீரகம், நரம்பு, இருதயம், மூளையை
பாதித்துவிடும்.சர்க்கரை நோய் வந்துவிட்டாலே, "முதல் மாரடைப்பு'
வந்துவிட்டதாக பொருள். எனவே இந்நோய் கண்டறியப்பட்டது முதல், உணவுக்
கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, அதிக காய்கறிகளை உண்பது, மருந்து மாத்திரைகளை
உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.தற்போது
20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கூட இந்நோய் வருகிறது. உடற்பயிற்சி, மாலை
நேரங்களில் விளையாடாமை இதற்கு காரணம். மாணவர்கள் அதிகமாக விளையாட வேண்டும்.
நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். தமிழக அரசு
மருத்துவ மனைகளில், சர்க்கரை நோய் மாத்திரைகள், இன்சுலின் போன்றவை இலவசமாக
கிடைக்கிறது. மது அருந்துவோருக்கு கணையம் பாதிப்பதால், சர்க்கரை நோய் வரும்
வாய்ப்பு அதிகமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
>>>"கண்ணீரே வராமல் தடுப்பவன் நண்பன்'
"சிறந்த மாணவர்களை உருவாக்கும் சிற்பிகளாக ஆசிரியர் மாற வேண்டும்; கண்ணீரை துடைப்பவன் நண்பன் அல்ல; கண்ணீரே வராமல் தடுப்பவன் நண்பன்,''
என ஓய்வு பெற்ற பேராசிரியர் சூரியநாராயணன் பேசினார். இடுவாய் அடுத்த
சின்னக்காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1954ல் படித்த
மாணவர்கள் சந்திப்பு கூட்டம், "நெஞ்சம்மறப்பதில்லை' என்ற தலைப்பில் பள்ளி
வளாகத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் விநாயகம் வரவேற்றார். ஓய்வு
பெற்ற கோவை அரசு கலைக்கல்லூரி ஆங்கில துறை பேராசிரியர் சூரியநாராயணன்
பேசியதாவது:பள்ளியில் மாணவன், ஆசிரியர் இருவரும் இரு கண்களைபோல் இருக்க
வேண்டும். சிறந்த ஆசிரியரால் மட்டுமே நல்ல மாணவனை உருவாக்க முடியும். அதன்
மூலமே அவன் எதிர்காலமும் பிரகாசமாகும். சரியான முறையில் எதிர்பார்த்த கல்வி
கிடைக்காததால் தான், நம் நாட்டில் வன்முறை, கலவரம், தீவிரவாதம்
உருவாகிறது. குருவை மதிக்கத் தெரிந்தவன் மட்டுமே புகழ் பெறுவான். கற்க
வேண்டிய பருவத்தில் நன்முறையில் முழு மனதுடன் கற்றால் மட்டுமே அது களவற்ற
கல்வி.அன்றைய மாணவர்களுக்கும், இன்றைய மாணவர்களுக்கும் வேறுபாடுகள்
ஆயிரம்; இன்றைய மாணவர்கள் கல்வியை மறந்து காதலை பெரியதாக நினைக்கின்றனர்.
கடமை மறந்து, ஆசிரியர், பெற்றோரை மறந்து, பிறந்த மண்ணை மறந்து பாதை மாறி,
விழித்துக் கொண்டே செல்கின்றனர். நல்ல கல்வி கற்ற ஒரு மாணவன் எப்போதும்
பாதை மாற மாட்டான். தன்னிடம் படித்த மாணவன், நல்ல பதவியுடன் உயர்ந்து
நின்று, வாழ்வில் வளம் பெற்றான் என்று கூறுவதை தவிர, ஆசிரியருக்கு வேறு
பெருமை கிடைக்காது. அதையே இன்றைய ஆசிரியர்களும் விரும்புகின்றனர்.
பிடிப்பான வாழ்க்கை வேண்டாம்; பிடித்த வாழ்க்கையில் சிறப்பாக இருக்க
முயற்சியுங்கள். எந்தவொரு மாணவனுக்கு நல்ல நண்பன் அமைகிறானோ, அவன் வாழ்க்கை
சிறக்கும்; நல்ல ஆசிரியரும் கிடைத்துவிட்டால் வாழ்வு பூத்துக்குலுங்கும்.
ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்கும் சிற்பிகளாக மாறி பணியாற்றுங்கள்.
கண்ணீரை துடைப்பவன் நண்பன் அல்ல; கண்ணீரே வராமல் தடுப்பவனே நண்பன்.
நண்பனுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள், என்றார்.கடந்த 54ம் ஆண்டு முதல்
கடந்தாண்டு வரை படித்த 300 மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். கடந்த
1954ல் பள்ளியின் முதல் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய
பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா நிறைவில்,முன்னாள்
மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி, குடும்ப உறவுகளை
அறிமுகப்படுத்தி, கண்ணீருடன் விடை பெற்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்
கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...
