கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது," எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
உசிலம்பட்டி அருகே, கவுண்டம்பட்டி சூரியகாந்தியம்மாள் தாக்கல் செய்த மனு: நான், உசிலம்பட்டி அருகே திசுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் மனு அளித்தோம். அதன்படி, கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் 119 பட்டதாரி ஆசிரியர்கள், 27 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் செய்ய, 2011 மார்ச்சில் அரசு உத்தரவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அக்.,14ல், தகுதித்தேர்வு நடந்தது. நவ., 2 ல் தேர்வு முடிவு வெளியானது. நவ.,6 முதல் 7 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இவர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால், எங்களது இடமாறுதல் பாதிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சதீஷ் ஆஜரானார். நீதிபதி,""இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது" என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

>>>நவம்பர் 25 [November 25]....

நிகழ்வுகள்

  • 1120 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான்.
  • 1542 - ஆங்கிலேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்லாந்துப் படைகளைத் தோற்கடித்தன.
  • 1667 - கவ்காசியாப் பகுதியில் ஷெமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1703 - பிரித்தானியாவில் மிகப் பெரும் சூறாவளி பதியப்பட்டது. 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1758 - பிரித்தானியப் படைகள் பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne (பென்சில்வேனியா) ஐக் கைப்பற்றினர்.
  • 1783 - கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.
  • 1795 - சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஆகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
  • 1833 - சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • 1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1867 - அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
  • 1905 - டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் "ஏழாம் ஹாக்கோன்" என்ற பெயரில் நோர்வேயின் மன்னனானான்.
  • 1926 - ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் கொல்லப்பட்டு பலர் காயமுற்றனர்.
  • 1936 - ஜப்பான், ஜேர்மனி ஆகியன சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பேர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1950 - ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் ஏற்பட்ட சூறாவளியினால் மேற்கு வேர்ஜீனியாவில் 323 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1950 - மக்கள் சீனக் குடியரசு ஐநா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.
  • 1952 - அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.
  • 1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1973 - கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
  • 1975 - சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1981 - ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.
  • 1987 - பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1992 - செக்கொசிலவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக ஜனவரி 1, 1993 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.
  • 2000 - அசர்பைஜான் தலைநகர் பக்கு நகரில் இடம்பெற்ற 7.0 அளவை நிலநடுக்கத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1844] - கார்ல் பென்ஸ் ஜெர்மானிய வாகனப்பொறியாளர் (இ. 1929)
  • 1952 - இம்ரான் கான், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்

  • 1974 - ஊ தாண்ட், பர்மியர், முன்னாள் ஐநா செயலாளர் (பி. 1909)
  • 1979 - பெல்ஜியத் தமிழறிஞர் டெசி (பி. 1898)

சிறப்பு நாள்

  • பொஸ்னியா ஹெர்செகோவினா - தேசிய நாள் (1943)
  • சுரிநாம் - விடுதலை நாள் (1975)
  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்

>>>'நீங்களும் விஞ்ஞானி ஆக விரும்புகிறீர்களா?

 
'நீங்களும் விஞ்ஞானி ஆக விரும்புகிறீர்களா? அய்யய்யோ அறிவியல்.'

இப்படி நீளமான தலைப்பிலேயே பயமுறுத்துகிறார் ஆசிரியர். தைரியமாக புத்தகத்தில் நுழைந்தால், பித்தாகரஸ் முதல் இன்றைய இத்தாலி விஞ்ஞானி ஸ்டீபன் போர்க் வரை அத்தனைப் பேரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதை நடையில் சொல்கிறது புத்தகம். சாதாரணக் கதைகள் இல்லை. ஒவ்வொன்றுமே காட்டுக்குள் அட்வென்ச்சர் பயணம் போவதைப்போல் திக் திக் அனுபவங்கள். சில உதாரணங்கள்...

கி.மு. 470-ம் நூற்றண்டில் வாழ்ந்தவர் 'எம்பெடோகல்ஸ்' என்ற கிரேக்க ஞானி. பூகம்பம், மழை என அனைத்தையும் மிகச் சரியாக கணித்து சொல்பவர். திடீர் என ஒரு நாள் 'நான் கடவுளாக மாறப்போகிறேன்' என சொல்லிவிட்டு ஓடிப்போய் ஆழமான எரிமலைக்குள் குழிக்குள் குதித்துவிட்டார்.

நெம்புகோல் தத்துவத்தை அறிவதற்காக அடிமைகளை வைத்து பல்வேறு பாறைகளை தூக்கவைத்த ஆர்க்கிமெடிஸ்... செத்துப்போவது என்ன என்பதை அறிவதற்காக சோதனையில் இறங்கி நிஜமாக இறந்துவிட்ட பாவ்லவ்... ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டதால் தான் யார்? என்ன பெயர் என்பதையே 20 வருடங்களாக மறந்துபோய் தனது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற ஜான்நேஷ்...

இப்படி பல்வேறு கண்டுபிடிப்பாளர்கள் சந்தித்த சவால்கள், ஆபத்துகள், அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள், அறிவியலாளர்களின் விசித்திர குணங்கள் என நமக்கு அதிகம் தெரிந்து இருக்காத விஷயம் புத்தகம் முழுவதும் நிறைந்து இருக்கிறது. புத்தகத்தை கையில் எடுத்தால் ஓரிரு மணி நேரத்திலேயே படித்து முடித்துவிடலாம். அப்படி முடித்த பிறகு இரவு தூக்கத்தில் கலிலியோவும், பிளாட்டோவும் வந்தால் ஆச்சர்யம் இல்லை. இன்னொரு விஷயம்... இந்தப் புத்தகத்துடன், 10 எளிய இயற்பியல் சோதனைகள், 10 எளிய வேதியியல் சோதனைகள், 10 எளிய உயிரியல் சோதனைகள் என்ற மூன்று புத்தகங்கள் இலவசம்.

>>>அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு!

சென்னை:அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும்  திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில்,"அனைத்து அரசு  மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 'ஸ்மார்ட்  கார்டு' வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன்  அடிப்படையில், தமிழ்நாட்டில் முன்னோட்டமாக, திருச்சி மாவட்டத்தில் அரசு  மேல்நிலைப்பள்ளி, திருச்செந்துறை - அரசு மேல்நிலைப் பள்ளி, அய்லாப்பேட்டை -  அரசு மேல் நிலைப்பள்ளி, சோமரசம் பேட்டை - அரசு மேல்நிலைப்பள்ளி, எட்டரை -  அரசு மேல்நிலைப்பள்ளி, இனாம் குளத்தூர் ஆகிய ஐந்து மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும்  மாணவ, மாணவியருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஸ்மார்ட்  கார்டுகளை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம், மாணவ, மாணவியர்களின் பெயர், பெற்றோர் முகவரி,  பெற்றோர் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்த வகை  போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். மேலும், மாணவ, மாணவிகள்  குடும்பச் சூழ்நிலைக் காரணமாக இடம் பெயர நேரும் போது இதில் பதிவு செய்துள்ள  விவரங்களின் அடிப்படையில் எந்தப் பள்ளியிலும் சேர முடியும். இந்த ஸ்மார்ட் கார்டு  திட்டத்தின் மூலம் 91,54,741 மாணவ, மாணவியர் பயன்பெறுவார்கள். மாணவ, மாணவியர்களின் உடல்நலம் குறித்த விவரங்களை பதிவு செய்யும் ஹெல்த்  கார்டுடன் 'ஸ்மார்ட் கார்டு' ஒருங்கிணைக்கப்படும். இத்திட்டம் படிப்படியாக  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,  மாணவியருக்கு வழங்கப்படும். தலைமைச் செயலகத்தில், 2011-12ஆம்  கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்று  தேர்ச்சி பெற்றுள்ள 4,60,779 மாணவ, மாணவியருக்கு முதிர்ச்சியடைந்த சிறப்பு  ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்து, மாணவ,  மாணவியருக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார்.2011-12ஆம் கல்வியாண்டில் 21 லட்சத்து 36 ஆயிரம் மாணவ, மாணவிகள்  பயன்பெறும் வகையில் 313 கோடியே 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு  தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2012- 13ஆம் கல்வி ஆண்டில் 21,52,986 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில்  353 கோடியே 56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு  உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரின் வருமானம் ஈட்டும் தாய்  தந்தையர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ,  அப்பெற்றோர்களின் குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளிச் செல்லும் குழந்தைகளின்  கல்விச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவிற்காக ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய்  வீதம் நிரந்தர வைப்பு நிதியாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 2011-12 மற்றும் 2012-13ஆம் கல்வியாண்டுகளில் 720  மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கான வைப்பு  நிதி பத்திரங்களை முதலமைச்சர் ஜெயலலிதா மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.  முதன்மை கல்வி அலுவலர்களுக்கு 6 புதிய வாகனங்களும், மாவட்ட கல்வி  அலுவலர்களுக்கு 9 புதிய வாகனங்களும், என மொத்தம் 83 லட்சத்து 460 ரூபாய்  செலவில் வாங்கப்பட்ட 15 புதிய வாகனங்களையும் முதல்மைச்சர் ஜெயலலிதா  வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.

>>>மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம் !!!

 
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும் அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.

மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்
குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.

காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system)அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு(Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.

மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம்(Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.

அதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.

தன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல்களில் அடங்கும்.

பொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.

இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.

நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.

நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.

இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.

>>>20 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வளாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான மையங்கள், அரசு கல்லூரிகளில் துவங்கப்பட உள்ளன. இதற்காக, ஆறு கோடி ரூபாயை, தமிழக அரசு செலவிட உள்ளது.தமிழகத்தில் உள்ள, 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், 20 ஆயிரம் மாணவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு திட்டம் மூலம், இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நான்காம் மற்றும் ஐந்தாம் பருவ தேர்வுகளில், இப்பயிற்சி அளிக்கப்படும்.
ஒரு வாரத்திற்கு, எட்டு மணி நேரம் என்ற கணக்கில், நடப்புக் கல்வியாண்டில் பயிற்சி தரப்படும்.கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் வளாக தேர்வில், எந்தெந்த காரணங்களால், மாணவர்கள் தோல்வியடைகின்றனர் என்பதை கண்டறிந்து, அதை போக்க இப்பயிற்சி உதவிடும். பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவம், சில்லரை வணிகம் என, அந்தந்த துறைகளுக்கு ஏற்ப இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பணி சார்ந்த மொழி கற்பித்தல், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, வாக்கியங்களை, தகவல்களை தெளிவாக புரிந்து கொள்ளுதல், சரளமாகவும், தன்னிச்சையாகவும் ஆங்கிலம் பேசுதல், பிரபலமான தலைப்புகளிலிருந்து கருத்துகளை தெரிவித்தல், நிகழ்வுகள், அனுபவங்களை ஆங்கிலத்தில் விவரித்தல் போன்ற பயிற்சிகள், இதில் அடக்கம்.ஒவ்வொரு துறைவாரியான பயிற்சி, தன்னம்பிக்கை வளர்த்தல் உள்ளிட்டவை குறித்தும், பயிற்சி பாடத்தில் அடங்கும்.அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், பயிற்சி அளிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பயிற்சி அதிகாரி கூறியதாவது:இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, முன்தேர்வு நடக்கிறது. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே, பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கல்லூரி வளாகத்தில் நேர்காணலை சந்திக்கும் மாணவர்களுக்கு, இப்பயிற்சி பெரும் உதவியாக இருக்கும். பயிற்சி மையங்கள் அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.

>>>துப்புரவு பணியாளர், காவலர் நியமனம்:தர்மபுரியில் அதிகம், சென்னையில் குறைவு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 2,216 துப்புரவு பணியாளர்கள், 1,492 காவலர்கள் என, 3,708 பேருக்கு, இணையதளம் வழியாக, நேற்று கலந்தாய்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்பட்டனர்.மொத்தம், 5,000 பேர், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், சில மாவட்டங்களில், முன்னுரிமைப் பட்டியலின் கீழ், சில பிரிவினர் இல்லாததால், முதல் கட்டமாக, 3,708 பேருக்கு மட்டும், பணி நியமனம் நடந்ததாக, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மீதமுள்ள, 1,292 பேருக்கான பதிவுமூப்பு பட்டியல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பெற்று, விரைவில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும், 66 கல்வி மாவட்ட அலுவலகங்களில், பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதை, பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இருந்தபடி, இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் கண்காணித்தனர். கலந்தாய்வு முடிந்ததும், சம்பந்தபட்டவர்களுக்கு, கல்வி மாவட்ட அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர். நியமன உத்தரவு பெற்ற அனைவரும், உடனடியாக பணியில் சேர, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.அதிகபட்சமாக, வேலூர் கல்வி மாவட்டத்தில், 116 துப்புரவு பணியாளர்களும், 98 காவலர்களும், பணியில் சேர்ந்தனர். தர்மபுரி கல்வி மாவட்டத்தில், 85 துப்புரவு பணியாளர்கள், 67 காவலர்களும், சேலம் கல்வி மாவட்டத்தில், 69 துப்புரவு பணியாளர்கள், 59 காவலர்களும் நியமிக்கப்பட்டனர்.மிகக் குறைவாக, மத்திய சென்னை கல்வி மாவட்டத்தில், இரு பணிகளிலும், தலா ஒருவர் நியமிக்கப்பட்டனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...