கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி.,

"அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது:டி.இ.டி., தேர்வு வழியாக, தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிடங்கள் என, ஆண்டுதோறும், புதிய ஆசிரியர் நியமன எண்ணிக்கை, கணிசமாகவே இருக்கும்.பட்டதாரி ஆசிரியரில், தமிழ், வரலாறு, அறிவியல் பாடங்களில் படித்தவர்கள், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். ஆனால், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு, தேவை அதிகமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.எனவே, பி.ஏ., - பி.எட்., ஆங்கிலம் படிப்பவர்கள், எளிதாக, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், உடனடியாக வேலை வாய்ப்பையும் பெற முடியும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம் தரப்படவில்லை. ஆனால், முதுகலை கணக்கு பட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ஆசிரியர் வரை, புதிதாக நியமிக்கப்படுகின்றனர். வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.

>>>அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஒரு லட்சம் துண்டு பிரசுரம் வினியோகம்

"தமிழக அரசுக்கு, பல்வேறு வகைகளில் வரிகளை செலுத்தும் மக்கள், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்த்து, இலவச கல்வி பெற ஆர்வம் காட்ட வேண்டும்' என, ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. இதை வலியுறுத்தி, ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்களை வினியோகிக்க முடிவு செய்திருக்கிறது.
பெற்றோர், இலவச கல்வி தரும் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், தரமான ஆசிரியர்கள் உள்ளனர். தமிழக அரசு, மாணவ, மாணவியருக்கு, இலவச கல்வி வழங்குவதுடன், பல்வேறு இலவச திட்டங்களையும் வழங்குகிறது.ஆண்டுக்கு, நான்கு ஜோடி இலவச சீருடை, நாள்தோறும், ஒரு முட்டையுடன், ஏழு வகை மதிய உணவு, வாழைப்பழம், இலவச பாடப் புத்தகங்கள், எழுது பொருட்கள், நோட்டுகள், சைக்கிள், "லேப்-டாப்' கம்ப்யூட்டர் என, பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு அளிக்கிறது. இதை, பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பல்வேறு வரிகளை கட்டுகிற மக்கள், அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தங்கள் குழந்தைகளை, இலவச கல்வி அளிக்கும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.இதை வலியுறுத்தி, இன்று மற்றும் நாளை, ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள், மக்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.மக்களுக்கு வழங்க அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் மற்றும் நன்மைகள், இரண்டு பக்கங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன..

>>>கல்வி வளர்ச்சிக்கு பிராந்திய மொழிகள் அவசியம்:விஞ்ஞானி பேச்சு

கல்வி வளர்ச்சியின் ஒரு பகுதியாக பிராந்திய மொழிகள் இருப்பது அவசியம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களால் மட்டுமே சிறந்த கல்வியை அளிக்க முடியும் எனும் நிலையை மாற்றி, கலாசாரத்துடன் ஒருங்கிணைந்த கல்வியை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்,'' என, விஞ்ஞானி ராஜன் பேசினார்.இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில், "கல்வியில் தரம்' என்ற தலைப்பில், 10வது மண்டல மாநாடு துவக்க விழா நேற்று கோவையில் நடந்தது.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு கோவை மண்டலத் தலைவர் அசோக் பக்தவத்சலம் வரவேற்றார். தேசிய தரமதிப்புச் சான்று, கல்வி மற்றும் பயிற்சி கழக தலைவர் சந்திரசேகர் பேசியதாவது:இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வரும் அதேவேளையில் 40 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வருந்ததக்கது. ஐ.நா., குழு நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் 50 சதவிதத்துக்கும் குறைவான கிராமப்புறக் குழந்தைகளே பள்ளிக் செல்கின்றனர் என, தெரிய வந்துள்ளது. இது இந்தியக் கல்வி தரத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. எதிர் வரும் 2025ம் ஆண்டில் அதிகளவு தகுதி வாய்ந்த மனித வளம் உள்ள நாடாக இந்தியா இருக்கும்.

கல்வித்துறையில் தனியார் மட்டுமே சிறந்த கல்வியை அளித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே சிறந்த கல்வி கிடைக்கிறது. இன்ஜினியரிங் துறையில் 20 சதவீத மாணவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆனால் அவர்களுக்கும் பயிற்சிகள் தேவைப்படுகிறது. கல்வியின் அடித்தளமாக இருப்பது ஆரம்பக் கல்வி. அடித்தளம் சரியாக அமையவில்லை என்றால் மொத்த கல்வியும் சரியாக அமையாது. இந்தியாவின் 48 சதவீதம் பள்ளிகளில் அடிப்டை வசதிகளே இருப்பதில்லை. ஆரம்பக் கல்வியை வலுப்படுத்த அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதற்கான தணிக்கை குழவை ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்த வேண்டும். பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடம் கற்பித்தால் மட்டுமே வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட முடியும். கல்வித் தரத்தில் போட்டியிடக்கூடிய நிறுவனங்களை உருவாக்கினால் மட்டுமே தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.

தேசிய தரமதிப்புச் சான்று கழக தலைவர், ராஜன் பேசியதாவது:உலக அளவில் கல்வி வளர்ந்து வரும் நிலையில், இந்தியக் கல்வியின் தரம் கேள்விக்குறியாகவே உள்ளது. வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி தரம் வளரவில்லை. தொழிற்சாலைகள் தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து லாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆரம்பக் கல்வித் துறையின் மீது தொழிலகங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் 15 சதவீதத்தினர் மட்டுமே சிறந்த உயர்கல்வியை பெறுகின்றனர்.

பிளஸ்2 வகுப்புக்குப் பிறகு சாதாரண உயர்கல்வி எட்டு சதவீதத்தினருக்கு கிடைக்கிறது. 70 சதவீதம் மாணவர்கள் எந்தவித மேல் படிப்பையும் மேற்கொள்வதில்லை. வளர்ந்து வரும் கல்வியில் சில பிரச்னைகள் உள்ளன. பிரச்னைகளை களைந்து மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க வேண்டும். மாணவர்களின் திறமைகளை தொழிலகங்களின் தேவைக்கேற்ப மாறுபடுத்திக்காட்ட வேண்டும். கல்வி வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்திய மொழிகள் இருப்பது அவசியம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களால் மட்டுமே சிறந்த கல்வியை அளிக்க முடியும் எனும் நிலையை மாற்ற வேண்டும்.

கலாசாரத்துடன் ஒருங்கிணைந்த கல்வியை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை மண்டல துணைத் தலைவர் சுந்தரராமன், கல்வி ஒருங்கிணைப்பாளர் செந்தில் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

>>>நவம்பர் 24 [November 24]....

நிகழ்வுகள்

  • 1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
  • 1642 - ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.
  • 1859 - சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.
  • 1914 - முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
  • 1917 - விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1922 - துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டேர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1926 - பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டராவா என்ற இடத்தில் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானங்கள் குண்டுகளைப் போட்டன.
  • 1965 - ஜோசப் மொபுட்டு கொங்கோவின் குடியரசுத் தலைவர் பதவியை இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் கைப்பற்றினார். இவர் 1971 இல் கொங்கோவின் பெயரை சாயீர் என மாற்றினார். 30 ஆண்டுகளின் பின் 1997 இல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  • 1966 - சிலோவாக்கியாவில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1969 - சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
  • 1971 - வாஷிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் பாரசூட்டுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
  • 1992 - மக்கள் சீனக் குடியரசில் சீன விமானம் ஒன்று வீழ்ந்ததில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1992 - யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
  • 2002 - ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
  • 2006 - சிங்கள நாளிதழான `மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பிறப்புக்கள்

  • 1938 - ஆஸ்கர் ராபர்ட்சன், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
  • 1961 - அருந்ததி ராய், இந்தியப் பெண் எழுத்தாளர்

இறப்புகள்

சிறப்பு நாள்

  • கொங்கோ மக்களாட்சிக் குடியரசு - தேசிய நாள்
  • படிவளர்ச்சி நாள் [படிவளர்ச்சி நாள் (Evolution Day) என்பது உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும். இது நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1859 ஆம் ஆண்டில் இதே நாளில் சார்ல்ஸ் டார்வின் இந்நூலை எழுதி வெளியிட்டார்[1]. படிவளர்ச்சிக் கொள்கையை முதன் முதலில் அறிவித்த டார்வினின் பிறந்தநாள் பெப்ரவரி 12 டார்வின் நாள் எனக் கொண்டாடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியிடப்பட்டு 150வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. இதே ஆண்டு டார்வினின் 200வது பிறந்த நாளும் ஆகும்.]

>>>பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

>>>கலைகளைக் காப்போம்! - வெ.இறையன்பு

பல்வேறு இடங்களுக்கு செல்லும் நாம் அழகான தோட்டங்கள், பரந்து விரிந்த கடற்கரை, கம்பீரமான கோயில்கள், சிறப்பு மிகுந்த சிற்பங்கள் என்று பார்த்து மகிழ்கிறோம். அவற்றை அழகுபடுத்த முடியாவிட்டாலும் அழுக்குப்படுத்தாமல் இருப்பது அவசியம்.

கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கும்போது நாம் பெறுகிற சுகத்தை அங்கே இருப்பவர் களும் பெற வேண்டாமா? நாம் சாப்பிட்ட கடலைத் தோல்களையும், எண்ணெய் காகிதத்தையும் அங்கேயே போட்டால் எறும்புகள் மொய்க்காதா? ஈக்கள் சூழாதா? இப்படி பலரும் போட்ட தின்பண்டங்களின் எச்சங்கள் தமிழகத்தில் உள்ள ஒரு கடற் கரையையே சேதப் படுத்திவிட்டது. இப்போது அங்கே அமர்கிறவர்கள் வாழ்நாள் முழுவதும் தோல் நோயால் தொல்லையுறு கிறார்கள். மணலைச் சலித்து எடுத்தால்தான் அங்கிருக்கும் நுண்ணுயிரிகளைச் செயலிழக்கச் செய்யமுடியும் என்று அது குறித்த அறிவியல் அறிஞர்கள் அறிவிக்கின்றார்கள்.

புனிதத் தலங்கள் என்று சொல்லிக் கொண்டு, அவற்றை அழுக்குப்படுத்த நமக்கு மட்டும்தான் மனம் வரும். கோயில்களின் தெப்பக்குளங்கள் குப்பைத்தொட்டிகளாகும் அளவுக்கு, உபயோகித்த பொருள்கள் எல்லாம் எறியப்படு கின்றன. வணங்கிய சிலையையே உடைப்பது போன்றது இந்தச் செயல்.

அழகிய பூங்காக்கள் முழுவதும் காலை நேரத்தில் காகிதச் சிதறல்களாக இருப்பதைக் காணலாம். எங்கு சென்றாலும், எதையாவது தின்பதுதான் ஆனந்தமயமான அனுபவம் என்று எழுதப்படாத விதி நம்மிடம் இருக்கிறது. அதனால்தான், கடலை ரசிப்பதைவிட கடலை கொறிப்பதில் நமக்கு அக்கறை அதிகம். சாப்பிட்ட பிறகு காகிதங்களையும், மிச்சமானவற்றையும் குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் என்கின்ற ஆறாவது அறிவைப் பல நேரம் இழப்பவர்கள் நாலாந்தார மனிதர்களாகி விடுகிறார்கள்.

கோயில்களுக்குச் சென்றால், அங்கிருக்கும் சிற்பங்களில் ஆணியாலும், கரியினாலும் தங்கள் பெயர்களை எழுதி அசிங்கப்படுத்து பவர்கள் இருக்கிறார்கள். நம் உடலில் ஒரு சின்னக் கீறல் ஏற்பட்டாலே அடுத்தவர்களை நொந்து கொள்கிற நாம், அழகான சிற்பங்களைக் கொஞ்சம்கூட குற்றவுணர்வு இல்லாமல் காயப்படுத்துகிறோம். சிலர், சிற்பங்களின் மூக்குகளை உடைக்கிறார்கள், கைகளைச் சிதைக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்ட கலைச்சின்னங்களில் இப்படிப்பட்ட கயமைத்தனமான செயலால் நாம் சேதப்படுத்துகிறோம்.

நாம் செல்கிற இடங்களை கண்களால் ரசிப்போம். அவற்றை சிதிலப்படாமல் பாதுகாப்போம். மற்றவர்கள் அச்செயலைச் செய்கிறபோது தடுப்போம், அறிவுறுத்துவோம், விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். நம் நாட்டின் பெருமைகளைத் தொடர்ந்து பேணிக் காப்போம்.

>>>டி.இ.ஓ., காலியிடங்கள் 70 ஆக உயர்வு : பதவி உயர்வு அறிவிப்பு எப்போது

தமிழகத்தில் 70 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. டி.இ.ஓ., பதவி உயர்வு பட்டியல் அறிவிப்பு தாமதமாவது குறித்து ஆசிரியர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. அரசு திட்டங்களை செயல்படுத்துவது, கல்வி பணிகளை ஆய்வு செய்வது மற்றும் களப்பணிகள் ஆற்றுவது என, டி.இ.ஓ.,க்கள் பங்கு அதிகம். மாநிலத்தில் 70 டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன. 35 சி.இ.ஓ., பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், டி.இ.ஓ., பணிமூப்பு பட்டியலும், பள்ளி கல்வி துறையில் தயார் நிலையில் உள்ளது. ஆனால், அறிவிப்பில் தாமதம் ஏற்படுகிறது. பள்ளி கல்வி துறை இயக்குனராக தேவராஜ் பொறுப்பேற்றதும், காலி சி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பியது, "ஆன்லைன்' கவுன்சிலிங் மூலம் ஆசிரியர்களுக்கு அலைச்சலை தவிர்த்தது போன்ற நடவடிக்கைகள் எடுத்தது, வரவேற்பை பெற்றது. டி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை அறிவிப்பதில் மட்டும் "தொய்வு' நீடிக்கிறது. பதவி உயர்வு மூப்பு பட்டியலில் உள்ள தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: டி.இ.ஓ.,க் கள் பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் 25 சதவீதம், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 40 சதவீதம், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 35 சதவீதம் அடிப்படையில் ஒதுக்கப்படும். தலைமையாசிரியர்களின் பணிப்பதிவேடு (எஸ்.ஆர்.,) மற்றும் "கான்பிடன்ஷியல்' சான்று பரிசீலிக்கப்படும். தலைமையாசிரியர்கள் ரகசிய அறிக்கைகள் பெறுவதில் சிக்கல் உள்ளது. தலைமையாசிரியர் ஒருவர் பணிக்காலத்தில் எத்தனை டி.இ.ஓ.,க்களுக்கு கீழ் பணியாற்றினாரோ அவர்களின் ரகசிய அறிக்கைகளையும் பெற்று, இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பல அதிகாரிகள் ஓய்வு மற்றும் காலமானதையடுத்து, அந்த அறிக்கைகள் பெறமுடியவில்லை. இதனால், பதவி உயர்வு பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஆகிறது. பணிமூப்பு பட்டியலில் உள்ள தலைமையாசிரியர், கடைசியாக அதிகாரியிடம் பணியாற்றியவரின் ரகசிய அறிக்கையை மட்டும் பெற்றால் போதும், என விதியை தளர்த்த வேண்டும், என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Sastra University B.Ed., degree Eligible to Incentive : G.O. Ms. No: 112, DEE Proceedings & High Court Judgment

    தஞ்சை  சாஸ்த்ரா பல்கலைக்கழக பி.எட்., பட்டம் ஊக்க ஊதிய உயர்விற்கு செல்லும் என்கிற அரசாணை எண் : 112,  தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...